அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

2010ன் சிறந்த 10 படங்கள்






2010-ம் ஆண்டும் முடிய போகுது இந்த வருடத்துக்குல எவ்வளவோ திரைபடங்கள் ரீலிஸ் ஆகி இருக்குது.அதுல சில படங்கள் வெற்றியடைந்து இருக்கு சில படங்கள் தோல்வியடைந்தும் இருக்கு.2010-ல் பெரும் வெற்றியையும் வசூலையும் அள்ளி கொடுத்த படங்களை நான் வரிசை படுத்த போகிறேன்.




பையா


இப்படம் இயக்குனர் லிங்குசாமியின் சொந்த கம்பனிக்காக தானே தயாரித்து இயக்கியது.சிவகுமாரின் இரண்டாவது மகன் கார்த்தி மற்றும் தமன்னா நடிகர் நடிகைகளாக நடித்திருந்தனர்.இப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது.யுவனின் இசை பெரிதும் எல்லோராலும் பேசப்பட்டது.பெங்களுரில் இருந்து மும்பாய்க்கு போகும் போது இடம் பெறும் சம்பவங்களை கதையாக அமைத்துள்ளார் லிங்கு.


மைனா


மைனாவை பிரபு சொலமன் இயக்க இமான் இசையமைத்தார்.மிகவும் வித்தியாசமான காதல் கதை தற்போழுது திரையரங்குகளில் வசூல் சாதனையுடன் ஓடி கொண்டு இருக்கிறது.வித்தார்த் மற்றும் அமலா நடித்திருந்தனர்.


ராவணன்



இராவணன் மிகவும் வித்தியாசமான இராமாயண கதையை தழுவி தற்காலத்துக்கு ஏற்ற விதமாக படமாக்கப்பட்டது.இராவணனாக விக்ரம் சீதையாக உலக அழகி ஜஸ்வராய் நடித்திருந்துனர்.இயக்குனர் மணிரத்தின் கடுமையான உழைப்பு படத்தில் நன்றாக பிரதிபலித்தது.சந்தோஷ் மற்றும் மணிகண்டனின் ஒளிப்பதிவு அருமை.ஒஸ்கார் தமிழனின் இசையில் உசுரே போகுது… உசுரே போகுது…பாடல் பார்க்கின்றவர்களின் உசுரையே போக வைத்தது.


சுறா


இந்த வருடம் வெளியான தளபதியின் ஒரே படம் சுறா.தம்மன்னா முதன் முதலாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார்.சங்கிலி முருகனின் தயாரிப்பில் ராஜ்குமார் இயக்கிருந்தார்.


சிங்கம்


பொலிஸ் என்றா சிங்கம் மாதிரி இருக்கனும் என்று சொல்லி இருக்குறார் இயக்குனர் ஹரி.வசூலில் சாதனை படைத்த திரைபடம்.இப்படத்தில் சூர்யா அனுஷ்கா நடித்திருந்தனர்.தேவ ஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள் இனிமை.


போஸ் என்கிற பாஸ்கரன் 



போஸ் என்கிற பாஸ்கரன் சமீபத்தில் வந்து பெரும் வெற்றி பெற்ற காதல் காமெடி திரைபடம்.ஆர்யா மற்றும் சந்தானம் காமெடியில் பின்னி பெடல் எடுத்தனர்.இதில் “நண்பேன்டா” மிகவும் பிரபலமடைந்த சொல்.நயன்தாரா ஹரோயினாக நடித்திருந்தார்.யுவனின் இசையில் "யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் "பாடல் செல்போன் ரிங்கிங் டொன்னாகவே மாறிவிட்டது.


தமிழ் படம்


தமிழ் படம் இன்றைய சினிமா எப்படி செல்கிறது என்று முழுநீள காமெடியாகவே இயக்கியிருந்தார் அறிமுக இயக்குனர் அமுதன்.
சென்னை சரோஜா புகழ் சிவா மற்றும் டிஷா நடித்திருந்தனர்.சினி துறையில் இருக்கும் அனைவரையும் வாங்கு வாங்கு என்று வாங்கிய படம்.


மதுராசபட்டினம்



மதுராசபட்டினம் இவ்வருடத்தில் வெளியாகி வெற்றியும் நல்லதொரு வரவேற்ப்பும் பெற்ற வரலாற்று காதல் படம்.இவ்வருடம் ஆர்யாவுக்கு ராசியானதாக அமைந்தது.அவர் நடித்த அனைத்து படமும் வெற்றி சிக்குபுக்குவை தவிர்த்து.இப்படத்தை விஜய் இயக்க ஜீ.வி.பிரகாஷ் அருமையாக இசையமைத்து இருந்தார்.பூக்கள் பூக்கும் தருணம் பாடல் இவ்வருடத்தில் அனேகரால் கேட்கப்பட்ட பாடல்.ஹீரோயின் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அமீ ஜக்ஸன்.



