அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

தகவல் துளிகள் - 2
பனி வருவதற்கு முன்பு பூமி முழுவதும் மிகவும் வெதுவெதுப்பான சீதோஷ்ண நிலை இருந்தது. இப்பொழுது அடர்த்தியான காடுகள் இருக்கும் இடங்களில் பீச் மரங்கள் இருந்தன. அங்கே பறவைகள் பாடின; சில்வண்டுகள் சத்தமிட்டன. அங்கே ஒரு விசித்திரமான மிருகம் இருந்தது. அது குதிரையும் அல்ல, ஒட்டகச்சிவிங்கியும் அல்ல. இந்த மிருகத்திற்குக் குதிரையின் கழுத்து இருந்தது. தலையில் கொம்புகள் இருந்தன. கழுதைக்கு இருப்பதைப்போன்ற காதுகளும், வரிக்குதிரையைப்போன்ற கால்களும் இருந்தன.இதன் பெயர் "பாலியோடிராகஸ்'. இது இப்போதுள்ள ஒட்டகச்சிவிங்கிக்கு மூதாதையாகும். ஒட்டகச்சிவிங்கிகள் ஆப்பிரிக்காவில் இருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், பாலியோடிராகஸ் ஐரோப்பிய ஸ்டெப்பி நிலங்களில் வசித்தது.


யானை இனத்தைச் சேர்ந்த "டினோதேரியம்' என்ற விலங்கும் அப்போது இருந்தது. டினோதேரியம் என்றால் "ஆச்சரியமான விலங்கு' என்று அர்த்தம். ஆனால், உண்மையில் இது அவ்வளவு ஆச்சரியமானது அல்ல. இது எல்லா யானைகளையும்போன்றேதான் இருக்கும். மற்ற யானைகளைவிடப் பெரிய உருவமாக இருக்கும். தந்தங்கள் வால்ரசைப் போலக் கீழ் நோக்கி வளைந்திருக்கும்.


அந்தக் காலத்து மிருகங்கள் "கத்திப்பல் பூனை'யைக் கண்டு பயந்தன. அது தன்னுடைய இரையைத் தரையில் மிதித்து அழுத்திக்கொண்டிருக்கிறது. அதன் கண்கள் நெருப்பைப்போலப் பிரகாசிக்கின்றன. அதன் உரோமம் குத்திட்டு நிற்கிறது. சிறு கண்கள் தலையோடு ஒட்டிக்கொண்டிருக்கின்றன. அதன் பற்கள் வெளியே தெரிகின்றன. அந்தப் பற்கள் ஈவிரக்கம் அற்றவை.


படத்தில் இந்தப் பிராணி அமைதியாகத் தன்னுடைய இறைச்சித் துண்டைக் கடித்துக்கொண்டிருக்கிறது. இதன் தாடையில் பைபோன்ற அமைப்பு உண்டு. இந்தப் பையில் அதன் பற்கள் மறைந்திருக்கும். கத்திப்பல் பூனைக்கு இந்தப் பை அவசியம். இல்லையென்றால் அடர்த்தியான புற்களில் பட்டு அதன் பற்கள் கூர்மையிழந்துவிடும்.----------------------------------------------------------------------------------------------------------ரஷ்யாவின் தொல் கதைகளில் "இந்திரிக்' எனும் மிருகத்தைப் பற்றிச் சொல்வதுண்டு. அது, ஆறுகளைத் தடுக்கக்கூடிய, மலைகளை அசைக்கக்கூடிய மிகப் பெரிய மிருகம். அதனால்தான் விஞ்ஞானிகள் மிகப் பெரிய காண்டாமிருகத்தின் எலும்புகளை பூமியில் பார்த்தபோது, அதற்கு "இந்திரிக்கோதேரியம்' என்று பெயர் சூட்டினார்கள். அதன் வயிற்றுக்கு அடியில் ஒரு நீர் யானை தாராளமாக நடந்துபோக முடியும். இந்திரிக்கோதேரியம் ஒரு காண்டாமிருகம் என்றபோதிலும், தோற்றத்திலும் பழக்கவழக்கங்களிலும் அது உண்மையில் ஒரு ஒட்டகச்சிவிங்கியே. அது மரங்களுக்கு நடுவில் நடந்து, இலைகளைப் பிடுங்கி விழுங்கியது. இதைக் காண்டாமிருகம் என்று எப்படிச் சொல்வது?நீண்ட கால்களைக்கொண்ட காட்டுப் பன்றிக்கு "என்டெலெடோன்' என்று பெயர். இது நீர் யானையின் பழக்கவழக்கங்களைக்கொண்டது. ஆற்றுத் தண்ணீர் தேங்கி நிற்கின்ற இடங்களில் நாள் முழுதும் படுத்துப் புரண்டு விளையாடும். இரவு நேரங்களில் புல்வெளிகளில் அலைந்து திரியும். இது உரோமத்தையும், தந்தங்களையும் கொண்டிருக்கும். சாறுள்ள வேர்கள், பறவைகளின் முட்டைகள், பாம்புகள் மற்றும் கண்ணில் படுகின்ற அனைத்தையும் இது சாப்பிடும்.

 
"பிளாட்டிபெலோடோன்' என்ற ஒரு மிருகமும் இருந்தது. இது தோற்றத்தில் நீர் யானையைவிட, காண்டாமிருகத்தையே ஒத்திருந்தது. இதன் வாய்ப்பகுதி, மண் வாரும் இயந்திரத்தின் முன் பகுதியைப்போலவே இருக்கும். இது வாயைத் திறந்து நீர்ச் செடிகளை விழுங்கிவிட்டுப் பிறகுதான் அவற்றைக் கடித்துச் சாப்பிடும். அதன் தட்டையான தந்தங்கள் வேர்களைப் பிடுங்குவதற்கு உதவியாக இருந்தன. "பிளாட்டிபெலோடோன்' என்ற வார்த்தைக்கு தட்டையான பற்களைக்கொண்ட பிராணி என்று பெயர்.


நன்றி:தினமணி

Post Comment


4 comments:

Harini Nathan said...

அருமையான பதிவு டிலீப்

டிலீப் said...

//Harini Nathan said...
அருமையான பதிவு டிலீப்//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஹரிணி

roshaniee said...

நல்ல தேடல் வாழ்த்துக்கள் .
புதிய விடயங்களை அறிந்து கொண்டேன்

டிலீப் said...

//roshaniee said...
நல்ல தேடல் வாழ்த்துக்கள் .
புதிய விடயங்களை அறிந்து கொண்டேன்//

நாம் தேடினால் அறியாத ஒன்றையும் அறிந்து கொள்ள முடியும்.
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே றொசானி

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.