அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtubeசிந்தனை பரிமாற்றம் - 2 

டெலிபதிக்கு இணையாக கூறப்படும் பிரபலமான சக்தி ஞான திருஷ்டி.மனோதத்துவ ஆய்வாளர்கள் இதை Precognition என்று அழைக்கின்றனர்.இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் டெலிபதிக்கு இருவர் தேவை.ஞான திருஷ்டிக்கு இன்னொருவர் அவசியமில்லை.ஞான திருஷ்டியில் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதால்தான் சில சமயம் “நான் நினைச்சேன் அப்படியே நடந்தது” “அப்பவே தோனிச்சு இப்படி நடக்கும்னு” போன்ற வார்த்தைகள் ஞானதிருஷ்டியினாலே.டெலிபதியைவிட தொலைநோக்கு சக்தி என்கிற Clairvoyance- ம் ஞான திருஷ்டி என்கிற Precognition-ம் உபயோகமானவை.டெலிபதி ரேடியோ மாதிரி என்றால் Clairvoyance- டிவி.

உலகபுகழ் பெற்ற Precognition-களும் உண்டு.மார்கன் ராபர்ட்ஸன் என்னும் எழுத்தாளர் வியப்பான நாவலொன்றை எழுதினார்.கற்பனையில் உதித்த கரு என்று சொல்வதைவிட உள்ளுணர்வு சொல்லிய கதை என்று குறிப்பிடலாம்.

கதையில் 70000 டன் எடையுள்ள மிகப்பெரிய கப்பலொன்று அட்லாண்டிக் கடலின் வடக்கே ஜஸ்கட்டியில் மோதி மூழ்கின்றது.அந்த கப்பலின் முதல் பயணத்தில் இப்படி ஒரு கோர விபத்து.அந்த விபத்தில் 2500 பயணிகள் உயிரிழக்கின்றனர்.இதை நாவலாக ராபர்ட்ஸன் எழுதியது 1898 இறுதியில்.1912 ஏப்ரல் 14-ம் திகதி 66000டன் எடையுள்ள டைட்டானிக் என்கிற கப்பல் அதே அட்லாண்டிக் கடலில் ஜஸ்கட்டி மீது மோதி 1513 பேர் உயிரிழந்தனர்.உச்சகட்டமாக லைஃப் படகுகளின் எண்ணிக்கை உட்பட நாவலுக்கும் நிஜத்துக்கும் நூற்றுக்கணக்கான ஒற்றுமைகள் இருந்தன.ராபர்ட்ஸன் தன் நாவில் அந்த கற்பனை கப்பலுக்கு வைத்த பெயர் “டைட்டன்”.

இப்படி ஒரு நாவல் முன்பே எழுதப்பட்டிருப்பது தெரியாமல் நிஜ டைட்டானிக் மூழ்குவதற்கு சில ஆண்டுகளுக்கு முன் லண்டன் நாளிதழ் ஒன்றில் அதே மாதிரி கற்பனையுடன் சிறுகதையொன்றை எழுதினார்.டிஸ்டெட் என்கிற பத்திரிகையாளர்.

சிறுகதையின் கடைசியில் மிகப்பெரிய கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருவதால் இது வெறும் கதையல்ல நிஜமாகவே இப்படி நிகழ போகின்றது என்று ஒரு குறிப்பையும் எழுதி எச்சரித்தார் அவர்.
இதில் வியப்பும் சோகமும் என்னவென்றால் அந்த கப்பலில் பயணித்து விபத்தில் மாண்டவர்களில் இந்த சிறுகதை பத்திரிகையாளரும் ஒருவர்.

இந்த அளவுக்கு கற்பனை செய்ய கூடிய ஒருவருக்கே அது நிஜமாக நடக்கப்போகிறது என்று நம்பிக்கை ஏற்ப்படவில்லை.
காரணம் விதி இந்த சக்திகளை விட வலிமையாக வேலை செய்கிறது.

இதே போல் இன்னுமொரு சம்பவம்.

ஸ்காட்லாந்து நாளிதழ் ஒன்றில் வந்த செய்தி இது.நாற்பத்து மூன்று வயதான எட்வத்ட் பியர்ஸன் ஆருடம் சொல்பவர்.1978 டிசம்பர் 4-ம் திகதியன்று டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்ததற்காக அவரை பொலீஸ் கைது செய்தது.டிக்கெட் வாங்க பணமில்லை.நான் சுற்றுப்புறச் சூழல் அமைச்சரை சந்திக்க அவசரமாக போய்கொண்டிருக்கிறேன்.இன்னும் இருபது நாட்களுக்குள் க்ளோஸ்கோ நகரை ப+கம்பம் தாக்கப்போகிறது.அதை சொல்லி அமைச்சரை எச்சரிக்கத்தான் கிளம்பினேன் என்றார் பியர்ஸன்.

அதை கேட்டு பொலீஸ்சும் ரயில்வே அதிகாரிகளும் சிரித்தார்கள்.பிரிட்டனில் பூகம்பம் ஏற்ப்படுவது மிக அரிது.

விளைவு மூன்று வாரங்களுக்கு பிறகு பூகம்பம் க்ளோஸ்கோ நகரை தாக்கி நூற்றுக்கணக்கில் பலர் உயிரிழந்தனர். 

சிந்தனை பரிமாற்றம் தொடரும்....Post Comment


6 comments:

Harini Nathan said...

//இந்த அளவுக்கு கற்பனை செய்ய கூடிய ஒருவருக்கே அது நிஜமாக நடக்கப்போகிறது என்று நம்பிக்கை ஏற்ப்படவில்லை.
காரணம் விதி இந்த சக்திகளை விட வலிமையாக வேலை செய்கிறது//
Intresting :)))

அரபுத்தமிழன் said...

டிலீப், கால எந்திரம் வைத்திருக்கிறீரோ,
அடிக்கடி பின்னால் பயணித்து அரிய தகவல்களை
அள்ளி வருகின்றீரே :) Good Post.

டிலீப் said...

//Harini Nathan said...
//இந்த அளவுக்கு கற்பனை செய்ய கூடிய ஒருவருக்கே அது நிஜமாக நடக்கப்போகிறது என்று நம்பிக்கை ஏற்ப்படவில்லை.
காரணம் விதி இந்த சக்திகளை விட வலிமையாக வேலை செய்கிறது//
Intresting :)))//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஹரிணி

டிலீப் said...

//அரபுத்தமிழன் said...
டிலீப், கால எந்திரம் வைத்திருக்கிறீரோ,
அடிக்கடி பின்னால் பயணித்து அரிய தகவல்களை
அள்ளி வருகின்றீரே :) Good Post.//

எல்லா படித்தவைதான் தழிழன்
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

“நிலவின்” ஜனகன் said...

ம்ம்ம்ம....அதிர்ச்சியும் சிந்தனையும் தரும் பதிவு...

டிலீப் said...

//“நிலவின்” ஜனகன் said...
ம்ம்ம்ம....அதிர்ச்சியும் சிந்தனையும் தரும் பதிவு...//

நிச்சயமாக ஜனகன்
இப்பிடியும் உலகத்தில் இருக்குறார்கள்

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.