அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

பெர்முடா முக்கோண மர்மங்கள்இது சைத்தானின் முக்கோணம் என்றும் அழைக்கப்படுகிறது, என்பது வட அட்லாண்டிக் கடலின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு பிராந்தியமாகும், இந்த பகுதியில் ஏராளமானவிமானங்களும்கப்பல்களும் மனித தவறுகடற்கொள்ளை, எந்திர கோளாறு, அல்லது இயற்கை சீற்றங்கள் இவற்றிற்கு அப்பாற்பட்ட மர்மமான சூழ்நிலைகளில் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது.இந்த மறைதல்களுக்கு அமானுட சக்தி, அதாவது இயற்பியல் விதியை உடைத்து, பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்ட ஜீவன்களின் நடவடிக்கையை காரணமாக பொதுமக்கள் நம்பிக்கை கொள்கிறார்கள்.முக்கோணப் பகுதி

படிமம்:Triangles1.jpg


இந்த முக்கோணத்தின் எல்லைகளில், புளோரிடா நீரிணைப்புபஹாமாஸ் மற்றும் மொத்த கரீபியன் தீவுகள் பகுதி மற்றும் அட்லாண்டிக் கிழக்கிலிருந்து அசோர்ஸ் வரை அடங்கும்; பிறர்வார்ப்புரு:Who அதனுடன் மெக்சிகோ வளைகுடாவையும் சேர்க்கிறார்கள்.பல எழுத்து படைப்புகளில் மிகவும் பிரபலமான முக்கோண எல்லைகளாக இருப்பது,புளோரிடாவின் அட்லாண்டிக் கடலோரப் பகுதியில் ஒரு இடம்; சான் ஜுவான்பூர்டோ ரிகோ; மற்றும் பெர்முடாவின் மத்திய-அட்லாண்டிக் தீவு, விபத்துகளில் அநேகமானவை பஹாமாஸ் மற்றும் புளோரிடா ஜலசந்தியைச் சுற்றிய தெற்கு எல்லைப்பகுதியில் தான் குவியம் கொண்டுள்ளது.

இந்த பகுதி உலகின் மிகவும் அதிகமான கப்பல் போக்குவரத்து பகுதியாக இருக்கிறது, இதன் வழியாக அமெரிக்கா, 
ஐரோப்பா, மற்றும் கரீபியன் தீவுகளில் உள்ள துறைமுகங்களுக்கு தினந்தோறும் கப்பல்கள் கடந்து செல்கின்றன.சொகுசுக் கப்பல்கள் ஏராளமாய் உள்ளன, பொழுதுபொக்கு விமானங்கள் எப்போதும் புளோரிடாவுக்கும் தீவுகளுக்கும் இடையில் போகவும் வரவுமாய் உள்ளன. வடக்கிலிருக்கும் இடங்களில் இருந்து, புளோரிடா, கரீபியன், மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இடங்களுக்கு ஏராளமான வர்த்தக மற்றும் தனியார் விமானங்கள் செல்கின்றன.

