அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

திருகோணமலை - பயண அனுபவங்கள்



ணக்கம் வாசகர்களே….
நீண்ட நாட்களின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.எனது நெருங்கிய உறவினரின் திருமணத்துக்காக நான் கடந்த வாரம் திருகோணமலை சென்றுருந்தேன்.அவ் பயணத்தின் போது நான் பெற்ற அனுபவங்களையும் சுவாரஸ்சயமான விடயங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.




இலங்கையில் விபாச்சாரம் சட்டரீதியாக்கப்பட்டுள்ளதா??


நானும் என் நண்பர்கள் இருவரும் (வினோத் , உமேஸ்) திருகோணமலை செல்லவதற்காக கொழும்பு மத்திய பஸ் (அரசாங்க பஸ்) நிலையத்துக்கு சென்றோம்.நாங்கள் சற்று தாமதமாக சென்றதால் அதிகாலை 12.15 மணிக்கு திருகோணமலை செல்லும் பஸ்ஸை தவறவிட்டோம். என்ன செய்வது என்று தெரியாமல் அடுத்த பஸ் எத்தனை மணிக்கு செல்லும் என்று அங்குள்ள அதிகாரிடம் கேட்டோம்.அவர் அளித்த பதில் 5.30 மணிக்கே அடுத்த பஸ் செல்லும் என்பதே.


ரசாங்க பஸ் நிலையத்துக்கு எதிரே தனியார் பஸ் நிலையமுள்ளது.எனவே அங்கேயாவது திருகோணமலைக்கான பஸ் இருக்கும் என்ற எண்ணத்தில் அங்கு சென்றோம்.போகின்ற வழியில் நான் கண்ட காட்சிகள்….



த்திய பஸ் நிலையத்துக்கு எதிரே பிரதான வீதி அதற்கு அருகாமையில் சில தனியார் பஸ்கள் தரித்து செல்லுவது வழமை.ஆனால் நள்ளிரவு நேரங்களில் பஸ் பதிலாக அதிகளவு இருப்பது முச்சக்கரவண்டியே என்பதை அன்றே நான் அறிந்து கொண்டேன்.சரி கதைக்கு வருவம் நான் அவ்வழியாக தனியார் பஸ் நிலையத்துக்கு செல்கையில் அதிகளவான ஆண்கள் பஸ்சுக்கு காத்து இருப்பதை கண்டேன்.அதிலும் 2,3 பெண்கள் வேற. நான் அந்த வேளை யோசித்தேன் அட.. இலங்கையில் நள்ளிரவில் பெண்கள் நடமாட கூடிய நிலமை உள்ளதே அதற்கு காரணம் நம்ம அரசர் மகிந்த என்று கொஞ்சம் பெருமிதமடைந்தேன். நான் சாதாரண தரம் படிக்கும் வேளையில் தமிழ் இலக்கியத்தில் நளன்தமயந்தி என்று ஒரு கதை வருகின்றது.நளன் அரசனின் ஆட்சி காலத்தில் நள்ளிரவில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடிந்ததாக படித்துள்ளேன்.அந்த ஆட்சியா இலங்கையிலும் நடக்கிறது ??


நான் சீக்கிரமாக அடுத்த பஸ் எத்தனை மணிக்கு என்று பார்ப்பதற்காக திருகோணமலை பஸ் நிறுத்தும் இடத்துக்கு சென்றேன்.நேரத்தை விசாரித்தேன் 2.40 க்கே திருகோணமலைக்கான அடுத்த பஸ்.இரண்டு மணித்தயாலங்கள் காத்திருக்க வேண்டுமே என்று யோசித்து கொண்டு திரும்பி பார்த்தேன் அட..அட.. வினோத் உமேஸ்ஸை (நண்பர்கள்) காணவில்லை.சில வினாடிகளில் உமேஸ் வந்தான் எங்கட வினோத் என்று கேட்டேன் அவன் சொன்னான் வினோத் அங்க நிக்கிறான் என்று.(வினோத் தைரியமானவன் எது வந்தாளும் கதைத்தே சமாளிச்சுடுவான்.) நான் என்ன தான் அங்க பண்றான் என்று பார்ப்பதற்காக உமேஸ்ஸிடம் என்ட லக்கேஜ்ஜ கொடுத்து விட்டு நான் முதல் வந்த அந்த பிரதான வீதிக்கு சென்றேன்.வினோத் அங்கே கூட்டதோடு கூட்டமாக நின்று கொண்டு இருந்தான்.நானும் அவன் அருகில் சென்று கேட்டேன் ஏன்டா இங்க நிக்கிற என்று…அவன் சொன்னான் இங்க பாருடா நடக்கிற காரியத்தை…