விண்ணைத் தாண்டி வருவாயா


இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே வெளியாகி மாபெரும் வெற்றியை அடைந்த திரைப்படம் விண்ணைத் தாண்டி வருவாயா.கௌதம் மேனன் மின்னலே படத்துக்கு பிறகு இயக்கிய இனிமையான காதல் கதை.சிலம்பரசன் திரிஷா உம்மையான காதலர்களாகவே நடித்திருந்தனர்.ஏ.ஆர்.இசை என்றாலே அப்பட பாடல்கள் ஹிட் என்று அனைவரும் அறிவோம்.ஒஸ்கார் விருதுக்கு பிறகு இசையமைத்த முதல் தமிழ் திரைப்படம் விண்ணைத் தாண்டி வருவாயா.ஓசன்னா... பாடல் இனிமை.



எந்திரன்


முதலாம் இடத்தை எப்படம் பிடிக்கும் என்று இப்பதிவை வாசிக்கும் போதே நீங்கள் ஊகித்து இருப்பிர்கள்.மூன்று வருட உழைப்பு.பிரம்மாண்டத்துக்கு பெயர் போன இயக்குனர். பெரிய தயாரிப்பு நிறுவனம்.சினிமா துறையின் சூப்பர் ஸ்ட்டார்.இசை மேதை இவ்வளவும் ஒரு நேர் கோட்டில் சந்தித்தால் பெறுபேறு மகா வெற்றி.இந்த வருடத்தின் இறுதியில் வெளியாகி இந்தியா மற்றும் அல்ல உலகம்புறாகவும் வசூலில் மாபெரும் சாதனை படைத்த திரைப்படம் சூப்பர் ஸ்ட்டாரின் எந்திரன்.பிரம்மாண்டத்தின் பிதாமகன் சங்கர்.சன் பிக்சார் தயாரிக்க முதன் முறையாக ஜஸ்வராய் ரஜனியுடன் இப்படத்தில் ஜோடி சேர்ந்தார்.சூப்பர் ஸ்ட்டார் இருவேடங்களில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்திருந்தார்.கிராப்பிக் படத்துக்கு பெரும் பக்கபலம் என்றால் ரகுமானின் இசை மற்றுமொரு பெரும் தூண்ணாக அமைந்தது.அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் இப்படத்தின் தற்போதைய வசூல் - 2,02,38,075 ரூபாய்கள் ( நீங்களே கவுண்ட் பண்ணுங்க )




உலக நாயகன் கமலின் மன்மதன் அன்பு தற்போழுது தான்
வெளியாகியுள்ளது. எனவே அப்படம் எனது Top Ten 
இடம்பெறவில்லை.

டிஸ்கி: நான் பார்த்து ரசித்த படங்களை மட்டுமே வரிசைபடுத்;தியுள்ளேன்.இன்னும் பார்த்து இந்த லிஸ்டில் வராத படங்கள் நிறையவே இருக்கிறது.




Post Comment


12 comments:

Harini Resh said...

அருமை டிலீப்
என்னை பொறுத்தவரை சுறா தவிர மீதி படங்களை பார்த்துவிட்டேன்
சரியான தரப்படுத்தல் தான் :)
மைனா,மதுராசபட்டினம், விண்ணை தாண்டி வருவாயா அருமையான படங்கள்
ம் மைனா 9 வது இல்லாமல் கொஞ்சம் முன்வரிசையில் வந்திருக்கலாம்
என்னை கேட்டல் இதில் அங்காடி தெரு படத்தையும் சேர்த்திருப்பேன் :)

நண்பேன்டா :)

Ramesh said...

முதல் மூன்று இடங்களில் உள்ள படங்கள் எனக்கும் பிடித்தவை நண்பரே... மதராசபட்டிணம் மிகவும் பிடிக்கும்..


எந்திரன் ஏந்திரனாயிருக்கு... கவனிங்க..

டிலீப் said...

//அருமை டிலீப்
என்னை பொறுத்தவரை சுறா தவிர மீதி படங்களை பார்த்துவிட்டேன்
சரியான தரப்படுத்தல் தான் :)
மைனா,மதுராசபட்டினம், விண்ணை தாண்டி வருவாயா அருமையான படங்கள்
ம் மைனா 9 வது இல்லாமல் கொஞ்சம் முன்வரிசையில் வந்திருக்கலாம்
என்னை கேட்டல் இதில் அங்காடி தெரு படத்தையும் சேர்த்திருப்பேன் :)

நண்பேன்டா :)//

ஹரிணி வந்து இருக்கலாம் ஆனாலும் வசூலில் சுறாவை விட மைனா குறைவு.
நானும் இன்னும் அசல் பார்க்கவில்லை.
நிறைய படங்கள் விடுபட்டுள்ளது. அங்காடிதெரு, பான காத்தாடி, நான் மகான் இல்லை.

