அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

தகவல் துளிகள்


akhal-teke
இருபத்தையாயிரம் வருடங்களுக்கு முன்பு எங்கும் மிகவும் குளிராக இருந்தது. எங்கு பார்த்தாலும் பனிக்கட்டி. எல்லா இடங்களையும் பனி மூடியிருந்தது. வடக்கு ஸ்டெப்பியில் மிகவும் குட்டையான மரங்களும் புதர்ச் செடிகளும் காணப்பட்டன. ஆப்பிரிக்காவில் போலவே இங்கும் யானைகளும் காண்டாமிருகங்களும் இந்த மரங்களுக்கிடையே நடந்து சென்றுகொண்டிருந்தன. ஆனால், இந்த மிருகங்களின் உடலிலிருந்து தடிமனான சிவப்பு உரோமம் கற்றை கற்றையாக பூமியை நோக்கிக் கீழே தொங்கிக்கொண்டிருந்தது. இருபத்தையாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருந்த, அதிகமான உரோமத்தைக் கொண்டிருந்த இந்த யானைக்குக் கம்பளியானை என்று பெயர். அது தன்னுடைய தந்தங்களால் பனியைத் தோண்டி, சென்ற பருவத்தில் முளைத்த தாவரங்களைச் சாப்பிட்டது. அது இந்த உணவை மெதுவாகக் கடித்துச் சாப்பிட்டது. இந்தக் கம்பளியானைக்கு நான்கு பற்கள் இருந்தன. ஆனால், ஒவ்வொரு பல்லும் மிகவும் பெரிதாக இருந்தது. அதன் காதுகள்  மிகவும் சிறியவை. இன்றைக்கு இருக்கும் யானையின் விசிறி போன்ற காதுகள் அதற்குத் தேவையில்லை. இந்தக் காலத்தில் காண்டாமிருகங்களும் இருந்தன. அவற்றின் உடல்களிலும் உரோமம் அடர்த்தியாக இருந்தது. அதனால் இவற்றை உரோமக் காண்டாமிருகங்கள் என்று குறிப்பிடுகிறார்கள். கவண் கொம்புகளுடைய மான்களும் குகைச் சிங்கங்களும் இருந்தன. ஆனால், இவை ராட்சச மிருகங்களைப்போல பெரிதாக இருந்தன.அக்கல் தெக்கி (AK​H​AL TE​KE)

துருக்மெனிஸ்தானின் தேசிய சின்னம்தான் அக்கல் தெக்கி எனும் குதிரை. அக்கல் தெக்கி எனும் பழங்குடியினர் வளர்க்கிற குதிரைதான் இது. எத்தகைய மோசமான காலச் சூழலிலும் வாழக்கூடிய திறமை பெற்றவைதான் இந்த அக்கல் தெக்கி குதிரைகள். மாமன்னர் அலெக்ஸôண்டர் பயன்படுத்திய குதிரையான ப்யூஸிபாலஸ் எனும் குதிரையும் இந்த இனத்தைச் சேர்ந்த குதிரைதான்.


விசா

ஒரு நாடு, வேற்று நாட்டவர் வருவதற்காக வழங்குகிற அனுமதிப் பத்திரம்தான் விசா. பாஸ்போர்ட் வைத்திருக்கிற யார் வேண்டுமானாலும் விசா வேண்டி விண்ணப்பிக்கலாம். அதாவது, ஒரு நாட்டைச் சேர்ந்த குடிமகன் வேறொரு நாட்டிற்குச் செல்ல வேண்டுமென்றால் அவரிடம் பாஸ்போர்ட்டும் விசாவும் இருக்கவேண்டும். உதாரணமாக, நீங்கள் அமெரிக்காவிற்குப் போக வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது உங்களிடம் இந்திய அரசாங்கம் கொடுக்கும் பாஸ்போர்ட்டும், அமெரிக்க அரசாங்கம் கொடுக்கும் விசாவும் இருக்கவேண்டும். நம்முடைய நாட்டில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களில் விண்ணப்பித்தால் நமக்கு பாஸ்போர்ட் கிடைக்கும். இதற்காக, நாம் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி ஒரு விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். பாஸ்போர்ட் என்று அழைக்கப்படுகிற சிறு புத்தகத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

விசா பெற வேண்டும் என்றால், நாம் எந்த நாட்டிற்குச் செல்ல வேண்டுமோ அந்த நாட்டு விசா வழங்கும் அலுவலகத்திற்கு நாம் ஒரு விண்ணப்பம் கொடுக்கவேண்டும். அந்தந்த நாடுகளின் தூதரகங்களிடமோ, விசா அளிக்கும் அலுவலகங்களான விசா கான்ஸலேட்டுகளிடமோ நாம் விசா வேண்டி விண்ணப்பிக்கலாம். அதாவது, அமெரிக்கா செல்ல வேண்டும் என்றால், இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் விசா கான்ஸலேட்டிடம் நாம் விசாவிற்காக விண்ணப்பிக்க வேண்டும்.

"ஆன் அரைவல் விசா' என்ற ஒரு ஏற்பாடும் நடைமுறையில் இருக்கிறது. சில நாடுகள் பரஸ்பரம் ஏற்படுத்திக்கொள்கிற ஒரு ஒப்பந்தம் இது. அ எனும் நாட்டிற்கும் ஆ எனும் நாட்டிற்கும் இடையே இத்தகைய ஒரு ஒப்பந்தம் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது, அ நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் ஆ நாட்டிற்கும், ஆ நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் அ நாட்டிற்கும் விசா இல்லாமலேயே போய் வரலாம். இந்தியாவிற்கு, இலங்கை, மியான்மர், பூட்டான் முதலான சில நாடுகளுடன் இந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கிறது.