முக்கோணக் கதையின் வரலாறு

மூலங்கள்


முக்கோண சிந்தனையை எழுத்தில் வெளிப்படுத்திய பத்திரிகைகளில் வந்த முதல் கட்டுரை என்றால் ஈ.வி.டபிள்யூ. ஜோன்ஸ் செப்டம்பர் 16,1950 இல் அசோசியேடட் பிரஸ் மூலம் வெளியிட்ட செய்தியைத் தான் குறிப்பிட வேண்டும்.இரண்டு வருடங்களுக்கு பின், ஃபேட் இதழ் 'நமது கொல்லைப் புறத்தில் கடல் மர்மம்' என்ற தலைப்பில் ஜார்ஜ் எக்ஸ். சாண்ட் எழுதிய ஒரு சிறு கட்டுரையை வெளியிட்டது,பல விமானங்கள் மற்றும் கப்பல்கள் தொலைந்து போனதை இது எழுதியிருந்தது, பிளைட் 19 என்னும் அமெரிக்க கடற்படையின் டிபிம் அவெஞ்சர் குண்டுவீசும் விமானங்கள் ஐந்து கொண்ட ஒரு கூட்டம் ஒரு பயிற்சி நடவடிக்கையின் போது தொலைந்து போனதும் இதில் அடக்கம். இப்போது மறைவுகள் நிகழும் பிரபலமான முக்கோண பகுதிக்கு வரைபடமிட்டது சாண்டின் கட்டுரை தான்.அமெரிக்கன் லெஜன்இதழ் வெளியிட்ட ஏப்ரல் 1962 இதழில் பிளைட் 19 மட்டும் கொண்டு செய்திக் கட்டுரை வெளியானது.விமான ஓட்டி பின்வருமாறு கூறியதாக அது தெரிவித்தது: "நாங்கள் இப்போது வெள்ளை நீருக்குள் நுழைந்திருக்கிறோம், எதுவும் சரியாக இல்லை.நாங்கள் எங்கிருக்கிறோம் என்பதே எங்களுக்கு தெரியவில்லை, நீர் பச்சையாக இருக்கிறது, வெள்ளை இல்லை".கப்பற்படை விசாரணை குழுவின் அதிகாரிகள் விமானங்கள் "செவ்வாய்க்கு பறந்து போனதாய்" கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.இந்த கட்டுரை தான் அமானுட விஷயங்களை பிளைட் 19 உடன் இணைத்து எழுதப்பட்ட முதல் கட்டுரை, ஆனால் வின்சென்ட் காடிஸ் என்கிற மற்றுமொரு ஆசிரியர் பிப்ரவரி 1964 இல் அர்கோசி இதழில் எழுதும்போது தான், பிளைட் 19 காணாமல் போனதை பிற மர்மமான தொலைதல்களுடன் இணைத்து அவற்றை "மரண பெர்முடா முக்கோணம்", ஆரம்பத்தில் தலைப்பு நம்பிக்கையிழக்கச் செய்யும் நீர்ப்பரப்பு என்கிற வகையில் இருந்தது, என்னும் ஈர்க்கும் தலைப்பின் கீழ் எழுதினார். அடுத்த ஆண்டில் அந்த கட்டுரையை விரிவுபடுத்தி, கண்ணுக்குத் தெரியாத வெளிகள் , என்னும் தலைப்பில் ஒரு விரிவான புத்தகம் ஒன்று எழுதினார்.மற்றவர்களும் தங்களது படைப்புகளைப் பிரசுரித்தனர்: ஜான் வாலஸ் ஸ்பென்சர் (லிம்போ ஆஃப் தி லாஸ்ட் , 1969, ரீப்ரிண்ட்.1973); சார்லஸ் பெர்லிட்ஸ் (தி பெர்முடா டிரையாங்கிள் , 1974); ரிச்சார்டு ஒயினர் (தி டெவில்'ஸ் டிரையாங்கிள் , 1974), மற்றும் பல, எல்லாமே எக்கெர்டினால் கோடிட்டு காட்டப்பட்ட அதே அமானுட விஷயங்களில் கொஞ்சத்தை எடுத்துக் கொண்டன.


இயல்பான விளக்கங்கள்

திசைகாட்டி மாறுதல்கள்பல முக்கோண நிகழ்வுகளில் கூறப்படும் பதப் பிரயோகங்களில் ஒன்று திசைகாட்டி பிரச்சினைகள். அசாதாரணமான காந்த அலைகள் இப்பகுதியில் இருக்கலாம் என்று சிலர் சித்தாந்தப்படுத்தினாலும்,[22]அத்தகைய அலைகள் எதுவும் இருப்பதாக அறியப்படவில்லை.காந்த துருவங்களுடன் தொடர்புபட்ட இயல்பான காந்த மாறுபாடுகளை மட்டும் திசைகாட்டிகள் கொண்டுள்ளன.உதாரணமாக,அமெரிக்காவில் காந்த (திசைகாட்டி) வடக்கும் புவியியல்ரீதியான (உண்மையான) வடக்கும் எங்கு ஒன்றாக அமைந்திருக்கிறது என்றால் விஸ்கோன்சின் தொடங்கி மெக்சிகோ வளைகுடா வரையிலான ஒரு கோட்டிலுள்ள இடங்களில் தான்.கடல்பயணதாரர்களுக்கு இது பல நூற்றாண்டுகளாகத் தெரியும். ஆனால் பொதுமக்களுக்கு அந்த அளவு பொதுஅறிவு இருக்காது என்பதால், அவர்கள் முக்கோணம் போன்ற ஒரு பெரும் பகுதியில் திசைகாட்டி "மாறுவதில்" ஏதோ மர்மம் இருப்பதாக நினைக்கிறார்கள், இயல்பாக அப்படித் தான் இருக்க முடியும்.திட்டமிட்ட அழிவு நடவடிக்கைகள்

