அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

காலிஸ் இரட்டை சதம்


Jacques Kallis reaches his first double-century in Tests

செஞ்சுரியன் டெஸ்டில் இந்திய அணி இக்கட்டான நிலையில் உள்ளது. வருண பகவான் கைகொடுத்தால் மட்டுமே தோல்வியிலிருந்து தப்ப முடியும். இரண்டாவது இன்னிங்சில் சேவக், காம்பிர் இணைந்து அதிரடி துவக்கம் தந்தனர். முன்னதாக காலிஸ் இரட்டை சதம் அடிக்க, தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 620 ரன்கள் குவித்தது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் செஞ்சுரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 136 ரன்களுக்கு சுருண்டது. <இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்ரிக்க அணி 2 விக்கெட்டுக்கு 366 ரன்கள் எடுத்திருந்தது.
நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. காலிஸ், ஆம்லா தங்களது அபார ஆட்டத்தை தொடர்ந்தனர். மூன்றாவது விக்கெட்டுக்கு 230 ரன்கள் சேர்த்த நிலையில், ஆம்லா(140), இஷாந்த் சர்மா வேகத்தில் வெளியேறினார். அடுத்து வந்த டிவிலியர்ஸ் "கம்பெனி' கொடுக்க, காலிஸ் கலக்கினார்.


டிவிலியர்ஸ் அதிரடி:
தற்போது சூப்பர் "பார்மில்' இருக்கும் டிவிலியர்ஸ், இந்திய பந்துவீச்சை ஒருகை பார்த்தார். இளம் உனத்கட், இஷாந்த் சர்மா உள்ளிட்ட வேகங்களின் பந்துகளை பவுண்டரிக்கு பறக்க விட்டார். இதையடுத்து சுழலுக்கு மாறியும் பலன் கிடைக்கவில்லை. ஹர்பஜன் பந்திலும் ஒரு இமாலய சிக்சர் அடித்து மிரட்டினார். பின் ரெய்னாவின் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர் அடித்த டிவிலியர்ஸ் 75 பந்துகளில் சதம் கடந்தார். இது டெஸ்ட் அரங்கில் இவரது 12வது சதம். இதே ஓவரில் காலிஸ் ஒரு சிக்சர் அடிக்க, ஸ்கோர் "ஜெட்' வேகத்தில் உயர்ந்தது.

முதல் இரட்டை சதம்:
 உனத்கட் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய காலிஸ், டெஸ்ட் அரங்கில் தனது முதலாவது இரட்டை சதம் அடித்து அசத்தினார். இதுவே டெஸ்ட் போட்டிகளில் இவரது அதிகபட்ச ஸ்கோர். இதற்கு முன் 189 ரன்கள்(எதிர், ஜிம்பாப்வே, 2001) எடுத்திருந்தார். நான்காவது விக்கெட்டுக்கு காலிசுடன் சேர்ந்து 224 ரன்கள் சேர்த்த நிலையில், இஷாந்த் சர்மா பந்தில் டிவிலியர்ஸ் (129) அவுட்டானார். தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சை 4 விக்கெட்டுக்கு 620 ரன்களுக்கு "டிக்ளேர்' செய்தது. இதன் மூலம் 484 ரன்கள் முன்னிலை பெற்றது. காலிஸ்(201) அவுட்டாகாமல் இருந்தார்.இந்தியா சார்பில் இஷாந்த், ஹர்பஜன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

Jacques Kallis is ready to hit the golf course after getting his maiden Test double-century


பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு சேவக், காம்பிர் இணைந்து சூப்பர் அடித்தளம் அமைத்தனர். முதல் விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்த போது சேவக் (63), ஹாரிஸ் சுழலில் சிக்கினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த காம்பிர் (80), ஸ்டைன் வேகத்தில் வெளியேற சிக்கல் ஏற்பட்டது. போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் சற்று முன்னதாக நிறுத்தப்பட்டது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்து, 294 ரன்கள் பின்தங்கி இருந்தது. டிராவிட் (28), இஷாந்த் சர்மா (7) அவுட்டாகாமல் உள்ளனர். இன்னும் 2 நாட்கள் மீதம் இருப்பதால், இந்திய அணி இக்கட்டான நிலையில் உள்ளது. டிராவிட், சச்சின், லட்சுமண் போன்றோர் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் "டிரா' செய்யலாம். தவறினால், மழை கைகொடுத்தால் மட்டுமே இந்திய அணி தோல்வியிலிருந்து தப்ப முடியும்.

