அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

ரோபோ நடத்திவைத்த திருமணம்ரோபோ என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகின்ற இயந்திர மனிதனால் உலகில் முதல் தடவையாக ஒரு திருமணம் நடத்திவைக்கப்பட்டுள்ளது.ஜப்பானின் டோக்கியோ நகரில் இந்த விநோத திருமணத்தை மந்திரங்கள் சொல்லி நடத்திவைத்தது, மினுக்கும் கண்களும், பிளாஸ்டிக் குதிரைவால் கொண்டையும் போட்டிருந்த ஐ ஃபேரி என்ற இயந்திர யுவதி.
ஜப்பானில் அதிவேகமாக வளர்ந்துவரும் ரோபோ உற்பத்தித் தொழில்துறை மூலம் இந்த ஜோடி ஒருவரோடு ஒருவர் பழக நேர்ந்திருந்தது.
இவர்களுக்கு திருமணம் செய்த ஐ ஃபேரி ரோபோவை உருவாக்கியது மணப்பெண் சடோகோ ஷிபாடா வேலைபார்க்கின்ற நிறுவனம் ஆகும்.
"மனிதர்களுடைய அன்றாட வாழ்வின் பல விஷயங்களில் ரோபோக்களுக்கு இடமிருக்க வேண்டும் என்று எப்போதுமே நம்பிவந்துள்ளவள் நான். இந்த அழகான இயந்திர யுவதி என் வாழ்க்கையின் மிக முக்கியமான நிகழ்வுக்கு ஒரு சாட்சியாக இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன்." என்கிறார் மணப்பெண்.
புதிய கணவர் டொமோஹிரோ ஷிபாடா ஒரு பல்கலைக்கழகத்தில் ரோபோடிக்ஸ் எனப்படும் இயந்திர மனிதன் பாடத்துறையில் பாடம் நடத்துகிறார்.
"முதலிலே இருவரும் பழக ஆரம்பிதததற்கு இந்த ரோபோக்கள்தான் காரணம். எனவே ரோபோவை வைத்து திருமணம் செய்துகொள்ள நாங்கள் முடிவெடுத்தோம்." என்கிறார் இந்த மாப்பிள்ளை.


Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.