அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

இந்தியா வெற்றிக்கு - 340 ரன்கள்


Jacques Kallis celebrates his third century of the series

கேப்டவுன் டெஸ்டில் காலிஸ் மீண்டும் சதம் அடிக்க, தென் ஆப்ரிக்க அணி இக்கட்டான நிலையில் இருந்து தப்பியது. இந்திய பவுலர்கள் சொதப்பியதால், தொடரை வெல்லும் வாய்ப்பு கை நழுவியது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடக்கிறது.
முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 362, இந்தியா 364 ரன்கள் எடுத்தன. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், தென் ஆப்ரிக்க அணி தனது முதல் இன்னிங்சில், 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்திருந்தது.


ஹர்பஜன் அபாரம்:
நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. ஆடுகளம் சுழலுக்கு கைகொடுக்கும் என்பதால் இரண்டாவது ஓவரிலேயே ஹர்பஜனை அழைத்தார் தோனி. இதற்கு நல்ல பலன் கிடைத்தது. பீட்டர்சன்(22), ஹர்பஜன் சுழலில் சிக்கினார். ஆம்லாவும்(2), ஹர்பஜன் "வலையில்' வீழ்ந்தார்.

Harbhajan Singh celebrates dismissing Hashim Amla

வீணான வாய்ப்பு:
நீண்ட நேரம் தாக்குப்பிடித்த டிவிலியர்ஸ் (13) குறைந்த ரன்னுடன் நடையை கட்டினார். பிரின்ஸ் (22), விரைவில் திரும்ப, 130 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது தென் ஆப்ரிக்கா. இப்படிஅடுத்தடுத்து விக்கெட் சரிந்த நிலையில், தென் ஆப்ரிக்காவை குறைந்த ரன்களுக்கு சுருட்டிவிட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஹர்பஜன் தவிர, மற்ற பவுலர்கள் எதிர்பார்த்த அளவு சோபிக்காததால், பொன்னான வாய்ப்பு வீணானது.

காலிஸ் உறுதி:
வலது நெஞ்சில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் களமிறங்கிய காலிஸ், தூணாக நின்று ரன்கள் சேர்த்தார். இவருக்கு பவுச்சர் நல்ல "கம்பெனி' கொடுக்க, ஸ்கோர் 200 ஐ தாண்டியது. இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்த நிலையில், பவுச்சர் (55), சச்சின் பந்தில் அவுட்டானார். ஸ்டைன் 32 ரன்கள் எடுத்தார். காலிஸ், டெஸ்ட் அரங்கில் 40 வது சதம் அடித்தார். இப்போட்டியில் காலிஸ் அடித்த இரண்டாவது சதம் இது. மார்கல் 28, டிசோட்சபே 8 ரன்கள் எடுத்தனர்.
நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 341 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. காலிஸ் (109) அவுட்டாகாமல் இருந்தார்.
இந்தியா சார்பில் சுழலில் அசத்திய ஹர்பஜன் 7 விக்கெட் வீழ்த்தினார்.

"டிரா' செய்யுமா?
இன்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள். இந்தியா வெற்றி பெற, இரண்டாவது இன்னிங்சில் 340 ரன்கள் தேவைப்படுகிறது. ஒரே நாளில் இந்த இலக்கை எட்டுவது கடினம் என்பதால், இந்திய பேட்ஸ்மேன்கள் உறுதியாக போராடினால், போட்டியை "டிரா' செய்யலாம். 

ஸ்கோர் போர்டு
முதல் இன்னிங்ஸ்
தென் ஆப்ரிக்கா    362
இந்தியா    364
இரண்டாவது இன்னிங்ஸ்
தென் ஆப்ரிக்கா
ஸ்மித்--எல்.பி.டபிள்யு.,(ப)ஹர்பஜன்    29(47)
பீட்டர்சன்-எல்.பி.டபிள்யு.,(ப)ஹர்பஜன்    22(47)
ஹாரிஸ்-எல்.பி.டபிள்யு.,(ப)ஹர்பஜன்    0(8)
ஆம்லா(ப)ஹர்பஜன்    2(11)
காலிஸ்-அவுட் இல்லை-    109(240)
டிவிலியர்ஸ்(ப)ஜாகிர்    13(58)
பிரின்ஸ்(கே)ஸ்ரீசாந்த்(ப)இஷாந்த்    22(35)
பவுச்சர்-எல்.பி.டபிள்யு.,(ப)சச்சின்    55(82)
ஸ்டைன்(கே)சப்-முரளி விஜய்(ப)ஹர்பஜன்    32(48)
மார்கல்(கே)ஸ்ரீசாந்த்(ப)ஹர்பஜன்    28(45)
டிசோட்சபே(கே)சேவக்(ப)ஹர்பஜன்    8(3)
உதிரிகள்    21
மொத்தம் (102 ஓவரில் ஆல் அவுட்)    341
விக்கெட் வீழ்ச்சி: 1-50(ஸ்மித்), 2-----52(ஹாரிஸ்), 3-53(பீட்டர்சன்), 4-64(ஆம்லா), 5-98(டிவிலியர்ஸ்), 6-130(பிரின்ஸ்), 7-233(பவுச்சர்), 8-287(ஸ்டைன்), 9-333(மார்கல்), 10-341(டிசோட்சபே).
பந்து வீச்சு: ஜாகிர் கான் 20-2-64-1, ஸ்ரீசாந்த் 24-3-79-0, இஷாந்த் சர்மா 18-1-62-1, ஹர்பஜன் 38-1-120-7, சச்சின் 2-0-9-1.
காலிஸ் புதிய சாதனை


கேப்டவுன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் சதம் (161) அடித்த காலிஸ், நேற்று இரண்டாவது இன்னிங்சிலும் சதம் (100*) அடித்து அசத்தினார். தவிர, இரண்டு முறை, இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த முதல் தென் ஆப்ரிக்க வீரர் காலிஸ் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் பாகிஸ்தானுக்கு எதிராக 155, 100* ரன்கள் (2007) எடுத்திருந்தார்.
 


* தவிர, அதிக சதம் அடித்தவர்கள் வரிசையில் காலிஸ் (40), பாண்டிங்கை (39) பின்தள்ளி 2வது இடத்துக்கு முன்னேறினார். முதலிடத்தில் இந்தியாவின் சச்சின் (51) உள்ளார். அடுத்த இரு இடத்தில், தலா 34 சதம் அடித்த கவாஸ்கர் (இந்தியா), லாரா (வெ.இண்டீஸ்) உள்ளனர்.


நன்றி:தினமலர்Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.