அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube



பெங்களூரு: ஐ.பி.எல்., தொடர் அணியில் இடம் பெறும் கிரிக்கெட் வீரர்கள் இன்று பல கோடி ரூபாய்க்கு ஏலம் போயினர். கவுதம்காம்பீரை கோல்கட்டா ரைடர்ஸ் அணி 11. 04 கோடிக்கு விலைக்கு வாங்கியது. இது வரை முடிந்த ஏலத்தில் கவுதம்காம்பீ‌ரே அதிக விலைக்கு போய் முதலிடத்தில் உள்ளார்.
கங்குலி, வெஸ்ட் இண்டீஸ் அணி கேபடன் கெய்ல், லாரா, கிப்ஸ் , ரைடர் ஆகியோரைஎந்த அணி உரிமையாளரும் விலைக்கு வாங்க முன்வரவில்லை. இந்திய வீரர்கள் 48 பேர் பங்கேற்கின்றனர்.


கடந்த 3 தொடர்களில் பங்கேற்ற வீரர்களில் ஒப்பந்தம் முடிந்ததால், நடக்கவிருக்கும் தொடருக்கான புதிய ஏலம் இன்றும், நாளையும் பெங்களூருவில் நடக்கிறது.புதிய அணிகளான கொச்சி, புனே அணிக்கு தேவையான அனைத்து வீரர்களையும் ஏலத்தில் எடுக்கிறது. ஒவ்வொரு அணியும், எந்தெந்த வீரர்களை ஏலத்தில் எடுக்க உள்ளனர் என்பது குறித்து அதிக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மொத்தம் 350 வீரர்கள் உள்ள இந்த ஏலத்தில், ரூ. 400 கோடிக்கும் மேலாக செலவிடப்படுகிறது.

வீரர்கள் விலை முழு விவரம் : இன்று நடந்த ஏலத்தில் வீரர்கள் எந்த விலைக்கு போயினர் என்ற முழு விவரம் வருமாறு: 

கவுதம் காம்பீர்- ரூ. 11. 04 கோடி ( கோல்கட்டா வைட் ரைடர்ஸ் அணி ) 
இலங்கை அணி வீரர் தில்சன் ரூ. 2. 9 கோடி ( ராயல் சேலஞ்ச் பெங்களூரு) 
ஜாகீர்கான் ரூ. 4. 1 கோடி (ராஜஸ்தான் ராயல் சேலஞ்சர்) 
நியூஸிலாந்து வீரர் ரோஸ்டைலர் - 4. 6 கோடி ( ராஜஸ்தான் ராயல் சேலஞ்சர்)  
யூசூப் பதான் - ரூ. 9. 66 கோடி, (கோல்கட்டா நைட் ரைடர்ஸ்) 
இங்கிலாந்து வீரர் பீட்டர்சன் - ரூ. 2. 9 கோடி ( டெக்கான் சார்ஜர்) 
இலங்கை வீரர் மஹேலா - ரூ. 6.9 கோடி (கொச்சி அணி)
யுவராஜ்சிங்- ரூ. 8. 28 கோடி ( சகாரா புனே வாரியார் அணி )
தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் - ரூ. 5. 1 கோடி ( ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு )  
ஜெயவர்த்தனே - 6. 9 கோடி ( கொச்சி அணி) 
ஒயிட் - ரூ. 5.1 கோடி ( டெக்கார் சார்ஜர்ஸ் )
காலீஸ் - ரூ. 5.1 கோடி ( கோல்கட்டா நைட் ரைடர்ஸ்)
ரோகித்சர்மா- ரூ. 9 . 2 கோடி ( மும்பை இந்தியன்) 
ஆஸி. வீரர் - ரூ. 3. 9 கோடி ( மும்பை இந்தியன் அணி) ‌
சங்ககரா- ரூ. 3. 2 கோடி ( டெக்கான் சார்ஜர் )
கில்கிறிஸ்ட் - ரூ. 4. 1 கோடி ( கிங்ஸ்லெவன்) 
டிராவிட் - ரூ. 2. 3 கோடி (ராஜஸ்தான் ராயல்ஸ் ) 
தென்ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித் - ரூ. 2. 3 கோடி (புனே வாரியர்ஸ் ) 
உத்தப்பா - ரூ. 9. 7 கோடி (புனே)
தென்ஆப்பிரிக்க வீரர் போத் - ரூ. 4 .4 கோடி ( ராஜஸ்தான் ராயல் அணி) 
லஷ்மன் -ரூ. 1. 84 கோடி (கொச்சி அணி ) 
மெக்கலம் - ரூ. 2. 2 கோடி ( கொச்சி அணி ) 
வெட்டோரி -ரூ. 2.5 லட்சம் ( பெங்களூரூ அணி), 
ஸ்ரீசாநத் - ரூ. 4. 41 கோடி (கொச்சி அணி)
இர்பான் பதான் - ரூ. 8. 7 கோடி ( டில்லி டேர்டெவில்ஸ்) 
டூமினி - ரூ.1. 4 கோடி (டெக்கான் சார்ஜர் )