அட..அட….நான் முதல் பார்த்த பெண்கள் வேறு சில ஆண்களுடன் கதைத்து கொண்டு இருப்பதை நான் கண்டேன்.அந்த வேளையிலே நான் புரிந்துகொண்டேன் அவ் பெண்கள் விலைமாதர்கள் என்பதை.சரி என்னதான் நடக்குது என்று நானும் வினோத்தும் பார்த்துக்கொண்டு இருந்தோம்.அவ் பெண்கள் வீதியிலே அலைந்து திரிந்து கொண்டு வீதிகளில் நிற்கும் ஆண்களிடம் பேரம்பேசலில் ஈடுபடுகின்றனர்.நேரம் செல்ல செல்ல அதிகளவான விலைமாதர்களின் நடமாட்டம் காணக்கூடியதாக இருந்தது.பேரம்பேசல் வெற்றியடைந்தால் முதலில் ஆண் போய் அங்கு நிற்கும் முச்சக்கரவண்டியில் ஏறி இருப்பார் அதன் பின்பு பெண் வந்து ஏறுவாள்.இதற்கு அதிகளவான முச்சக்கரவண்டி சாரதிகளும் உறுதுணையாக உள்ளனர்.பௌத்த நாடு என்று கத்துகின்றார்களே இவ் பப்ளிக் விபாச்சார பேரம்பேசல் ஒரு அரசமரத்தின்(போதி மரம்)கீழேயே நடைபெறுகின்றது.


என் நண்பன் வினோத் என்ன செய்தான் போய் ஒரு பெண்ணிடம் எவ்வளவு என்று கேட்டான்.அவளும் ரூமுக்கு 500 மொத்தம் 1500 ரூபாய் என்றாள்.இவனும் அவள குழப்புறத்துக்காக குறைக்க முடியாதா என்றான்.அவள் முகத்தை சூழித்து விட்டு இன்னோருவனுடன் பேரபேச சென்று விட்டாள்.


திலே சில விடயங்களை குறிப்பிட விரும்புகின்றேன்.
இலங்கையின் தலைநகரத்தில் சனநடமாட்டம் உள்ள மத்திய பேரூந்து நிலையத்துக்கு முன்பாக.யாருடைய தடைகளும் இன்றி பப்பிளிக்கவே விபாச்சார பேரம்பேசல் நடைபெறுகின்றது.ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் பொலிஸார் கூட இதை கண்டு கொள்ளவதாக இல்லை.
அண்மையில் கூட இணைய செய்தியில் வாசித்தேன் ஜனாதிபதி மாளிகை வீதியில் இவ்வாறன விபாச்சார நடவடிக்கைகள் பிரசித்தமாக நடைபெறுவதாக.


நான் செல்வதை நீங்கள் நம்பவில்லையென்றால் 11 மணி முதல் அவ்விடத்துக்கு சென்று பாருங்கள்.


இதுதானா மகிந்தவின் “சுப அனாகத்தையாக்”




சிக்குபுக்கு கொடுமை.
திருகோணமலைக்கு காலை 8.30 க்கு வந்தடைந்தோம்.நாங்கள் வீடு சென்று சாப்புடு வி;;ட்டு குட்டி நித்திரையின் பின்பு ஆர்யாவின் சிக்குபுக்கு படத்தை மிகவும் ஆர்வத்துடன் மூவரும் நெல்சன் திரையரங்குக்கு பார்க்க சென்றோம்.திரையரங்குள் நாங்கள் தான் முதலாவதாக சென்றோம் அதன்பின்பு ஒருவர் இருவராக எங்களுடன் சேர்த்து 10 பேர்தான் சிக்குபுக்கு படத்துக்கு.பட தொடங்கி சற்று நேரத்திலியே நண்பன் வினோத் நித்திரை கொண்டுவிட்டான்.இதிலிருந்து தெரிந்து இருக்கும் படம் எப்படியென்று.ஆனால் நாம் இருவரும் கொடுத்த காசுக்காவது படத்தை பார்;ப்போம் என்பதற்காக படத்தை பார்த்தோம்.


கிண்ணியா பாலம்
இது இலங்கையின் நீண்ட கடல் வழி பாலமாகும்.இவ் பாலம் கடலை ஊடுறுத்து செல்லுகின்றது.









திருகோணமலை பிறீமா ஆலை

கன்னியா வெந்நீரூற்று.
லங்கையில் காணப்படும் பிரசித்தி பெற்ற இடம் கன்னியா வெந்நீரூற்று. ஏழு இடங்களில் வெந்நீர் ஊற்றெடுத்து வருகின்றது.இதில் சுவாரஸ்சியம் என்வென்றால் ?? 




