அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

Cameron White slammed five sixes to power Australia's fightback


இலங்கைக்கு எதிரான "டுவென்டி-20 உலக கோப்பை "சூப்பர்-8 போட்டியில், ஆஸ்திரேலிய அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு செல்வது ஏறக்குறைய உறுதியானது.

மூன்றாவது "டுவென்டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது. இதன் "இ பிரிவு "சூப்பர்-8 போட்டியில் இலங்கை, ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இரு அணிகளும் தங்கள் முதல் போட்டியில் வென்று இருந்தது. இதில் வெற்றி பெறும் அணி, அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யலாம் என்ற நிலையில், "டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், பேட்டிங் தேர்வு செய்தார்.
அதிர்ச்சி துவக்கம்:

ஆஸ்திரேலிய அணிக்கு இம்முறையும் வார்னர், வாட்சன் துவக்கம் கொடுத்தனர். மாத்யூஸ் வீசிய முதல் ஓவரிலேயே வாட்சன், ஒரு ரன்னில் போல்டானார். வெலகேதரா பந்தில் அடுத்தடுத்து 2 பவுண்டரி விளாசிய ஹாடின், 15 ரன்கள் எடுத்தார்.
ரந்திவ் அசத்தல்:


இந்நிலையில் ரந்திவ், சுழலில் அசத்தினார். வார்னர் (9), டேவிட் ஹசி (0) இருவரையும் இவர் அடுத்தடுத்து வீழ்த்தினார். நீண்ட நேரம் போராடிய கேப்டன் கிளார்க்கும் (14), ரந்திவ்விடம் போல்டானார்.

ஒயிட் அபாரம்:
இந்நிலையில் ஜோடி சேர்ந்த காமிரான் ஒயிட், மைக்கேல் ஹசி அணியை சரிவில் இருந்து மீட்டனர். மெண்டிஸ் ஓவரில் சிக்சர், பவுண்டரி அடித்த ஒயிட் அரைசதம் கடந்தார். பின் வெலகேதிரா ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்சர் விளாசினார். மறுமுனையில் மைக்கேல் ஹசி, மலிங்காவின் ஓவரில் 3 பவுண்டரி அடித்து மிரட்டினார்.
கடைசி 5 ஓவர்களில் இந்த ஜோடி 69 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு, 168 ரன்கள் எடுத்து இருந்தது. ஒயிட் 85, மைக்கேல் ஹசி 39 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

"டாப் ஆர்டர் சரிவு:
இலங்கை அணிக்கு ஜெயவர்தனா, ஜெயசூர்யா மோசமான துவக்கம் கொடுத்தனர். நானஸ் பந்தில் சிக்சர் அடித்த ஜெயவர்தனா (9), அவரிடமே சிக்கினார். கேப்டன் சங்ககராவும் (2) நிலைக்கவில்லை. ஜெயசூர்யா இம்முறையும் 5 ரன்னில் திரும்பினார்.

ஜான்சன் அசத்தல்:
பின் தில்ஷன், மாத்யூஸ் ஜோடி இணைந்து, அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர். வாட்சன் ஓவரில் பவுண்டரி, சிக்சர் என விளாசிய தில்ஷன் (20), மாத்யூஸ் (8) இருவரும் ஜான்சனின் ஒரே ஓவரில் அவுட்டாகினர்.

இலங்கை தோல்வி:
கைகொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கபுகேதிரா (12), ஸ்மித் சுழலில் சரணடைந்தார். ரந்திவ் (2) ரன் அவுட்டாக, இலங்கை அணியின் தோல்வி உறுதியானது. மற்ற வீரர்கள் ஏமாற்ற இலங்கை அணி, 16.2 ஓவரில் 87 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 81 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
"சூப்பர்-8 சுற்றில் இந்தியா, இலங்கை அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு செல்வது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.


Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.