அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube




இன்று நான் இணைய தளங்களில் உள்ள செய்திகளை தேடி தேடி படிக்கும் போது ஒரு இணைய தள செய்தி தலைப்பு இவ்வாறு இருந்தது.


“இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்.எதிர்காலம் இதை சொல்லும் வகையில் ஓர் அன்பான வேண்டு கோள் “





அதில் காவலன் பட போஸ்டரை போட்டு போஸ்டருக்கு மேலே அங்குட்டு ஒன்டு இங்குட்டு ஒன்டா இரண்டு கோடு.ஹி..ஹி…அதுதாங்க காவலன் படத்தை புறக்கணிப்போம் என்ற போஸ்டர்.என்னடா திரும்பயும் வேதாளம் முருங்க மரம் ஏறிட்டு.உங்களுக்கு ஞாபகம் இருக்கோ தெரியாது விஜயின் வேட்டைகாரன் படம் வெளியாகுவதற்கு முன்பும் இவ்வாறான ஒரு புறக்கணிப்பு நடந்தது.அப்படத்தை புறக்கணிப்பதற்கான காரணமாக அவர்கள் (புலம்பெயர்...) கூறியது வேட்டைகாரனில் வரும் ஒரு சின்ன தாமரை பாடலில் ரப் பகுதியை இலங்கை பாடகர் இராஜ் பாடி இருந்தார்.அவர் பாடியதால் நாங்கள் அப்படத்தை புறக்கணிக்கின்றோம்.என்ன கொடுமை யோ..ஒரு கலைஞன் என்றால் கிணற்று தவளை போல இருக்காமல் இன்னும் இன்னும் தனது கலைதுறையையில் முன்னேறி செல்லதான் பார்ப்பான்.(இந்தியா சினிமா துறை)அவ்வாறு வந்த ஒரு வாய்ப்பை எவரும் தவறவிடமாட்டார்கள்.


சரி அது பழைய கதை அதன் பிறகு சுறாவிலும் ஏதோ யாழ்நகர் என்ற விடயம் எதிர்ப்பை கிளப்பியது.விஜய் படமென்றாலே ஏதாவது ஒரு பிரச்சனை பட வெளியாக முதலே வந்து கொண்டு இருக்கும்.எங்கடா இன்னும் புகையலயே என்று பார்த்துட்டு இருக்கையில சரவணா….வந்துடங்கயா… வந்துடங்கயா…
ஒன்ட தூக்கி பிடிச்சுடு.இப்போ பிரச்சனை காவலன் விஜய்க்கு இல்ல காவல்காரி அசினுக்கு.பழைய அசின் மட்டர்தான் இப்ப தூக்கி பிடிக்கிறாங்க அசின் இலங்கை சென்று மகிந்த அவரின் மனைவி கூட கொஞ்சி மிஞ்சினத இப்போ காவலன் படத்துடன் லிங்க் பண்ணறாங்க.


அது ஏன் விஜய் படத்துக்கு மட்டும் இவ்வளவு ஆர்ப்பரிப்பு ?


புறக்கணிப்போம் என்று சொல்லறாங்களே அவங்ககிட்ட சில கேள்விகள்.


பாடகி சின்மயி இராஜ்சின் இசையில் அவரின் வழிநடத்தலில் திருடா…என் திருடா… என்ற பாடலை பாடினார்.அதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?அதே பாடகி எந்திரன் படத்தில் கிளிமஞ்சரோ பாடலை பாடினார்.ஏன் நீங்கள் எந்திரன் படத்தை புறக்கணிக்கவில்லை ?





விவேக் ஒப்ராய் இலங்கை சென்று மகிந்தரின் மகன் கூட சுற்றி திரிந்தார். தற்போழுது விவேக் ஒப்ராய் மற்றும் சூர்யா நடித்த ரத்த சரித்திரம் எல்லா திரையரங்கிலும் ஓடிக்கொண்டு இருக்கிறது.அதை ஏன் புறக்கணிக்கவில்லை?



இதுபோன்று நிறைய விடயங்கள் உள்ளது.


அரசியலை சணாக்கியதனமாக அரசியல் மூலமாகவே வெற்றி கொள்ள வேண்டும்.இவ்வாறு கலைஞர்களை புறக்கணிப்பதாலும் விளையாட்டு அணியை புறக்கணிப்பதாலும் ஒரு மண்ணும் நடைபெற போவது இல்லை.


