அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube""டுவென்டி-20' உலககோப்பையில், ஆப்கானிஸ்தானை குறைத்து மதிப்பிட வேண்டாம்,'' என, இந்திய அணி வீரர்களுக்கு தோனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வெஸ்ட் இண்டீசில் இன்று மூன்றாவது "டுவென்டி-20' உலககோப்பை போட்டிகள் துவங்குகின்றன. குரூப் "சி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் போட்டியில் நாளை ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. இப்போட்டி குறித்து இந்திய கேப்டன் தோனி கூறியது:
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை பயிற்சி போட்டி போல கருத மாட்டேன். எதிரணிகளை எப்போதும் நான் குறைவாக மதிப்பிடுவது கிடையாது. எந்த அணியாக இருந்தாலும் அதை வீழ்த்துவதே எனது நோக்கமாக இருக்கும். ஆப்கானிஸ்தான் வீரர்களின் செயல்பாடுகள் பற்றி அதிகம் தெரியாது. இது ஒருவகையில் நல்லது தான். அவர்களைப் பற்றி அறிந்திருந்தால், அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும். இந்திய அணியின் செயல்பாடு, உலகின் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சிறப்பாகவே இருக்கும். இதனால் இந்திய வீரர்கள் ஆப்கானிஸ்தானை மிகவும் எச்சரிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும். உலககோப்பை பயிற்சி போட்டிகளில் பங்கேற்காதது, இந்திய அணிக்கு பாதிப்பாக அமையாது. ஏனெனில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஐ.பி.எல்., போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் விளையாடியுள்ளனர். இந்த அனுபவமே போதும். ஒரு சில நாட்கள் கிடைத்த ஓய்வு, புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. இன்று அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபடுவர்.
யுவராஜ் அசத்துவார்:
காயம் காரணமாக சேவக் இடம் பெறாதது பின்னடைவு இல்லை. அவருக்குப் பதிலாக திறமையான வீரர்களை தேர்வு செய்துள்ளோம். தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை அவர்கள் நல்ல முறையில் பயன்படுத்துவார்கள் என நம்புகிறேன். அணியின் முக்கிய வீரர் யுவராஜ். உலககோப்பையில் அவர் அசத்துவார் என எதிர்பார்க்கிறேன். அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ், ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் படைத்தவர். பவுலிங்கிலும் நம்பிக்கை அளிக்கும் யுவராஜ், ஆல்-ரவுண்டராக நம்பிக்கை அளிப்பார்.
அனுபவம் உண்டு:
வெஸ்ட் இண்டீசில் இதற்கு முன் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி உள்ளோம். இதனால் இங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப, மாற்றம் அடைவது எளிது. இதனால் ஆடுகளங்கள் குறித்து எந்தக் கவலையும் இல்லை.
கடுமையான போட்டி:
உலககோப்பை தொடரில் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கிறேன். "டுவென்டி-20' போட்டிகளில் ஒரு ஓவரின் 6 பந்துகளும் மிகவும் முக்கியம். ஒவ்வொரு ரன் மற்றும் கேட்சுகளை பிடிப்பதும், விட்டுவிடுவதும் திருப்பு முனை ஏற்படுத்தும். இதனால் மிகவும் எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும். இவ்வாறு தோனி தெரிவித்தார்.

Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.