திட்டமிட்ட அழிவு நடவடிக்கைகள் இரண்டு வகையாக இருக்கலாம்: போர் நடவடிக்கைகள், கடற்கொள்ளை நடவடிக்கைகள்.எதிரிகளின் பதிவுக் குறிப்புகள் பல சம்பவங்களின் போது சோதிக்கப்பட்டிருக்கின்றன; பல மூழ்கியதற்கு உலகப் போர்களின் போதான சர்ஃபேஸ் ரெய்டர்கள் அல்லது சப்மரைன்கள் காரணமாகக் கூறப்பட்டு பல்வேறு உத்தரவு பதிவு புத்தகங்களில் ஆவணப்பட்டிருக்கின்றன, இந்த வகையினதாகக் கூறப்படும் இன்னும் பல சம்பவங்களுக்கான காரணங்கள் நிரூபிக்கப்படாதவை.யுஎஸ்எஸ் சைக்ளோப்ஸ் 1918 இல் தொலைந்தது, அதேபோல் இரண்டாம் உலகப் போரில் அதன் சகோதர கப்பல்களான புரோட்டீஸ் மற்றும் நெரெயஸ் ஆகியவை தொலைந்தது இதற்கெல்லாம் நீர்மூழ்கிக் கப்பல்கள் காரணமாய் கூறப்பட்டது, ஆனால் இத்தகைய தொடர்புகள் எதுவும் ஜெர்மனி பதிவேடுகளில் காணப்படவில்லை.ஒரு கப்பல் அல்லது சிறு படகை நடுக்கடலில் முற்றுகையிட்டு கொள்ளையிடுவது தான் கடற்கொள்ளை என்று வரையறுக்கப்படுகிறது, இது இன்று வரை நடந்து வரும் ஒரு நடவடிக்கையாகும்.சரக்கு திருடும் கடற்கொள்ளை மேற்கு பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ரொம்பவும் சாதாரணமானமாக நிகழ்கிறது, அதே சமயத்தில் மருந்து கடத்தல்காரர்கள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு சொகுசுப் படகுகளை கடத்துகிறார்கள், கரீபியனில் ஊழியர்கள் மற்றும் படகுகள் கடத்தலிலும் இவர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம்.கரீபியனில் கடற்கொள்ளை என்பது சுமார் 1560கள் தொடங்கி 1760கள் வரை சாதாரண நிகழ்வுகளாக இருந்தது, எட்வர்டு டீச் பிளாக்பேர்டு மற்றும் ஜீன் லபிதே ஆகியோர் பிரபல கடற்கொள்ளையர்களில் அடக்கம்.வளைகுடா நீரோடை