இலங்கை போருக்கு அதிகளவு இராணுவ தளபாடங்களை மறைமுகமாக வழங்கியது இந்திய மத்திய அரசு.புறக்கணிக்க வேண்டுமென்றால் இந்தியா புறக்கணியுங்கள்.இந்தியா செல்வதை தவிர்த்துகொள்ளுங்கள்.உதாரணத்துக்கு இலங்கை பெண்ணை திருமணம் செய்ய வேண்டுமென்றால் அதிகமான புலம்பெயர்ந்தவர்கள் இந்தியா வந்து திருமணத்தை செய்துவி;ட்டு பெண்ணையும் ஸ்போன்சரில் உங்கள் நாட்டுக்கு எடுத்துவிட்டு பிறகு இந்தியாவுக்கு எதிராகவே கோஷம்.(நான் இலங்கை தமிழன்)


ஒருவர் இருவரின் சுயநலத்துகாக அல்லது சுயலாபத்துக்காக ஒன்டுமொத்த புலம்பெயர் மக்களுக்கே அவப்பெயர்.
போர் என்ற அரக்கனால் நம்ஈழம் அழிந்தது போதும்.இனியாவது அது துளிர்விட்டு எழுச்சியடைய இடமளியுங்கள்.



தமிழனுக்குள் ஒற்றுமை இல்லாததால்தான் இவ்வளவு அழிவும்.
தமிழன் எப்போது ஒன்றாக சேருகின்றானோ அப்போதுதான் அவனுக்கு விடிவுகாலம்




நான் விஜய் ரசிகனாக இதை கூறவில்லை தமிழீழ தமிழனாக இதை கூறுகின்றேன்.

அரசியல் பற்றி எழுதவோ கதைக்கவோ எனக்கு பிடிக்காது 
ஆனாலும் அரசியல் பற்றி வாசிப்பேன்.
( இப்போ எழுத வச்சுட்டாங்களே…..)





Post Comment


23 comments:

சி.பி.செந்தில்குமார் said...

1st cut

சி.பி.செந்தில்குமார் said...

>>>>
தமிழனுக்குள் ஒற்றுமை இல்லாததால்தான் இவ்வளவு அழிவும்.
தமிழன் எப்போது ஒன்றாக சேருகின்றானோ அப்போதுதான் அவனுக்கு விடிவுகாலம்





good lines

டிலீப் said...

//சி.பி.செந்தில்குமார் said...
>>>>
தமிழனுக்குள் ஒற்றுமை இல்லாததால்தான் இவ்வளவு அழிவும்.
தமிழன் எப்போது ஒன்றாக சேருகின்றானோ அப்போதுதான் அவனுக்கு விடிவுகாலம்
good lines//

நன்றி சி.பி சார்

ரஹீம் கஸ்ஸாலி said...

தமிழனுக்குள் ஒற்றுமை இல்லாததால்தான் இவ்வளவு அழிவும்.
தமிழன் எப்போது ஒன்றாக சேருகின்றானோ அப்போதுதான் அவனுக்கு விடிவுகாலம்////

முகத்திலறையும் உண்மை

டிலீப் said...

//ரஹீம் கஸாலி said...
தமிழனுக்குள் ஒற்றுமை இல்லாததால்தான் இவ்வளவு அழிவும்.
தமிழன் எப்போது ஒன்றாக சேருகின்றானோ அப்போதுதான் அவனுக்கு விடிவுகாலம்////

முகத்திலறையும் உண்மை//

நன்றி ரஹீம்

Harini Resh said...

//ரசியல் பற்றி எழுதவோ கதைக்கவோ எனக்கு பிடிக்காது
ஆனாலும் அரசியல் பற்றி வாசிப்பேன்.
( இப்போ எழுத வச்சுட்டாங்களே…..)//


Ah supper dileepu neeya ?? waw supper appu supper :)

டிலீப் said...

////அரசியல் பற்றி எழுதவோ கதைக்கவோ எனக்கு பிடிக்காது
ஆனாலும் அரசியல் பற்றி வாசிப்பேன்.
( இப்போ எழுத வச்சுட்டாங்களே…..)//
Ah supper dileepu neeya ?? waw supper appu supper :)//

ஹா...ஹா...ஆப்பு எல்லாம் நம்ம தளபதிக்கு சூப்பு சாப்புற மாதிரி

Nishan Thirumalaisami said...

Super Dilip.. Superb article... Great lines...

டிலீப் said...

//T.Nishan said...
Super Dilip.. Superb article... Great lines...//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நிஷான்

Harini Resh said...