Virender Sehwag lines up for a big hit

ரசிகர் வெளியேற்றம்
இந்திய வீரர் ஸ்ரீசாந்த் "பீல்டிங்' செய்து கொண்டிருந்த போது, அவரை நோக்கி ரசிகர் ஒருவர் தகாத வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அம்பயர்களிடம் ஸ்ரீசாந்த் புகார் கூறினார். உடனே பாதுகாப்பு படையினரால் அந்த ரசிகர் வெளியேற்றப்பட்டார். இது குறித்து ஐ.சி.சி., ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவின் அதிகாரி ஆரி டி பியர் கூறுகையில்,""ஸ்ரீசாந்தை விமர்சித்த ரசிகர் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் இனவெறியை தூண்டும் வகையில் பேசினாரா என்பது பற்றி தற்போதைக்கு எதுவும் தெரியவில்லை,''என்றார்.

அதிவேக சதம்
இந்திய பந்துவீச்சை சிதறடித்த டிவிலியர்ஸ் 75 பந்துகளில் சதம் அடித்தார். இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் அதிவேக சதம் அடித்த தென் ஆப்ரிக்க வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் டெனிஸ் லிண்ட்சே(எதிர் ஆஸி., 1966-67), ஜான்டி ரோட்ஸ்(எதிர் வெ.இண்டீஸ், 1998-99), ஷான் போலக்(எதிர் இலங்கை, 2000-01) ஆகியோர் 95 பந்துகளில் சதம் எட்டியிருந்தனர். தவிர, சர்வதேச அளவில் அதிவேக சதம் அடிக்கும் 10வது வீரரானார். இப்பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ் முதலிடத்தில்(56 பந்து, எதிர் இங்கிலாந்து, 1985-86) உள்ளார்.

இளமை ரகசியம்
 தென் ஆப்ரிக்க வீரர் காலிஸ்(35 வயது) தற்போது மிகவும் இளமையாக காணப்படுகிறார். இதற்கு சேவக் போன்று இவரும் "ஹேர் டிரான்ஸ்பிளான்ட்'(தலைமுடி பதியன் முறை) செய்து கொண்டதே முக்கிய காரணம். இது குறித்து சக வீரர் மார்னே மார்கல் கூறுகையில்,""காலிஸ் 20 வயது குறைந்து காணப்படுகிறார்,''என்றார்.
இந்திய வீரர் டிராவிட் கூறுகையில்,""தலையில் முடி இருந்தாலும் இல்லாவிட்டாலும் காலிசின் ரன் தாகம் மட்டும் குறையவில்லை. இப்போது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார். இனி கண்ணாடி முன் அதிக நேரம் செலவிடுவார் என நினைக்கிறேன்,''என்றார்.


ஸ்கோர் போர்டு
முதல் இன்னிங்ஸ்
இந்தியா    136
தென் ஆப்ரிக்கா

ஸ்மித்(கே)தோனி(ப)ஹர்பஜன்    62(87)
பீட்டர்சன்(கே)காம்பிர்(ப)ஹர்பஜன்    77(114)
ஆம்லா-(கே)தோனி(ப)இஷாந்த்    140(202)
காலிஸ்-அவுட் இல்லை-    201(270)
டிவிலியர்ஸ்(கே)தோனி(ப)இஷாந்த்    129(112)
உதிரிகள்    11
மொத்தம் (130.1 ஓவரில் 4 விக்.,)    620
விக்கெட் வீழ்ச்சி: 1-111(ஸ்மித்), 2-166(பீட்டர்சன்), 3-396(ஆம்லா), 4-620(டிவிலியர்ஸ்). 
பந்து வீச்சு: ஸ்ரீசாந்த் 24-1-97-0, இஷாந்த் 27.1-2-120-2, உனத்கட் 26-4-101-0, ஹர்பஜன் 36-2-169-2, ரெய்னா 7-0-77-0, சச்சின் 10-1-51-0.

இரண்டாவது இன்னிங்ஸ்
இந்தியா

காம்பிர் எல்.பி.டபிள்யு., (ப)ஸ்டைன்    80 (124)
சேவக் (கே)ஸ்மித்(ப)ஹாரிஸ்    63(79)
டிராவிட்-அவுட் இல்லை-    28(48)
இஷாந்த் -அவுட் இல்லை-    7(16)
உதிரிகள்    12
மொத்தம்    (44.1 ஓவரில் 2விக்.,)    190
விக்கெட் வீழ்ச்சி: 1-137(சேவக்), 2-170 (காம்பிர்).
பந்து வீச்சு: ஸ்டைன் 12-4-38-1, மார்கல் 11-1-38-0, டிசோட்சபே 9.1-1-48-0, ஹாரிஸ் 8-0-34-1, காலிஸ் 4-1-23-0



நன்றி தினமலர்





Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.