வளைகுடா நீரோடை என்பது மெக்சிகோ வளைகுடாவில் தோன்றி, பின் புளோரிடா நீரிணைப்பு வழியாக, வட அட்லாண்டிக் கடல் வரை செல்லும் கடல் ஓடையாகும்.சாரத்தில், இது கடலுக்குள் இருக்கும் ஒரு ஆறாகும், ஒரு ஆறு போலவே, இது மிதக்கும் பொருட்களை சுமந்து செல்ல முடியும், சுமந்து செல்கிறது.இது சுமார் வார்ப்புரு:Convert/m/s வரையிலான மேற்பரப்பு வேகம் கொண்டுள்ளது. சிறு விமானம் நீரில் விழுந்து விட்டாலோ அல்லது ஏதேனும் படகு எந்திரக் கோளாறினால் நின்று விட்டாலோ அது தெரிவிக்கப்பட்ட இடத்தில் இருந்து நீரோடை வழியே சுமந்து செல்லப்படும், இது தான் கேபின் க்ரூசரான விட்ச்கிராஃப்டு க்கு டிசம்பர் 22, 1967 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது, கடற்கரையில் இருந்து ஒரு மைல் (1.6 கிமீ) தூரத்தில் மியாமி மிதவை குறியீடு அருகே எஞ்ஜின் பழுதடைந்ததாக கூறப்பட்டது, ஆனால் கடலோரக் காவல்படை கப்பல் அங்கு சென்றபோது அது அந்த இடத்தில் இல்லை.
படிமம்:Gulfstream1.jpg


மீத்தேன் ஹைட்ரேட்டுகள்


படிமம்:Gas hydrates 1996.jpg


சில தொலைதல்களுக்கான விளக்கம் கரையோரப் பகுதி அடுக்குகளில் பரந்த மீத்தேன் ஹைட்ரேட் (இயற்கை எரிவாயுவின் ஒரு வடிவம்) இருப்பதை மையமாகக் கொண்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள், நீரின் அடர்த்தியை குறைப்பதினால் குமிழிகள் ஒரு ஸ்கேல் மாடல் கப்பலை மூழ்கச் செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கின்றன; இதனைத் தொடர்ந்து எழும் எந்த உடைந்த பாகங்களும் துரிதமாக வளைகுடா நீரோடையால் சிதறச் செய்யப்படுகின்றன.திடீர் மீத்தேன் வெடிப்புகள் (சில சமயங்களில் "சேறு எரிமலைகள்" என அழைக்கப்படுகின்றன) கப்பல்கள் மிதப்பதற்கு தேவையான மிதவைத் தன்மையை வழங்க முடியாத சகதி நீர் பிராந்தியங்களை உருவாக்கலாம் என்கிற ஒரு அனுமானம் வைக்கப்படுகிறது.இது உண்மையாய் இருந்தால், ஒரு கப்பலை சுற்றி உருவாகும் இத்தகையதொரு பகுதி கப்பல் வெகு துரிதமாக எச்சரிக்கையின்றி மூழ்க காரணமாகி விடும்.

USGS வெளியீடுகள், கடலுக்கடியான ஹைட்ரேட்டுகள் உலகெங்கிலும் பெரும் சேகரங்களாக இருப்பதாக கூறுகிறது, தென்கிழக்கு அமெரிக்க கடற்கரையை ஒட்டிய ப்ளேக் ரிட்ஜ்பகுதி இதில் அடக்கம். ஆயினும், பெர்முடா முக்கோணப் பகுதியில் கடந்த 15,000 வருடங்களில் எரிவாயு ஹைட்ரேட்டுகளின் பெரும் வெளியீடுகள் எதுவும் இருந்ததாக விவரமில்லை என்று அவர்களது ஆய்வறிக்கைகளில் இன்னொன்று தெரிவிக்கிறது.

கடலுக்கடியில் மீத்தேன் ஹைட்ரேட்டுகள் கொண்டுள்ள மற்ற பகுதிகளில் பெர்முடா முக்கோணம் போன்ற சம்பவங்கள் நிகழவில்லை என்பதும், நீருக்கடியிலான எரிவாயு குமிழ்கள் விமானங்கள் மறைந்து போனதற்குக் காரணமாக முடியாது என்பதும் கருத்தில் கொள்ளத்தக்கது.

