அற்புதமான சூர்ய அஸ்தமனக்காட்சியை கண்டு ரசிக்கும் மனம்
யாருக்கு தான் இல்லாமல் போகும். இப்படி சூர்ய அஸ்தமனக்காட்சியை வெப்கேமில்
கண்டு ரசித்துக்கொண்டிருந்த பெண்மணி ஒருவர் உரையும் கடலில் சிக்கித்தவித்த
ஒருவரை காப்பாற்ற உதவியிருக்கிறார்,ஜெர்மனியின் தெற்கு பகுதியில்
அந்த பெண்மணி வசித்து வருகிறார்.
அந்நாட்டின் வடக்கு பகுதியில் செயின்ட்
பீட்டர் ஆர்டிங் என்றொரு கடற்கரை நகரம் இருக்கிறது.
கடற்கரை ரிசார்ட்டுகளூக்கு பெயர் பெற்ற இந்த நகரம் தான்
கெர்மனியிலேயே அதிக சுற்றுலா பயணிகளை கவரும் கடற்கரையாக கருதப்படுகிறது.
இங்குள்ள ரிசார்ட்டுகளில் இருந்து சூர்ய அஸ்தமனத்தை கண்டு களிப்பது
கண்கொள்ள காட்சியாக புகழப்படுகிறது.
இதற்காகவே வந்து குவியும் சுற்றுலா பயணிகள் உள்ளனர். சூர்ய
அஸ்தமனம் அற்புதமானது என்றாலும் கொஞ்சம் ஆபத்தானது.சூரியன் மறையும்
நேரம் நெருங்கியதுமே கடற்கரையின் குணமே மாறிவிடும் என்று
கூறப்படுகிறது.
திடிரென இருள் சூழ்ந்து கடற்கரையே கண்ணுக்கு புலப்படாமல்
போய்விடுமாம். அதிலும் கடற்கரை பனியில் உறையத்துவங்குவதால் நிலமை
மேலும் சிக்கலாகி விடுமாம்.
எனவே சுற்றுலா பயணிகள் மாலை நேரங்களில் கடற்கரையில் அதிக
நேரம் செலவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுவதும் உண்டு.
ஆனால்
சூர்ய அஸ்தமன அழகால் உந்திதள்ளப்படும் பலர் ஆபத்தை
பொருட்பாடுத்தாமல் கடற்கரையிலேயே காத்திருப்பதும் உண்டு.
இப்படிதான சமீபத்தில் 40 வயது மனிதர் ஒருவர் சூர்ய
அஸ்தமனத்தை ப்டம் எடுப்பதற்காக காமிராவோடு காத்திருந்தார்.
அந்த அற்புத காட்சியை கிளிக் செய்துவிட்டாலும் அதன் பிறகு
உரைந்து கிடந்த பனிக்கட்டி மீது சிக்கி கொண்டார். அங்கிருந்த
பார்த்தால் கடற்கரை கண்ணில் படவே இல்லை.பதறிப்போன மனிதர்
உதவிக்கு தவித்திருக்கிறார். ஆனால் அருகாமையில் யாருமே இல்லாத்தால்
மேலும் தவித்து கடைசியில் தனது காமிராவை கொண்டு பிளாஷ் அடித்து
உதவிக்கு செய்கை செய்துள்ளார்.
வெளிச்சம் மங்கத்துவங்கி விட்ட ஆளற்ற கடற்கரையில்
உயிருக்கு போராடும் ஒருவர் காமிராவில் பிளாஷ் அடிக்கும் காட்சி எப்படி
இருந்திருக்கும் நினைத்துப்பாருங்கள். அவரது அபயக்குரல் யார்
காதிலும் விழாமலேயே போயிருக்கும்.
ஆனால் நல்ல வேளையாக பெண்மணி ஒருவர் தனது வீட்டில்
அமர்ந்த படி கம்ப்யூட்டர் மூலம் அந்த சூர்ய அஸ்தமனக்காட்சியை
கண்டு களித்துக்கொண்டிருந்தார். நகர நிர்வாகம் வெப்கேம் மூலம்
கடற்கரை காட்சியை பதிவு செய்து இண்ட்நெர்நெட் வழியே கணச்செய்து
வருகிறது.
சூர்ய அஸ்தமன அழகில் மூழ்கியிருந்த அந்த பெண்மணி காமிரா
பிளாஷ் வெளிச்சம் மீன்னுவதை பார்த்து யாரோ அபயக்குரல் கொடுப்பதை
புரிந்து கொண்டு உடனே அதிகாரிகளூக்கு தகவல் கொடுத்தார்.
அதிகாரிகளும் விரைந்து சென்று அவரை காப்பாற்றியுள்ளனர்.
0 comments:
Post a Comment