டிலீப் said...

//பிரியமுடன் ரமேஷ் said... [Reply to comment]
முதல் மூன்று இடங்களில் உள்ள படங்கள் எனக்கும் பிடித்தவை நண்பரே... மதராசபட்டிணம் மிகவும் பிடிக்கும்..

எந்திரன் ஏந்திரனாயிருக்கு... கவனிங்க//

மதராசபட்டிணம் எனக்கும் பிடிக்கும் நண்பரே
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ரமேஸ்

Philosophy Prabhakaran said...

நீங்க விஜய் ரசிகருன்னுரதால சுராவை எல்லாம் லிஸ்டில் சேர்த்திருக்கக் கூடாது... என்னுடைய top 25 லிஸ்டையும் வந்து பாருங்க...

டிலீப் said...

//philosophy prabhakaran said...
நீங்க விஜய் ரசிகருன்னுரதால சுராவை எல்லாம் லிஸ்டில் சேர்த்திருக்கக் கூடாது... என்னுடைய top 25 லிஸ்டையும் வந்து பாருங்க..//

நண்பா நான் விஜய் ரசிகன்தான்.ஆனாலும் எல்லாரும் மொக்கை என்று சொல்றாங்க பட் எனக்கு மொக்கையா தெரியல.அதே போல் சுறாவின் வசூலையும் போடுகிறேன் பாருங்கள்.

1 Enthiran 2,02,38,075
2 Manmadhan Ambu 94,36,591
3 Raavanan 88,46,206
4 Singam 77,73,865
5 Naan Mahaan Alla 73,41,015
6 Sura 71,51,083
7 Paiyaa 70,99,863
8 Aayirathil Oruvan 70,04,264
9 Vinnaithaandi Varuvaayaa 64,66,062
10 Aasal 62,53,908

நான் பார்த்த படங்களின் வசூலையும் கணக்கில் எடுத்தே இந்த Top 10 யை வரிசைப்படுத்தினேன்
சுறா மொக்கை என்றாலும் வசூலில் பையா,விண்ணைத் தாண்டி வருவாயா, அசலை விட முன்னிலையில் தான் உள்ளது

பிரபா உங்க தள top 25 பார்த்ததும் தான் விளங்கியது தாங்கள் அஜீத் ரசிகனென்று.
சபாஷ் சரியான போட்டி.

Jana said...

நல்லபடத்தெரிவுகள்தான் ஆனால் அதற்குள்ள எட்டிப்பார்க்கும் சுறா...ரொம்ப உதைக்குதே.

டிலீப் said...

//Jana said...
நல்லபடத்தெரிவுகள்தான் ஆனால் அதற்குள்ள எட்டிப்பார்க்கும் சுறா...ரொம்ப உதைக்குதே//

விஜய் மேல அப்பிடி என்ன அண்ணா உங்கள் கோவம் .....

Unknown said...

daai dubakur suravai listil potte nee

aayirathil oruvan ennum arumaiyana kaviyathai

maranthuthuttiyee.neeyum un listum

டிலீப் said...

//selvanayagam said... [Reply to comment]
daai dubakur suravai listil potte nee
aayirathil oruvan ennum arumaiyana kaviyathai
maranthuthuttiyee.neeyum un listum//

ahaha joo.....ne enna ajith fan na ??
aayirathil oruvan enna ya katha iruku....
allam pithal attam .....thann.........
kaviyam endu ondum eillaaa.......

anuthinan said...

சுறாவின் இடம் மட்டுமே எனக்கு இடிக்கிறது. குறைந்தது அந்த இடத்தில் அங்காடி தெரு படத்தை தரபடுத்தி இருக்கலாம். (என்னுடைய கருத்து இது!!)

டிலீப் said...

//Anuthinan S said...
சுறாவின் இடம் மட்டுமே எனக்கு இடிக்கிறது. குறைந்தது அந்த இடத்தில் அங்காடி தெரு படத்தை தரபடுத்தி இருக்கலாம். (என்னுடைய கருத்து இது!!)//

ஹா..ஹா....
நான் இன்னும் அங்காடி தெரு பார்க்கவில்லை
கருத்துக்கு நன்றி அனுதினன் ....

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.