அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtubeகல்லூரியில் ஒரு மாணவன் தனது   தோழிக்கு(Classmate) கேள்வி பதில் (Q&A) வடிவத்தில் (Format) காதல் கடிதம் (Love letter) எழுதுகின்றான்

என்னுடைய அன்புக்குரிய காதலிக்கு, 
இந்த கீழ் வரும் கேள்விகளுக்கு பதில் அளித்தால்

பிரிவு a க்கு பத்து மார்க்கும்
பிரிவு b க்கு 5 மதிப்பெண்களும்
பிரிவு c க்கு 3 மதிப்பெண்களும் கிடைக்கும்.

1) நீ வகுப்பறையில் நுழையும்பொழுது உன் பார்வைகள் என்னில் வந்து விழுகின்றது ஏனென்றால் ,

a) நீ என்னைக் காதலிக்கின்றாய்
b) என்னைப் பார்க்காமல் உன்னால் இருக்க முடியவில்லை
c) உண்மையில்...நான் உன்னை பார்க்க வைக்கிறேனா..?

2) ஆசிரியர் ஜோக் சொல்லும் பொழுது நீ சிரித்துக்கொண்டே என்னைத் திரும்பிப் பார்க்கிறாய் ஏனென்றால் ,

a) நான் எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்க நீ விரும்புகிறாய்
b) எனக்கு நகைச்சுவை உணர்வு இருக்கிறதா என்று நீ சோதனையிடுகிறாய்
c) என்னுடைய சிரிப்பு உனக்கு கவர்ந்திருக்கிறது

3) நீ வகுப்பறையில் பாடிக்கொண்டிருக்கும் சமயம் நான் உள்ளே நுழைந்தால் நீ பாடுவதை நிறுத்திவிடுவாய் ஏனென்றால் ,

a) எனக்கு முன்னால் பாட நீ வெட்கப்படுகிறாய்.
b) என்னுடைய வருகை நீ பாடுவதை தடுக்கின்றது
c) நீ பாடுவது எனக்கு பிடிக்கவில்லையோ எனப் பயப்படுகிறாய்

4) உன்னுடைய சின்ன வயசுப் புகைப்படத்தை என்னிடமிருந்து நீ மறைக்கிறாய் ஏனென்றால்,

a) நீ வெட்கப்ப்படுகிறாய்
b) நான் ரசிக்கமாட்டேனோ என்று நினைக்கிறாய்
c) எதற்கென்றே தெரியவில்லை


5. வருகின்ற பேருந்தையெல்லாம் விட்டுவிட்டு நீ நேற்று பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தாய் ஏனென்றால் ,

a) நீ எனக்காக காத்திருந்தாய்
b) என்னைப் பற்றிய கனவில் இருந்ததால் நீ என்னைக் கவனிக்கவில்லை
c) எல்லாப் பேருந்துகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது

6. ஒரு மேடான பகுதியில் நீ ஏற முற்பட்டபொழுது நானும் அதே நேரத்தில் எனது நண்பனும் கைகளை நீட்டுகிறோம். நீ எனது நண்பனின் கைகளை பிடிக்கின்றாய் ஏனென்றால்,

a) நான் ஏமாறுவதைக் கண்டு ரசிக்கின்றாய்
b) வெட்கத்தில் நீ என் கையைப் பிடிக்கவில்லை
c) பதில் சொல்லத் தெரியவில்லை..

7. உன்னுடைய பெற்றோர்கள் கல்லூரிகக்கு வந்தபோது நீ என்னை அவர்களிடம் அறிமுகப்படுத்தினாய் ஏனென்றால் ,

a) நான் உன்னுடைய கணவனாகப் போவதால்
b) உன்னுடைய பெற்றோர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்காக
c) சாதாரண அறிமுகம்தான் எந்த வித காரணமுமில்லை

8. ரோஜாப்பூக்கள் தலையில் சூடி வரும் பெண்களை எனக்குப் பிடிக்கும் என்றேன். மறுநாள் நீ தலையில் ரோஜாப்பூக்களோடு வருகிறாய். ஏனென்றால் ,

a) என்னுடைய ஆசையை நிறைவேற்றுவதற்காக
b) உனக்கு ரோஜாப்பூக்கள் பிடிக்கும்
c) தற்செயலாக உனக்கு ரோஜாப்பூக்கள் கிடைத்தது.

