அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube


படிமம்:Neanderthaler Fund.png


நியண்டர்தால் மனிதர்கள் சமைத்த தாவர உணவை உண்டதாக அவர்களின் எச்சங்களை ஆராய்ந்த வரலாற்றாளர்கள் தெரிவித்துள்ளனர்.ஐக்கிய அமெரிக்காவின் ஆய்வாளர்கள் நியண்டர்தால் மனிதனின் பற்களில் சமைத்த தாவர உணவு மீதிகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். முன்னர் நடத்தப்பட்ட ஆய்வுகள் நியண்டர்தால் மனிதர் மாமிச உணவை மட்டுமே உண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த மனிதர்களின் எலும்புகள் மீது நடத்தப்பட்ட வேதியியல் ஆய்வுகளின் படியே இம்முடிவுகளை முன்னர் எடுத்திருந்தனர். பனி யுகத்தின் போது பெரும் மிருகங்கள் அழிந்தமையே இம்மனிதர்களின் அழிவுக்கும் காரணம் என சிலரால் காரணம் கூறப்பட்டது.


புரோசிடிங்சு ஆஃவ் த நேசனல் அக்காடமி ஆஃவ் சயன்சு என்ற அறிவியல் இதழில் நியண்டர்தால் மனிதர் பற்றிய புதிய ஆய்வு குறித்த கட்டுரை வெளியாகியுள்ளது.

நியண்டர்தால் (Neanderthal) மனிதர் ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் வாழ்ந்திருந்த ஹோமோ வகை இனமாகும். 24, 000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் இவ்வினம் அழிந்துபோனது. நியண்டர்தால் மனித எச்சங்கள் செருமனியின் நியண்டர்தால் என்னும் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறான். இவன் நெருப்பை பயன்படுத்தியதாகவும், குகைகளில் வாழ்ந்ததாகவும் சொல்லப்படுகிறது.

நன்றி விக்கி...

Post Comment


4 comments:

Harini Nathan said...

அருமையான தகவல் டிலீப் :)

தங்கம்பழனி said...

<> நியான்தர்தால் மனிதனின் காரணப்பெயர் அறிந்துகொண்டேன்..தகவலுக்கு மிக்க நன்றி!.. வாழ்த்துக்கள்..!

டிலீப் said...

//Harini Nathan said...
அருமையான தகவல் டிலீப் :)//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஹரிணி

டிலீப் said...

//தங்கம்பழனி said...
<> நியான்தர்தால் மனிதனின் காரணப்பெயர் அறிந்துகொண்டேன்..தகவலுக்கு மிக்க நன்றி!.. வாழ்த்துக்கள்..//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி பழனி

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.