அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

ரெங்கநாதன் விசைப்பலகைபடிமம்:Trilingual kb.jpg
ரெங்கநாதன் விசைப்பலகை அல்லது இலங்கை சீர்தர விசைப்பலகை என்பது இலங்கை அரசினால் சீர்தரப்படுத்தப்பட்ட தமிழ் விசைப்பலகைத் தளக்கோலமாகும். இலங்கையில் அரச அலுவலகங்களிலும் ஏனைய பணிகளிலும் தமிழைக்கணினியில் உள்ளீடு செய்வதற்கு இந்த விசைப்பலகைத் தளக்கோலமே உத்தியோகபூர்வமாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசினால் முதலில் தமிழ் 99 விசைப்பலகைத் தளக்கோலமே சீர்தரமாக்கப்பட்டிருந்தபோதிலும் இலங்கைக் கணினிப் பயனர்களிடையே மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்புக்களின் அடிப்படையில் தமிழ் 99 கைவிடப்பட்டு ரெங்கநாதன் வடிவம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது சந்தையில் உள்ள மும்மொழி விசைப்பலகைகளில் இவ் இலங்கைச் சீர்தர விசைப்பலகைத் தளக்கோலமே பொறிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சீர்தரமாக தமிழ் 99 தளக்கோலமே இருந்துவந்தது. இத்தளக்கோலம் பொதுவாக பயன்படுத்தப்படாமலிருந்தமையும் இதனைப்பயின்று கொள்ள இலங்கைப்பயனர்கள் தயக்கம் காட்டுவதும் உணரப்பட்டு இது தொடர்பாக ஆராயவென 2006 ம் ஆண்டு ஒக்டோபர் 25ம் நாள் கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டது. அக்கூட்டத்தில் தமிழ் 99 இனைப் பயனர்கள் பரவலாக விரும்பவில்லை என்பதும் பெரும்பாலானோர் பாமினி வகை வடிவத்தையே கோரி நின்றதும் அறியப்பட்டது.
படிமம்:Rengkanathan.png
இக்கூட்டத்தினைத் தொடர்ந்து இலங்கைத் தகவற் தொழிநுட்ப முகவர் நிலையம் (ICTA) இவ்விசைப்பலகை விவகாரத்துக்கென ஒரு பணிக்குழுவை நியமித்தது. 3 மாதகாலப் பணிகளுக்குப் பின்னர், 2007 ம் ஆண்டு சனவரி 24ம் நாள் அக்குழு புதிய விசைப்பலகைத் தளக்கோலத்தினைப் பரிந்துரைத்தது.
ரெங்கநாதன் என்ற பெயர் இவ்விசைப்பலகைத் தளக்கோலத்துக்கு இடப்பட்டமைக்கு தெளிவான காரணங்கள் எதுவும் உத்தியோகபூர்வமாகச் சொல்லப்படவில்லை. பாமினி வகைத் தளக்கோலங்களைக் குறிக்க பேச்சளவில் பயன்படுத்தப்பட்டு வந்த இச்சொல் தற்காலிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரெமிங்டன் என்ற தமிழ் தட்டச்சுப்பொறியின் பெயர் மருவி ரெங்கநாதன் என்று ஆகியிருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.
ரெங்கநாதன் தளக்கோலத்தின் சிறப்புக்கள்
 • இலங்கைத் தமிழ்க் கணினிப் பயனர்களிடையே பரவலாகப் புழக்கத்திலிருக்கும் பாமினி அல்லது தமிழ் தட்டச்சு தளக்கோலத்தினை அடிப்படையாகக்கொண்டு சிறியளவு மற்றங்களுடன் இத்தளக்கோலம் இருப்பதால் ஏற்கனவே தட்டெழுத்துத்துறையில் பயிற்சி பெற்றவர்களும் இலகுவாகப் புதிய தளக்கோலத்தை பயின்றுகொள்ளக்கூடியதாக இருக்கிறது.
 • கையால் எழுதுவதைப் போன்றே தட்டெழுதக்கூடிய வண்ணம் இத்தளக்கோலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே குழப்பங்கள் எதுவுமின்றி எவரும் இதனைப் பயன்படுத்த வழிகிடைக்கிறது. கூடவே தமிழ் எழுத்துக்களை எழுதும் மரபோடு முரண்படாத வகையில் தட்டெழுத முடிகிறது.
 • தமிழ் எண்கள், தமிழ் கிரந்த எழுத்துக்கள் ஆகியவை பயன்பாட்டு எளிமைக்கு ஏற்ப வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. காட்டாக Alt விசையுடன் எண்களைத் தட்டும் போது தமிழ் எண்கள் வரும்படி அமைக்கப்பட்டுள்ளது.
 • கூடுமானவரை தமிழில் பயன்பாட்டிலுள்ள எல்லா வரியுருக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
 • புள்ளி, காற்புள்ளி, ‘,”,?,/,<,> போன்ற குறியீடுகளில் எந்தத் தமிழ் எழுத்துக்களையும் வைக்காது விடப்பட்டுள்ளது. இதனால் அடிக்கடிப்பயன்படுத்தப்படும் இக்குறியீடுகளை எந்தவிதமான சிரமங்களும் இன்றிப் பயன்படுத்த முடியும்.
 • அனைத்து தூய தமிழ் எழுத்துக்களும் தூக்கு விசையின் (Shift Key) உதவி இன்றியே தட்டெழுதப்பட முடியும். இது வேகத்தை அதிகரிக்கும்.