டிலீப் said...
////அரசியல் பற்றி எழுதவோ கதைக்கவோ எனக்கு பிடிக்காது
ஆனாலும் அரசியல் பற்றி வாசிப்பேன்.
( இப்போ எழுத வச்சுட்டாங்களே…..)//
Ah supper dileepu neeya ?? waw supper appu supper :)//

ஹா...ஹா...ஆப்பு எல்லாம் நம்ம தளபதிக்கு சூப்பு சாப்புற மாதிரி


அது "ஆப்பு" இல்ல நான் சொன்னது "அப்பு"

ஸாதிகா said...

திலீப் சார்,//அரசியல் பற்றி எழுதவோ கதைக்கவோ எனக்கு பிடிக்காது
ஆனாலும் அரசியல் பற்றி வாசிப்பேன்.
( இப்போ எழுத வச்சுட்டாங்களே…..)

// வெளுத்துக்கட்டுங்க சார்.ஓட்டும் போட்டு விட்டேன்.

டிலீப் said...

//டிலீப் said...
////அரசியல் பற்றி எழுதவோ கதைக்கவோ எனக்கு பிடிக்காது
ஆனாலும் அரசியல் பற்றி வாசிப்பேன்.
( இப்போ எழுத வச்சுட்டாங்களே…..)//
Ah supper dileepu neeya ?? waw supper appu supper :)//
ஹா...ஹா...ஆப்பு எல்லாம் நம்ம தளபதிக்கு சூப்பு சாப்புற மாதிரி
அது "ஆப்பு" இல்ல நான் சொன்னது "அப்பு//

நன்றி வணக்கம்

டிலீப் said...

//ஸாதிகா said...
திலீப் சார்,//அரசியல் பற்றி எழுதவோ கதைக்கவோ எனக்கு பிடிக்காது
ஆனாலும் அரசியல் பற்றி வாசிப்பேன்.
( இப்போ எழுத வச்சுட்டாங்களே…..)

// வெளுத்துக்கட்டுங்க சார்.ஓட்டும் போட்டு விட்டேன்//

ஹா..ஹா.. ஸாதிகா சார் சொல்லி என்ன கிழவன் ஆக்குறிங்கலே...
எனக்கு இப்போ தான் 20lol

கட்டுரன் கட்டுரன்

Unknown said...

சிவப்பு எழுத்து வசனம்தான் எனது கருத்தும் நண்பா
யார் மீதும் குற்றம் சுமத்துவதால் எந்தப்பயனும் இல்லை

டிலீப் said...

//மகாதேவன்-V.K said...
சிவப்பு எழுத்து வசனம்தான் எனது கருத்தும் நண்பா
யார் மீதும் குற்றம் சுமத்துவதால் எந்தப்பயனும் இல்லை//

கருத்துக்கு நன்றி நண்பா

ஷஹன்ஷா said...

பாஸ்....உவங்க உப்புடிதான்.....அவக்கு விஜய் மட்டும்தான் தெரியும்...மற்றவ பற்றி தெரியா...அதான் எதிர்ப்பு கிளப்பீனம்.....

நீங்க கேட்ட கேள்விகள்..நச்......!

படம் இலங்கையில ஓடும்..வெல்லும்..வெல்ல வைப்பம்...

டிலீப் said...

//“நிலவின்” ஜனகன் said...
பாஸ்....உவங்க உப்புடிதான்.....அவக்கு விஜய் மட்டும்தான் தெரியும்...மற்றவ பற்றி தெரியா...அதான் எதிர்ப்பு கிளப்பீனம்.....
நீங்க கேட்ட கேள்விகள்..நச்......!
படம் இலங்கையில ஓடும்..வெல்லும்..வெல்ல வைப்பம்...//

ஜனகன் உவங்களுக்கு அங்க இருந்து கொக்கரிக்கதான் தெரியும்
இங்க வந்து பார்க்கனும் தமிழ் மக்கள் படுற அவஸ்த்தைய

ம.தி.சுதா said...

என்னமோ நடக்குது நடக்கும்....

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
இலங்கையில் திணறும் காவலன் விநியோகமும் யாழ்ப்பாணத்து எதிர்ப்பும்

டிலீப் said...

//ம.தி.சுதா said...
என்னமோ நடக்குது நடக்கும்....
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
இலங்கையில் திணறும் காவலன் விநியோகமும் யாழ்ப்பாணத்து எதிர்ப்பும்//

நடக்கட்டும் நடக்கட்டும்

உங்களுள் ஒருவன் said...