ங்கே பௌத்தர்களுக்கு இந்துக்களுக்கு கோவில்;களும் அட முஸ்லிம்களுக்கு வேற ஓர் பள்ளிவாசல் உள்ளது.என்ன கிறிஸ்தவர்களுக்கு இல்லாதது தான் கவலையாகயுள்ளது.நான் கேள்விபட்டளவில் இவ் பிரதேசம் இந்துகளுக்கே சொந்தமானது.நாளடவில் இங்கே மக்கள் குடியேறுவது போல மதங்களும் குடியேற தொடங்கியுள்ளது.



அழகிய கடற்கரை



லங்கையிலேயே அழகிய கடற்கரை எங்குள்ளது என்று கேட்டால் அனேகர் விரல் நீட்டும் இடம் நிலாவெளி கடற்கரையே.சுனாமி தாக்கத்தால் பெருமளவு பாதிக்கப்பட்ட பிரதேசம் நிலாவெளி.தற்போழுது கடலை அண்டி வாழ்ந்த மக்கள் வேறு இடங்களுக்கு குடியேற அதிகளவு உல்லாச விடுதிகளே கடலை அண்டி காணப்படுகிறது.



உமேஸ், நான், டிக்கி, வினோத்


ங்கே உயிர்க் காப்பாளர்கள் என்று பெயர்பலகை போட்டு ஒரு குடில் உள்ளது. ஆனால் அவ்குடிலுக்குள்ளே காப்பற்றுவதற்கு என்று யாருமே இல்லை.




இதுதான் ஸ்ரீலங்கா ஸ்டைல்



Post Comment


12 comments:

Mohamed Faaique said...

nalla pathivu... kinniya paalaththai innum nanraka padam pidiththirukkalam..

டிலீப் said...

//Mohamed Faaique said...
nalla pathivu... kinniya paalaththai innum nanraka padam pidiththirukkalam.//

நண்பா நிறைய படங்கள் உள்ளது எனது இணையத்தில் சில தடங்கள் வந்து கொண்டு இருக்கிறது. ஆகவே விரைவில் கண்ணியா பாலம் சம்பந்தமான படங்களை பிரசுரிக்கிறேன்.
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி முகமட்

tamil blogs said...

உங்கள் பதிவுகளை எங்களுடன் பகிர்ன்ர்துக்கொள்ளுங்கள் http://tamilblogs.corank.com/

Harini Resh said...

என்ன கொடுமடா சாமி :(
உண்மையில் மஹிந்த எதிர்பார்க்கும் சுப அன்னகாதா இது தான் போல
நல்ல பதிவு நண்பா

டிலீப் said...

//Harini Nathan said..
என்ன கொடுமடா சாமி :(
உண்மையில் மஹிந்த எதிர்பார்க்கும் சுப அன்னகாதா இது தான் போல
நல்ல பதிவு நண்பா//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஹரிணி

Unknown said...

இன்னும் என்ன நடக்க இருக்கிறது ...........

தகவலுக்கு நன்றி டிலிப்

Unknown said...

உங்களது படமும் அருமை

டிலீப் said...

தமிழில் தேசிய கீதம் பாட கூடாது என்று வந்துவிட்டது.
போக போக தமிழ்லில் கதைக்க கூடாது என்று வந்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதுகில்லை

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி தேவன்

orin said...

nalla anupavankal.
அங்கே உயிர்க் காப்பாளர்கள் என்று பெயர்பலகை போட்டு ஒரு குடில் உள்ளது. ஆனால் அவ்குடிலுக்குள்ளே காப்பற்றுவதற்கு என்று யாருமே இல்லை.
ithu mika periya kodumai

டிலீப் said...

//orin said...
nalla anupavankal.
அங்கே உயிர்க் காப்பாளர்கள் என்று பெயர்பலகை போட்டு ஒரு குடில் உள்ளது. ஆனால் அவ்குடிலுக்குள்ளே காப்பற்றுவதற்கு என்று யாருமே இல்லை.
ithu mika periya kodumai//

இதுதான் ஸ்ரீலங்கா ஸ்டைல் ஓரின்
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

Sivatharisan said...

சுப அன்னகாதா இதுதான் ஸ்ரீலங்கா ஸ்டைல்

இது மட்டும் உண்மை நண்பா

அருமை நன்றி டிலிப்

டிலீப் said...

//sivatharisan said...
சுப அன்னகாதா இதுதான் ஸ்ரீலங்கா ஸ்டைல்

இது மட்டும் உண்மை நண்பா

அருமை நன்றி டிலிப்//

நண்பா இத விட இன்னும் எவ்வளவோ ஸ்ரீலங்கா மட்டும் உரித்தான ஸ்டைல் இருக்கு.

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பா

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.