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக "டுவென்டி-20' தொடர் நடந்தது. நான்காவது தொடர் வரும் ஏப்., 8 ல் துவங்குகிறது. இதில் சென்னை, மும்பை, டில்லி போன்ற 8 அணிகளுடன் சேர்த்து, புதியதாக புனே கொச்சி என மொத்தம் 10 அணிகள் இம்முறை பங்கேற்கின்றன. 


கடந்தமுறை இருந்த நட்சத்திர அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டு, "கிரேடு (பிரிவு) முறை கொண்டுவரப்பட்டது. இதன் படி முதல் பிரிவில் உள்ள 21 வீரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 1.81 கோடி வரை கிடைக்க வாய்ப்புள்ளது. இதில் இந்தியாவின் டிராவிட், யுவராஜ், கங்குலி, வெஸ்ட் இண்டீசின் கெய்ல் ஆகியோருடன் இங்கிலாந்தின் பிராட், ஆஷஸ் நாயகன் ஆண்டர்சன், சுவான், பீட்டர்சன், இலங்கையின் தில்ஷன், ஜெயவர்தனா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
 
 இரண்டாவது பிரிவில் (ரூ. 1.36 கோடி) காலிஸ், முரளிதரன், யூசுப் பதான், ஜாகிர் கான், டெய்ட், சங்ககரா ஆகியோரும், 3வது பிரிவில் (ரூ. 91 லட்சம்) காம்பிர், ஹசி, போலிஞ்சர், உத்தப்பா, ஜெயசூர்யா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். நான்காவது பிரிவில் (ரூ. 45 லட்சம்) தமிழகத்தின் அஷ்வின், மார்கல், தமிம் இக்பால் ஆகியோர் உள்ளனர். 
 
 நான்காவது தொடருக்கான ஏலத்தில் இருந்து சமீபத்தில் கும்ளே விலகினார். இருப்பினும் இவர், பெங்களூரு அணியின் ஆலோசகராக தொடர உள்ளார். இந்த அணி காலிஸ், முரளிதரனை அணி குறிவைத்துள்ளதாக தெரிகிறது. தவிர, ஆஸ்திரேலியாவின் பாண்டிங், கிளார்க், ஜான்சன், ஹைடன், இங்கிலாந்தின் ஹைடன் ஆகியோரும் இன்றைய ஏலத்தில் இல்லை. தவிர, பாகிஸ்தான் வீரர்களுக்கு, அனுமதி மறுக்கப்பட்டது.

வீரர்கள் தக்கவைப்பு :
சென்னை சூப்பர் கிங்ஸ் (தோனி, ரெய்னா, முரளி விஜய், ஆல்பி மார்கல்), மும்பை இந்தியன்ஸ் (சச்சின், ஹர்பஜன், போலார்டு, மலிங்கா) அணிகள் தங்களது 4 வீரர்களை தக்கவைத்துக் கொண்டன. 
ராஜஸ்தானின் வார்ன், வாட்சன், பெங்களூருவின் விராத் கோஹ்லி மற்றும் டில்லியின் சேவக் ஆகியோரை அந்தந்த அணிகள் தக்க வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்றைய ஏலத்தில் ஒவ்வொரு அணியும் ரூ.20 கோடி முதல் ரூ. 45 கோடி வரை செலவிடுகிறது.
கோல்கட்டா, டெக்கான், பஞ்சாப் அணிகள் அனைத்து வீரர்களையும் விடுவித்துள்ளதால், இந்த அணியின் உரிமையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை முழுவதையும் பயன்படுத்தலாம்.


நன்றி தினமலர்




Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.