மட்பாண்டங்கள்

மனிதனின் நாகரிக வளர்ச்சி எல்லாம் மண்ணுடன் தொடர்புடையதாயிருக்கிறது. மண்ணிலிருந்து எடுத்த கற்கள்தான் மனிதனின் முதலாவது ஆயுதங்களாயிருந்தன.  மனிதர்கள் மண் பாத்திரங்களைப் பல விதமான தேவைகளுக்குப் பயன்படுத்தி வந்தார்கள். புராதனமான இந்த மண் பாத்திரங்கள் செய்யும் கலை, பலவிதமான மாற்றங்களுடன் இன்றும் நிலைத்திருக்கிறது. இந்தியாவில் சிந்து நதி நாகரிகம் முதற்கொண்டே மண் பாத்திரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. களிமண் குழைத்து தக்க வடிவத்தில் அழகான பாத்திரங்கள் சுட்டெடுக்கும் கலை, காலந்தோறும் வளர்ந்து வந்தது.  உணவு சமைக்கவும், தானியங்கள் சேகரிக்கவும், தண்ணீர் எடுத்து வைக்கவும், விவசாயத்திற்கு நீர் எடுத்து ஊற்றுவதற்கும். பூஜைப் பொருட்கள் செய்வதற்கும் மட்டுமல்ல, அலங்காரமாகப் பயன்படுத்துவதற்காகவும் மண் பாத்திரங்களைத் தயாரித்து வந்தார்கள்.


இன்று மண் பாத்திரங்களின் மற்றெல்லா பயன்பாடுகளும் மறைந்து, அலங்காரத்திற்காகவே பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. லட்சக்கணக்கானோர், நம் பாரம்பரியத்தின் தொடர்ச்சி விட்டுப்போகாமல் இன்றும் அலங்கார மண்பாத்திரங்களைத் தயாரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
பழைய காலங்களில் மண் மட்டுமே பயன்படுத்தி வீடுகள் கட்டினார்கள். மண் சுவர் அமைத்து, மண்ணால் மேற்கூரை அமைத்து, அதன் மேல் வைக்கோல் வேய்ந்தால் வீடாகிவிடும். இன்றும் சில இடங்களில் ஆதிவாசிகள் இவ்வகையாகத்தான் வீடுகள் கட்டுகிறார்கள்.


குகை ஓவியங்கள்

புராதன குகை ஓவியங்களில்  பெரும்பாலானவை சுண்ணாம்புப் பாறைகளால் ஆன குகைகளில்தான் வரையப்பட்டன. இந்தப் பாறைகளின் சிறப்பான தன்மைகளால்தான், அவற்றில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்களின் நிறங்கள் இப்போதும் மங்காமல் நிலைத்திருக்கின்றன. இந்த ஓவியங்களின் நிறங்கள் மங்கவில்லை என்பது மட்டும் அல்ல, காலம் செல்லச் செல்ல ஓவியத்தின் நிறங்கள் மேலும் பொலிவடைகின்றன. இயற்கையிலிருந்து நேரடியாக எளிதில் கிடைக்கும் நிறங்களான சிவப்பு, கருப்பு, தவிட்டு நிறம், மஞ்சள் ஆகிய நிறங்களைத்தான் குகை ஓவியங்களில் மிக அதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இத்தகைய நிறங்கள் கனிம ஆக்ûஸடுகளாகவும், பாஸில் கார்பனின் வடிவத்திலும் இயற்கையிலிருந்து கிடைத்தன. காலம் செல்லச் செல்ல நம் மூதாதையர்கள், மேற்குறித்த நிறங்களுடன் மிருகக் கொழுப்பு சேர்த்து மேலும் சிறப்பான நிறங்களைச் செய்தார்கள். கூர்மையான கல் கத்திகள் கொண்டு குகைச் சுவர்களில் கீறிய சித்திரங்களில் நிறங்களை பலமாக ஊதிப் படியச் செய்தார்கள். சுண்ணாம்புக் கற்சுவர் இந்த நிறங்களை மெதுவாக உறிஞ்சிக்கொள்வதன் காரணமாக நிறங்கள் நிரந்தரமாக நிலைத்திருக்கின்றன. பாறையில் இருக்கும் ஈரம், நிறம் மங்காமல் இருப்பதற்கு உதவுகிறது
நன்றி தினமணி


Post Comment


10 comments:

nis said...

அறிந்திராத தகவல்கள் டிலீப்

Mohamed Faaique said...

superb....

ம.தி.சுதா said...

புதுமையான தகவல்களுடன் ஒரு கலக்கல் தான் டிலீப் வாழ்த்துக்கள்..

Harini Nathan said...

அறிந்திராத தகவல்கள், கலக்கல் டிலீப் :)

மகாதேவன்-V.K said...

வாக்குகள் போட்டாச்சு

டிலீப் said...

//nis said...
அறிந்திராத தகவல்கள் டிலீப்//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி nis

டிலீப் said...

//Mohamed Faaique said...
superb..//

Thank you Mohamed

டிலீப் said...

//ம.தி.சுதா said...
புதுமையான தகவல்களுடன் ஒரு கலக்கல் தான் டிலீப் வாழ்த்துக்கள்//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சுதா

டிலீப் said...

//Harini Nathan said...
அறிந்திராத தகவல்கள், கலக்கல் டிலீப் :)//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஹரிணி

டிலீப் said...

//மகாதேவன்-V.K said...
வாக்குகள் போட்டாச்சு//

கருத்துக்கும் வருகைக்கும் மற்றும் வாக்கு
நன்றி மகாதேவன்

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.