அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

தகவல் துளிகள் - 4
இராட்ச்சத பறவைகள்
பூமியின் புது யுகத்தில் சிறிதும் பெரிதுமாக ஆயிரக்கணக்கான பறவைகள் வசித்து வந்தன. அவற்றில் சில, இராட்சச உருவத்தைக் கொண்ட பறவைகளாக இருந்தன. அவை பெரும்பாலும் நெருப்புக்கோழியைப்போல இருந்தன. ஆனால் இந்தப் பறவைகளுக்குப் பக்கத்தில் இன்றைய நெருப்புக்கோழியை நிறுத்தினால், இன்றைய நெருப்புக்கோழி மிக மிகவும் குள்ளமானதாகவே தோன்றும்.அந்த இராட்சசப் பறவைகளால் பறக்க முடியாது. ஆனால், அவை வேகமாக ஓடக்கூடியவை. அப்படிப்பட்ட பறவைகளில் ஒன்று ஈபியோர்னிஸ்.
 ஈபியோர்னிசின் முட்டைகள் மடகாஸ்கர் தீவில் அகப்பட்டிருக்கின்றன.
அந்த முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சு ஒரு கோழிக் குஞ்சைப்போன்றுதான் இருக்கும். முழு வளர்ச்சியடைந்த ஈபியோர்னிசால், தரையில் நின்றபடியே ஒரு வீட்டின் இரண்டாவது மாடி சன்னலுக்குள் எட்டிப் பார்க்க முடியும். ஈபியோர்னிசும், அதைப் போன்ற தோற்றத்தோடு நியூஸிலாந்தின் காடுகளில் வசித்த மோவாவும் அமைதியான பறவைகள். அவற்றால் யாருக்கும் துன்பம் கிடையாது.


கொலைகாரப் பறவை
போரோராகோஸ் எனும் பறவையும் இரண்டாவது மாடிச் சன்னலுக்குள் தலையை நீட்டக்கூடிய உயரமுடையது. அதன் தலை குதிரையின் தலையைவிடவும் பெரிது. மூக்கு கோடாலியைப் போன்றது. இரத்த வெறிகொண்ட இந்தப் பறவையின் கண்கள் கண்ணாடியைப்போல இருக்கும்.
அது தன்னுடைய இரையைக் கண்ணைச் சிமிட்டாமல் பார்க்கும். பிறகு அதைச் சிறு சிறு துண்டுகளாகக் கிழிக்கும். இந்தக் கோரமான விருந்தில் கலந்துகொள்வதற்காக கறுப்புக் கழுகுகள் வரும். வேட்டையாடி இரையைப் பிடிக்கிற டையாட்ரிமா என்ற பறவை, தன்னுடைய கொழுத்த கால்களை ஆட்டிக்கொண்டு ஓடி  வரும். ""எனக்கும் ஒரு இறைச்சித் துண்டு கொடு'' என்று கேட்டு அந்த இராட்சசப் பறவையைச் சுற்றி வரும்.
போரோராகோசைப் பார்க்கும்போது இந்த பயங்கரமான ""கொலைகாரப் பறவை'' தான், நாம் இன்று பார்க்கும் சாதுவான கொக்கின் இனம் என்று யார்தான் நம்ப முடியும்?


நன்றி:தினமணி

Post Comment


2 comments:

Harini Nathan said...

நல்ல பகிர்வு டிலீப் ...

டிலீப் said...

//Harini Nathan said...
நல்ல பகிர்வு டிலீப் ..//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஹரிணி

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.