குறிப்பிடத்தக்க சம்பவங்கள்

பிளைட் 19


படிமம்:TBF (Avengers) flying in formation.jpg


பிளைட் 19 என்பது டிபிஎம் அவெஞ்சர் குண்டு வீசும் விமானங்களுக்கு பயிற்சியளிக்கும் விமானமாகும், இது டிசம்பர் 5, 1945 அன்று அட்லாண்டிக் மீது பறக்கையில் மறைந்து போனது.போர்க்கப்பலில் இருந்தான விமான பாதை, கிழக்கே 120 மைல், வடக்கே 73 மைல்கள் பின் மீண்டும் இறுதியாக 120 மைல் பயணத்தில் கடற்படை தளத்திற்கு திரும்புவது என்று திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் அவை திரும்பவில்லை.விமானம் அசாதாரண நிகழ்வை சந்தித்தது என்றும் இயற்கைக்கு மீறிய திசைகாட்டி அளவுகளைக் காட்டியதாகவும், விமானம் பறந்தது ஒரு அமைதியான நாளில் அனுபவப்பட்ட விமானியான லெப்டினென்ட். சார்லஸ் கரோல் டெய்லரின் மேற்பார்வையில் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது."புரியாத காரணங்கள் அல்லது விளைவுகளால்" நிகழ்ந்ததாக கடற்படை அறிக்கை இந்த விபத்து குறித்து கூறுவது குழப்பத்தை அதிகப்படுத்துவதாக இருக்கிறது.டெய்லரின் தாய் தனது மகனின் மரியாதையைக் காப்பாற்றுவதற்காகவே, அவர்களை "புரியாத காரணங்கள்" என்று எழுதச் செய்ததாக நம்பப்படுகிறது, உண்மையில் டெய்லர் அவர் இருந்ததாக நினைத்த இடத்தில் இருந்து வடமேற்கில் 50 கிமீ தூரத்தில் இருந்தார்.

இந்த மர்மத்திற்கு மர்மம் சேர்க்கும் விதமாக, காணாமல் போன கப்பலுக்கு உதவ 13 பேர் கொண்ட தேடுதல் மட்டும் மீட்புக்கான கப்பல்படை விமானம் அனுப்பப்பட்டது, ஆனால் அதற்குப் பின் அந்த விமானத்தில் இருந்தே ஒரு தகவலும் இல்லை. பின்னர், புளோரிடா கடற்கரையில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு கப்பலில் இருந்தவர்கள் இந்த விமானம் ரோந்தில் இருந்திருக்கக் கூடிய அந்த தருணத்தில் ஒரு வெடிப்பு நிகழ்ந்ததை கண்டதாக தெரிவித்தனர்.இந்த சம்பவத்தின் இந்த கதையில் அடிப்படை உண்மைகள் துல்லியமானவையாக இருக்கின்றன, ஆனால் முக்கியமான சில விவரங்கள் இல்லாமலிருக்கின்றன.சம்பவம் நடந்து முடிந்த சமயம் காலநிலை கொந்தளிப்பானதாக மாறியிருந்தது, அத்துடன் டெய்லருக்கும் பிளைட் 19 இன் பிற விமானிகளுக்கும் இடையில் நடந்த உரையாடல்கள் குறித்த கடற்படை அறிக்கைகள் மற்றும் எழுதப்பட்ட பதிவுகள் காந்த பிரச்சினைகள் இருந்ததாய் சுட்டிக் காட்டவில்லை.


மேரி செலஸ்டி1872 ஆம் ஆண்டில் 282 டன்கள் கொண்ட இருதூண்கப்பல் மேரி செலஸ்டி மர்மமான முறையில் தொலைந்து போனது பல சமயங்களில் தவறாக முக்கோணத்துடன் இணைத்து கூறப்படுகிறது, கப்பல் போர்ச்சுகல் கடலோரத்தில் தொலைந்திருந்தது.இந்த சம்பவம் அநேகமாக மேரி செலஸ்டி என்னும் அதே பெயரிலான 207 டன் துடுப்பு ஸ்டீமர் கப்பல் 1864 ஆம் ஆண்டில் செப்டம்பர் 13 இல் பெர்முடா கடலோரத்தில் தரை தட்டி பின் விரைவாக நீருக்குள் மூழ்கிய சம்பவத்துடன் குழப்பப்பட்டிருக்கலாம்.  இந்த சம்பவம் குறித்த பல "உண்மைகள்" உண்மையில் மேரி செலஸ்டி என்னும்ஆர்தர் கோனான் டாயிலின் "ஜே. ஹபகுக் ஜெப்சனின் வாக்குமூலம்" (உண்மையான மேரி செலஸ்டி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் கற்பனை சேர்க்கப்பட்டது)என்னும் சிறுகதையில் வரும் கற்பனைக் கப்பலில் இருந்து உதித்தவை என்று குசெ குறிப்பிடுகிறார்.


