அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

23 வருடங்களின் பின்பு ஆஷஸ்...


James Anderson, Matt Prior, Andrew Strauss and Alastair Cook with the replica Ashes urn

சிட்னி டெஸ்டில் இங்கிலாந்து அணி பல சாதனைகளுடன் இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இன்னிங்ஸ் மற்றும் 83 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா மண்ணில் 23 வருடங்களின் பின்பு ஆஷஸ் தொடரை 3-1 என்ற கணக்கில் வெற்றிகொண்டது. 

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. முதல் 4 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. 5 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்தது.. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 280 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி, 3 ம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 488 ரன்கள் எடுத்திருந்தது.

நேற்று 4 வது நாள் ஆட்டம் நடந்தது. அபாரமாக ஆடிய பிரயர், டெஸ்ட் அரங்கில் 4 வது சதம் கடந்தார். இவருக்கு பிரஸ்னன் (35) நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். 118 ரன்கள் (11 பவுண்டரி, 1 சிக்சர்) சேர்த்து பிரயர் வெளியேறினார். பின்வரிசையில் ஸ்வான் (36) அதிரடி காட்ட, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 644 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் முதல் இன்னிங்சில் 364 ரன்கள் முன்னிலை பெற்றது. 

Chris Tremlett is mobbed after bowling Michael Beer to secure the 3-1 Ashes win

 இரண்டாவது இன்னிங்சை துவக்கியது ஆஸ்திரேலியா. வாட்சன் (38), ஹியுஸ் (13), கவாஜா (21), கிளார்க் (41), மைக்கேல் ஹசி (12), ஹாடின் (30), ஆகியோர் விரைவில் அவுட்டாகி ஏமாற்றினர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்து திணறியது. ஸ்மித் (24), சிடில் (17) ஆட்டமிழக்காமல் இருந்தனர். .தொடர்ந்து 5-ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய அவுஸ்திரேலியா அணி நாளின் தொடக்க நேரத்தில் சிறப்பாக ஆடினாலும் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை சமாளிக்க சற்று தடுமாறினார்கள். சிடில் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.8-வது விக்கெட்டுக்காக ஸ்மித்-சிடில் 86 ரன்களை அவுஸ்திரேலியாவின் இரண்டாம் இன்னிங்ஸில் சிறந்த இணைப்பாட்டமாக பெற்றனர்.ஸ்மித் ஆட்டமிழக்காமல் 54 ரன்களை பெற்றார்.இறுதியில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 83 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

Steven Smith pulls on his way to a half-century


சிட்னி டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 644 ரன்கள் எடுத்தது. இதுவே ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு இன்னிங்ஸில், இங்கிலாந்து அணி எடுத்த அதிக ஒட்டம். இதற்கு முன் கடந்த 1928-29 ம் ஆண்டு நடந்த தொடரின் போது, 636 ரன்கள் எடுத்திருந்தது. 

 23 ஆண்டுக்குப் பின் ஆஸ்திரேலிய மண்ணில், ஆஷஸ் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதற்கு முன் கடந்த 1987ம் ஆண்டு மைக் கேட்டிங் தலைமையிலான இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் தொடரை கைப்பற்றி இருந்தது.

Paul Collingwood speaks to the press after announcing his retirement from Tests

 டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் இங்கிலாந்து வீரர் பால் கோலிங்வுட். இதுவரை 67 டெஸ்டில் விளையாடியுள்ள இவர், 10 சதம் உட்பட 4246 ரன்கள் எடுத்துள்ளார். ஆஷஸ் டெஸ்ட் தொடரில்,  5 போட்டிகளில் வெறும் 83 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து டெஸ்ட் போட்டிக்கு முழுக்கு போட முடிவு செய்துள்ளார். இருப்பினும் ஒரு நாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளார்.

5-ம் டெஸ்டின் ஆட்டநாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் குக் தெரிவனார்

Post Comment


4 comments:

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வணக்கம் டிலீப் விஜய் பாடல் 10 பதிவிட்டுள்ளேன்
http://vithu9.blogspot.com/2011/01/10.html

டிலீப் said...

//தோழி பிரஷா said...
வணக்கம் டிலீப் விஜய் பாடல் 10 பதிவிட்டுள்ளேன்
http://vithu9.blogspot.com/2011/01/10.html//

வணக்கம் பிரஷா
நான் பார்த்துவிட்டேன் ...
அருமை....

தர்ஷன் said...

நல்ல பீல்டர் அவரது ஒய்வு கவலைக்குரியது

டிலீப் said...

//தர்ஷன் said...
நல்ல பீல்டர் அவரது ஒய்வு கவலைக்குரியது//

சிறந்த கப்டன் & பேட்ஸ்மென் கூட

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.