வணக்கம் வாசகர்களே..
ஆவிகளை கண்டு பயப்படுகின்றவர நீங்கள் ??
நாம் ஆவிகளை கண்டு பயப்பட்டாலே அதுகளால் நமக்கு ஆபத்து நேருகின்றன.சாதாரணமாகவே நீங்கள் இன்னொருவரிடம் பயந்தால் அந்தமற்றவருக்கு மேலும் உங்களை பயமுறுத்தும் எண்ணம் வரும்.நாம் எதிர்த்தால் அந்த நபர் பயமுறுத்துவதை நிறுத்துவார்.
ஆகவே ஒருவரை கொல்வது ஆவியல்ல.அவரது பயமே அவரை சாகடிக்கிறது.
ஆவிகளை சமாளிக்க சில வழிகள்
பெரும்பாலான ஆவிகளை சீரியஸாக எடுத்துக் கொள்ள தேவையில்லை.ஆவிகள் எதிர்ப்பட்டால் அவற்றை சற்றே அலட்சியப்படுத்துங்கள்.அதனி;டம் அதிக ஆர்வம் காட்டாதீர்கள்.தெருவில் சில சமயம் எம்மை தொடரும் நாயை “போ” என்று சொல்லி விரட்டுவதை போல ஆவியிடமும் “போ” என்று சைகையால் தெரியப்படுத்தலாம்.ஆவியானது தன்னை மீள்நிரப்ப செய்து கொள்வதற்கான சக்தியை நாம் அதற்கு கொடுக்க கூடாது.
பிரிட்டனில் பேய்களுக்கு நிறைய முக்கியத்துவதம் உண்டு.உலகிலேயே அதிகம் ஆவிகள் நடமாடும் தேசமாக பிரிட்டன் கருதப்படுகின்றது.காரணம் பிரிட்டனில் ஆயிரக்கணக்கில் பழைமையான கோட்டைகளும் அரண்மனைகளும் காணப்படுகின்றமையே.லண்டனில் குறிப்பிட்ட சில கோட்டைகளில் பேய்களை பார்க்க “க்யுவில்” நிற்பது வழக்கம்.அதில் பலர் ஆவிகளை நேரில் கண்டுமுள்ளனர்.
ஆவிகள் இப்பிரஞ்சத்தில் எல்லா இடங்களுக்கும் உலாவி திரிகின்றன.
சிவப்பிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் சீனர்கள் இந்தியர்கள் எல்லாருமே ஆவிகளை பெரிதும் நம்புகின்றனர்.நாய் குதிரை போன்ற பிராணிகளின் உடலுக்குள் ஆவிகள் புகுந்து கொள்ளும் என்கிற நம்பிக்கை ஆப்பிரிக்காவில் இருந்து வருகின்றது.
கீழை நாட்டு மக்கள் ஆவிகளிடம் பயத்தோடும் பக்தியோடும் ஆவிகளை நம்பி வருகின்றனர்.நம்மை எச்சரிக்கவும் நல்வழிப்படுத்தவும் ஆவிகளோடு உரையாடி வழிகாட்டுவதற்கென்றே பெரியவர்கள் இந்த நாடுகளில் உள்ளனர்.ஜப்பானில் ஆவிகளுக்கு ‘டாமா’(Tama) என்று பெயர். ‘டாமா’ என்றால் உருண்டையான ஒளிவீசும் முத்து என்று பொருள்.ஆவிகள் உருண்டையாக பயணித்து அவ்வப்போது குறிப்பிட்ட இடங்களுக்கு வந்தவுடன் ஓர் உருவமாக கிளர்தெழும் என்பது ஜப்பானியர்களின் நம்பிக்கை.இவை நல்ல ஆவிகளாக கருதப்படுகின்றன.
கொடூரமாகவோ அவமானகரமான சூழ்நிலைகளிலோ இறந்தவர்களின் ஆவிகளுக்கு ஜப்பானில் ‘ஒனீரோ’ என்று பெயர்.
ஒனீரோ மனிதர்களுக்குள் புகுந்து கொள்ளும் என்று ஜப்பானியர் நம்புகின்றனர்.
மேற்கிந்தியத்தீவுகளில் கொடூரமான எல்லா வாகன விபத்துகளுக்கு ஆவிகள்தான் காரணம் என்று நம்புகின்றனர்.அங்கே ஆவிகளுக்கு டப்பீஸ்(Duppies) என்று பெயர்.பசிப்பிக்தீவுகளில் உள்ள மக்கள் இரவு நேரங்களில் பருத்திததோட்டங்களின் வழியாக செல்ல மாட்டார்கள்.ஆவிகளின் இருப்பிடம் அது.நடுராத்திரியில் எல்லா ஆவிகளும் அங்கே கூடி ஆர்ப்பாட்டமாக சிரித்து கொண்டாடி கேளிக்கைகளில் ஈடுபடுவதாக நம்புகின்றனர்.டப்பீஸ் என்கிற அந்த ஆவிகள் கொஞ்ச தூரம் நடந்தும் அவ்வப்போது இடைஞ்சலாக மரங்கள் குறுக்கிட்டால் மலைப்பாம்பாக மாறி ஊர்ந்தும் செல்லக்கூடியவை.
சரி ஆவிகளை பார்த்து பயப்படாமல் இருப்பது சராசரி மனிதனால் சாத்தியம்தானா??
இந்த பதிவில் ஆவிகள் பற்றிய நேரடி அனுபவ கதைகள் எழுதவில்லை.அடுத்த பதிவில் டி.வி நடிகை டோரீன் ஸ்லோவின் ஆவி பற்றிய நேரடி அனுபவத்தை பார்ப்போம்.
ஆவிகளின் உலகம் தொடரும்.......
0 comments:
Post a Comment