யுஎஸ்எஸ் சைக்ளோப்ஸ்அமெரிக்க கடற்படை வரலாற்றில் போர் சம்பந்தமில்லாத வகையில் மிக அதிகமான உயிரிழப்பு நிகழ்ந்த சம்பவம் , 1918, மார்ச் 4 க்கு பிந்தையதொரு காலத்தில் பார்படோஸ் தீவுகளில் இருந்து கிளம்பியலெப்டினென்ட். கமாண்டர் ஜி.டபிள்யூ வோர்லி தலைமையிலான யுஎஸ்எஸ் "சைக்ளோப்ஸ்" ஒரு சுவடும் இல்லாமல் தனது 309 கப்பல் ஊழியர்களுடன் காணாமல் போன சம்பவமாகும்.எந்த ஒரு ஒற்றை கருத்திற்கும் வலுவான ஆதாரமில்லை எனினும், பல்வேறு சுதந்திரமான கருத்துகள் உலவுகின்றன, சிலர் புயல் காரணம் என்கிறார்கள், சிலர் எடையால் மூழ்கியிருக்கலாம் என்கிறார்கள், இன்னும் சிலர் இந்த இழப்புக்கு போர்க்கால எதிரி நடவடிக்கை தான் காரணம் என்கிறார்கள்.


கரோல் ஏ. டீரிங்படிமம்:Deering2.jpg


1919 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஐந்து கலக்கூம்புகள் கொண்ட பாய்கரக் கப்பலான கரோல் ஏ. டீரிங் வடக்கு கரோலினாவின் கேப் ஹட்டராஸ் அருகே டயமண்ட் ஷோல்ஸில், ஜனவரி 31, 1921 வாக்கில் அநாதையாய் முழுக்க தரை தட்டிக் கிடந்தது.அந்த சமயத்தின் வதந்திகளும் இன்ன பிறவும் டீரிங் கடற்கொள்ளையின் ஒரு பலியாகச் சுட்டிக்காட்டின, மருந்து கடத்தல் தடை சமயத்தில் சட்டவிரோதமாக மதுபானம் கடத்தப்பட்டதுடன் இது தொடர்புபட்டிருக்கலாம், அத்துடன் ஏறக்குறைய அதே சமயத்தில் காணாமல் போன எஸ்.எஸ்.ஹெவிட் என்னும் இன்னொரு கப்பலுடனும் தொடர்புபட்டிருக்கலாம் என்று அவை தெரிவித்தன.சில மணி நேரங்களுக்குப் பிறகு, வெளிச்சக் கப்பலின் அருகில் உலவிய அநாமதேய படகு ஒன்று டீரிங் கின் பாதையிலேயே பயணித்ததோடு, வெளிச்சக் கப்பலின் அனைத்து சமிக்ஞைகளையும் புறக்கணித்தது.இந்த மர்ம கப்பல் ஹெவிட் டாக இருக்கலாம் என்றும், அது தான் அநேகமாக டீரிங் ஊழியர்கள் காணாமல் போனதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது.

ஏராளமான சம்பவங்கள் துல்லியமற்ற தகவல்களாக இருந்திருக்கின்றன அல்லது பின்னர் வந்த ஆசிரியர்களால் சேர்த்துக்கட்டி எழுதப்பட்டனவாக இருக்கின்றன என்பதை காட்டும் குறிப்பிடத்தக்க ஆவணச் சான்றுகள் உள்ளன, அத்துடன் இந்த காணாமல் போன சம்பவங்களின் எண்ணிக்கையும் இயல்பும் கடலின் வேறு எந்த பகுதிக்கு ஒத்ததாகவே இருக்கிறது.Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.