 • பாமினி/ தமிழ் தட்டச்சு வகை தளக்கோலத்தில் உகர ஊகார உயிர்மெய் எழுத்துக்களுக்கு தனித்தனி இடங்கள் வழங்கப்பட்டிருந்தது. இது விசைகளுக்குப் பற்றாக்குறையை ஏற்படுத்தி இருந்ததுடன் பொதுவாகப் பயன்படுத்தும் குறியீடுகளை எளிதாகப் பயன்படுத்த முடியாதபடி ஆக்கிவிட்டிருந்தது. ரெங்கநாதன் வடிவத்தில் உகர ஊகார மெய்களை ஆக்குவதற்கு இரு பொது விசைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால் விசைப்பற்றாக்குறை தீர்க்கப்பட்டிருப்பதோடு பொதுப்பயன்பாட்டில் இருக்கும் குறியீடுகளை எளிதாகப் பயன்படுத்த வழிகிடைத்துள்ளது.

 • தமிழ் எண்கள், தமிழ் கிரந்த எழுத்துக்கள் அனைத்தும் பயன்பாட்டு எளிமைக்கு ஏற்ப வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

 • டி, டீ போன்ற எழுத்துக்களுக்கு பாமினி வடிவத்தில் தனியான விசைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால் ஏனைய இகர ஈகார உயிர்மெய்களுக்கு அவ்வாறிருக்கவில்லை. ரெங்கநாதன் வடிவத்தில் இந்த முரண்பாடுகள் களையப்பட்டு எல்லா எழுதுத்க்களும் ஒரு பொது ஒழுங்கின்படியான வைப்பு முறைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

நன்றி விக்கி


Post Comment


10 comments:

ஸாதிகா said...

நல்ல தகவல் திலிப்.அறியத்தந்தமைக்கு நன்றி.

மகாதேவன்-V.K said...

நல்லதொரு பகிர்வு
நன்றி நண்பா

டிலீப் said...

//ஸாதிகா said...
நல்ல தகவல் திலிப்.அறியத்தந்தமைக்கு நன்றி//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஸாதிகா

டிலீப் said...

//மகாதேவன்-V.K said...
நல்லதொரு பகிர்வு
நன்றி நண்பா//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பா

தோழி பிரஷா said...

நல்ல தகவல்....

டிலீப் said...

//தோழி பிரஷா said...
நல்ல தகவல்..//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி பிரஷா

Harini Nathan said...

"ரெங்கநாதன் விசைப்பலகை" i like this name Dileep :p

“நிலவின்” ஜனகன் said...

நல்ல தகவல் பகிர்வு.............

டிலீப் said...

//Harini Nathan said...
"ரெங்கநாதன் விசைப்பலகை" i like this name Dileep :p//

நெக்கு விளங்கிட்டுது ஹரிணி

டிலீப் said...

//“நிலவின்” ஜனகன் said...
நல்ல தகவல் பகிர்வு...........//

தங்ஸ்ட நண்பா

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.