
தனக்கு மரணம் நேரப்போகிறது என்பதை மங்களூரில் நடந்த விமான விபத்தில் பலியான ஏர்ஹோஸ்டஸ் சுஜாதா சர்வேஸ், தீர்க்க தரிசனமாக உணர்ந்து, "எனக்கு, "குட்பை' சொல்வது எப்போதுமே பிடிக்காது; ஆனால், அதற்கான நேரம் தற்போது வந்துவிட்டதாகவே கருதுகிறேன்' என்று, உறவினர்களுக்கு தகவல் கூறியுள்ளார்.
மங்களூரு விமான நிலையத்தில் கடந்த 22ம் தேதி நிகழ்ந்த ஏர்-இந்தியா விமான விபத்தில், அந்த விமானத்தை இயக்கிய இரு பைலட்கள், ஏர் ஹோஸ்டஸ்கள் உள்ளிட்ட ஆறு ஊழியர்கள் பலியாயினர். இறந்த ஊழியர்களில் ஒருவரான சுஜாதா சர்வேஸ், கடந்த மூன்று ஆண்டுகளாக அப்பணியில் இருந்து வந்தார். இருப்பினும், மோசமான வானிலை கொண்ட குவைத் பகுதியில் அடிக்கடி பறந்து சொல்வதை அவர் விரும்பவில்லை. குழந்தையில் இருந்தே, தான் ஒரு விமானப் பணிப்பெண்ணாக வேண்டும் என்ற தீராத ஆசைக் கொண்டிருந்த சுஜாதா சர்வேஸ், தானாக முயன்று இப்பணிக்கான படிப்பை பெற்று, வேலையிலும் சேர்ந்தார்.
இவரது தந்தை ஒரு குறும்பட இயக்குனர். சகோதரர்களில் ஒருவர் கேமரா மேனாகவும், மற்றொருவர் வக்கீலாகவும் உள்ளனர். ஒரு தங்கை பள்ளியில் படித்து வருகிறார். சுஜாதா சர்வேஸ் மிகவும் வெளிப்படையாக பேசும் ஒரு பெண்ணாக இருந்திருக்கிறார். "தன் படுக்கை அறையில் துணிகள், ஒப்பனை பொருட்கள் வைக்கும் பை, கைப்பை எல்லாம் ஒழுங்கான இடத்தில் வைக்கப்பட்டிருக்கும்' என்பன உள்ளிட்ட சின்ன சின்ன விஷயங்களை கூட மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வார். "விமானத்தில் பறப்பதை மிகவும் அவர் விரும்பினார். ஆனால், துபாயில் இருந்து வந்த விமானப் பயணம் அவருக்கு இறுதிப் பயணமாக அமைந்துவிட்டது. கொடுத்த பணியை மிக சிறப்பாக செய்யக்கூடியவர், விமானப் பணிப் பெண்ணாக வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டவர் சுஜாதா' என்று, அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் கூறுகின்றனர்.
விரைவில் திருமணம் செய்ய இருந்த சுஜாதா சர்வேஸ், குடும்பத்தில் இருந்து பல நாட்கள் தனியாக இருக்க வேண்டியதை நினைத்து வருந்தியுள்ளார். "சுஜாதாவிற்கு கொச்சின் மற்றும் மங்களூரிலேயே பணி கிடைத்தது. மூன்று ஆண்டுகள் வீட்டில் இருந்து வெளியே இருந்தது அவளுக்கு பிடிக்கவில்லை. மும்பைக்கு மாற்றிக் கொண்டு வர வேண்டும் என்று அவள் முயற்சி செய்தாள்; ஆனால், இறுதி வரை அது நடக்கவே இல்லை. "இன்னும் சில நாட்கள் விமானப் பணிப்பெண்ணாக பணி புரிந்து, பணம் சேர்த்துக் கொண்டு, அப்பணியை விட்டுவிட வேண்டும் என்றும், பி.பி.ஓ.,வில் சேர வேண்டும் என்றும் நினைத்தாள்' என்கின்றனர் நெருங்கிய உறவினர்கள்.
துபாயில் இருந்து மங்களூரு செல்லும் விமானத்தில் பறப்பதற்கு முதல் நாள் இரவு, சுஜாதா அனுப்பியுள்ள தகவலில், "எனக்கு, "குட்பை' சொல்வது எப்போதுமே பிடிக்காது; ஆனால், அதற்கான நேரம் தற்போது வந்துவிட்டதாகவே கருதுகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். "சிறுவயது முதலே விமானப் பணிப் பெண்ணாக வேண்டும் என்ற உறுதி சுஜாதாவிடம் இருந்தது' என்று, அவரது சகோதரர் பாபு சர்வேஸ் கூறியுள்ளார். "சுஜாதா தைரியமான பெண், அதனாலேயே அவர் விமானப் பணிப்பெண் வேலையை தேர்வு செய்தார். அவர் தான் குடும்பத்தை தாங்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தார்' என்று, சுஜாதா வீட்டு அருகில் வசிப்பவர்கள் கூறியுள்ளனர்.
சுஜாதாவுடன், தேஜால் கமுல்கர் என்ற விமானப் பணிப் பெண்ணும் இறந்து போனார். மும்பை புறநகரான டோம்பிவல்லி பகுதியில் வசித்தவர் தேஜால் கமுல்கர். 25 வயதான இவர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தான் விமானப் பணிப்பெண் வேலையில் சேர்ந்தார். இறந்து போன துணை பைலட்டான அர்பிந்தர் சிங் அலுவாலியா(40), கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக விமான ஓட்டிய அனுபவம் உள்ளவர்.
இருந்த போதிலும், இவரது அனுபவம் மங்களூரு விமான விபத்தின் போது கைகொடுக்காமல் போனது அவரது துரதிர்ஷ்டமே.
1 comments:
"குட்பை' சொல்வது எப்போதுமே பிடிக்காது; ஆனால், அதற்கான நேரம் தற்போது வந்துவிட்டதாகவே கருதுகிறேன்'
megawum mandhinai gasakkum warthagal.
enna kodumai
Post a Comment