
விளையாட
57 விதமான விளையாட்டுகளை கொண்டுள்ளது இந்த வலைத்தளம். ஒவ்வொரு விளையாட்டும் வெவ்வேறு விதமான லாஜிக்குகளைக் கொண்டது.
மிகச் சிறிய வலைப்பூ
உலகிலேயே மிகச் சிறிய வலைப்பூ இது. ஒரு ஐகான் அளவே உள்ள இந்த வலைப்பூ, விளையாட்டை அடிப்படையாக கொண்டது.
மிக நீளமான வலைப்பூ
18.939 கிலோ மீட்டர் அதாவது 11.77 மைல் நீளமான வலைப்பூ இது. உலகின் மிக நீளமான வலைப்பூ இது .
சொடுக்காமல்
இந்த வலைப்பூவில் எந்த காரணத்திற்காகவும் சொடுக்க கூடாது. இப்படி உங்கள் மௌசை பயன்படுத்தாமல் மெயில் கூட அனுப்ப முடியும் என்கின்றார்கள்.
வித்தியாசமான கூகுள் சர்ச்
இந்த தளம் விதவிதமான கூகுள் தேடுபொறிக்கான தீம்களை பெற்றுள்ளது. நமக்கு பிடித்தமான ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். இது வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.
சிறந்த தளங்களை கண்டறிய உதவும் தேடுபொறி
நீங்கள் கொடுக்கும் பிரிவில் சிறந்த பத்து தளங்களை வரிசைப் படுத்தி காட்டுகிறது.
இங்கு சொடுக்கவும்
அனிமேசன்
மிக அழகாக அனிமேசனுக்காக வடிவமைக்கப்பட்ட வலைப்பூ இது. இதன் நடுப்பகுதியில் ஓடிடும் உருவங்களை சொடுக்கிப் பாருங்கள். அதன் செய்கைகள் வினோதமாக இருக்கும்.
ஆன்லைன் மியூசியம்
மிக அரிய தளம் இது. உலகத்தில் இருக்கும் சிறந்த மியூசியங்களை இணையப்படுத்தி இருக்கின்றார்கள்.
குடும்பம்
நமது குடும்பத்தினைப் பற்றியும் முற்கால சந்ததியினரைப் பற்றியும் வருங்கால சந்ததிகள் அறிந்து கொள்ள உதவும் தளம்.
2000 நகைச்சுவைகள்
2000 நகைச்சுவை துணுக்குகளைக் கொண்ட வலைப்பூ இது.
பணத்தினை மடிக்கும் கலை
பணத்தினை வைத்துக் கொண்டு பல பொருள்கள் வாங்கிருப்பீர்கள்.என்றாவது மடித்து பார்த்து வித விதமாய் உருவங்களை உருவாக்கியிருக்கீர்களா. இந்த தளத்தைப் பார்த்த பின்பு கண்டிப்பாக நீங்கள் செய்து பார்ப்பீர்கள்.
Programmer or Killer?
இந்த இணையத்தில் காட்டப்படும் நபர்களின் புகைப்படங்களை பார்த்து அவர்கள் கொலைகாரர்களா மென்பொறியாளர்களா என கண்டுபிடிக்க வேண்டும். மிகவும் வினோதமான வலைப்பூ இது.
PhotoshopDisasters
புகைப்படங்களை விளையாட்டிற்காக மாற்றம் செய்து வெளியிட்டுள்ளார்கள். கொஞ்சம் கூர்மையாக நோக்கினால் அவர்கள் செய்துள்ள குறும்புகள் தெரியவரும்.
3 comments:
gd information.
txx niro
welcome anna.
Post a Comment