//அரசியலை சணாக்கியதனமாக அரசியல் மூலமாகவே வெற்றி கொள்ள வேண்டும்.இவ்வாறு கலைஞர்களை புறக்கணிப்பதாலும் விளையாட்டு அணியை புறக்கணிப்பதாலும் ஒரு மண்ணும் நடைபெற போவது இல்லை.//

இதுவம் ஒரு அரசியல் சாணக்கியம் தான் நண்பா.... ஒரு நாட்டை மாற நாடுகளை இருந்து பிரிக்க, அவர்களின் அதிகார மேதாவிதனத்தை கட்டுபடுத்த, அவர்களை பணிய வைக்க, அந்த நாட்டின் பொருள்கள், கலை, விளையாடு வீரர்கள், , வணிகம், அவர்களின் வெளிநாட்டு உருவ்களை துண்டிக வேண்டும்.... இங்கு நடப்பதும் அது தான்

உங்களுள் ஒருவன் said...

//இலங்கை போருக்கு அதிகளவு இராணுவ தளபாடங்களை மறைமுகமாக வழங்கியது இந்திய மத்திய அரசு.புறக்கணிக்க வேண்டுமென்றால் இந்தியா புறக்கணியுங்கள்//

இந்தியா வை புறகணிக்க வேண்டும் என்பது அல்ல... அந்த போருக்கு உதவிய, கண்டனம் தெரிவிக்க மறுத்த, மறைமுக அதரவு குடுத்த, பதவிக்காக தன் சொந்த மக்களுக்கு துரோகம் செய்தவர்களை, புறகணிக்க வேண்டும், அவர்களை போர் குற்றவளியாக பிரகடனம் பண்ணி, உலக நிதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.... தண்டனை பெற்று குடுக்க வேண்டும்

//ஒருவர் இருவரின் சுயநலத்துகாக அல்லது சுயலாபத்துக்காக ஒன்டுமொத்த புலம்பெயர் மக்களுக்கே அவப்பெயர்.//

இது ஒருவர் இருவர் சுயநலத்துக்காக வந்த போராட்டம் அல்ல, ஒத்து மொத தமிழ் மக்களுக்க நடந்த, நடக்கும், நடக்க போகும் போராட்டம்,.....

உங்களுள் ஒருவன் said...

//அது ஏன் விஜய் படத்துக்கு மட்டும் இவ்வளவு ஆர்ப்பரிப்பு ?//

நடிக்க வந்த உடன், அடுத்த முதல்வர் நான் தான், என்று வரும் கத்துக்குட்டி நடிகர்களுக்கு என்று மட்டும் அல்ல... அரசியல் கனவோடு வரும் யாருக்கும் .. நங்கள் எப்பொழுதும் அதரவு தெரிவிக்க மாட்டோம், மக்களுக்கு நல்லது செயுங்க... நீங்க பதவிக்க அலைய வேண்டாம், நாங்களா நீங்கள் தகுதி ஆனவராக இருந்தால், நாங்களா பொறுப்பை தருவோம் , தமிழ் இன துரோகி ஆன அன்னை சோனியா உடன் உறவு கொள்ள துடிக்கும் விஜய்க்கு எங்கள் எதிர்ப்பு எப்பொழுதும் உண்டு.. அதுவம் இந்த படத்தில் நடித்த அசின்க்கு எதிராக தான் எங்கள் போராட்டம்.....
நீங்கள் கேட்கலாம் ரத்த சரித்திம் படத்தை என் எதிர்க்க வில்லை என்று..... எல்லோரும் எல்லா நேரத்திலும் எதிர்பது இல்லை... அனால் என்னோமோ விஜயை மட்டும் எல்லோர்க்கும் பிடித்து இருக்கிறது அதனால் எல்லோரும் எதிர்கிறார்கள்...........

டிலீப் said...

நண்பரே நீங்கள் ஏற்றுகொள்ள கூடிய விடயம்தான் நான் இவ் போரால் பெரிதும் பாதிக்கப்பட்டதால் தான் மீண்டும் ஒரு போர் வேண்டாம் இனி இருக்கும் மக்களாவது நிம்மதியாக வாழ வேண்டும் என்ற ஆவா.
..............................

ஒத்து மொத்த தமிழ் மக்களுக்காவே ஆரம்ப காலத்தில் நடத்தப்பட்டது. ஆனால் தற்பொழுது அவ்வாறில்லை. உதாரணம் கே.பி
......................

நண்பரே அது ஏன் எதிர்ப்பதில்லை?? தாங்கள் சின்மயின் விடயத்துக்கு பதில் அளிக்கவில்லை?? ஏன் ?

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.