9. என்னுடைய பிறந்த நாளில் நான் செல்லுகின்ற ஆலயத்திற்கு நீயும் வருகிறாய்..ஏனென்றால் ,

a) எப்பொழுதும் போல தற்செயலாக நீ அந்த ஆலயம் வருகிறாய்..
b) யாரும் வாழ்த்துவதற்கு முன் நீ என்னை வாழ்த்தவேண்டும் என்பதற்காக
c) உனக்கு இறைபக்தி அதிகம் இருப்பதால் தினமும் ஆலயம் வருகிறாய்.

நீ நாற்பது மதிப்பெண்களுக்கும் மேலாக மதிப்பெண் பெற்றிருந்தால் நீ என்னை விரும்புகிறாய். தயங்காமல் உன் காதலைச் சொல்லிவிடு

நீ முப்பதுக்கும் நாற்பதுக்கும் இடையே மதிப்பெண்கள் பெற்றிருந்தால் உன் மனதில் காதல் மொட்டு விடத் தொடங்கியிருக்கியது. அது எந்த நேரமும் (Blast) வெடிக்கக் கூடும்.

நீ முப்பதுக்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருந்தால். என்னைக் காதலிக்கலாமா வேண்டாமா என்று நீ உனக்குள்ளேயே குழப்பத்தில் இருக்கின்றாய்
உன்னுடைய பதிலுக்காகக் காத்திருக்கின்றேன்.
 

-----------------------------------------------------------------------------
அதற்கு காதலியானவள் அதே கேள்வி பதில் வடிவத்தில் பதில் அளிக்கின்றாள்..

நண்பனே,

கீழ்கண்ட ஆம் அல்லது இல்லை என்ற எனது கேள்விகளுக்கு விடையளி..

1. முதல் பெஞ்சில் யாராவது இருக்கிறார்கள் என்றால் வகுப்பில் நுழையும் மாணவர்களை கவனிப்பது தற்செயலானதுதான்.

ஆம்
இல்லை

2. ஒரு பெண் யாருடைய நகைச்சுவைக்கோ சிரித்து - யா
ரையாவது திரும்பி பார்த்தால் அதற்குப் பெயர் காதலா..?

ஆம்
இல்லை

3. பாடிக்கொண்டிருக்கும் போது பாடல் வரிகள் மறந்து விட்டால் அப்படியே நிறுத்தில விடுவது இயல்புதானே?

ஆம்
இல்லை

4. என்னுடை குழந்தை வயசு புகைப்படத்தை என் பெண் தோழிகளிடம் காட்டும்போது ஆண்மகனான நீ நாகரீகம் கருதி ஒதுங்கிச் செல்ல வேண்டும்..

ஆம்
இல்லை

5. பேருந்து நிலையத்தில் நான் எனது உயிரத் தோழிக்காக காத்திருக்க கூடாதா என்ன..

ஆம்
இல்லை

6. உனது கைகளை பிடிக்காமல் உனது நண்பனின் கையைப் பிடிக்கும்பொழுதே உன்னால் புரிந்து கொள்ளமுடியவில்லையாடா..?

ஆம்
இல்லை


7. நீ என்னுடைய நண்பன் என்று எனது பெற்றோர்களிடம் அறிமுகப்படுத்தக் கூடாதா..?

ஆம்
இல்லை

8. நான் லோட்டஸ் - காலிப்ளவர் - பனானா போல இருப்பதாக கூட நீ கூறியிருக்கின்றாய்தானே?

ஆம்
இல்லை

9. ஓ உனக்கு அன்றுதான் பிறந்த நாளா..? அது எனக்குத் தெரியாது. நான் தினமும் அந்த ஆலயத்திற்கு வருவேன் தெரியுமா..?

ஆம்
இல்லை

இந்த கேள்விகளுக்கெல்லாம் நீ ஆம் என்று பதிலளித்தால் நான் உன்னை காதலிக்கவில்லை என்று அர்த்தம்

நீ இல்லை என்று பதிலளித்தால் உனக்கு காதலைப் பற்றியான உண்மையான அர்த்தம் தெரியவில்லை என்று அர்த்தம்
Post Comment


3 comments:

நியோ said...

என் கல்லூரி நண்பர்களுக்கு பார்வேட் செய்யப் போகிறேன் உங்கள் இடுகையை ...
காதல் நிரம்பி வழிகிறது உங்கள் கேள்விகளில் ...
நன்றி திலிப்

Dileep said...

ஒ அப்படியா.... நியோ
சோ ஸ்டார்ட் மியூசிக்.........
சாரி ஸ்டார்ட் லவ்...

Thushi said...

Waw WAw nice Dileep

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.