அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

விஜய்யின் டொப் டென் பாடல்கள்
சமீபகாலமாக பதிவுலகளில் பிரபலமடைந்த பதிவு சூப்பர் ஸ்ட்டார் ரஜனிகாந்தின் சிறந்த 10 படங்கள்.ஒவ்வொரு பதிவரும் தங்களை கவர்ந்த 10 படங்களை மிகசிறப்பாக வரிசையப்படுத்தி இருந்தனர்.


ஆகவே நம்ம வருகால சூப்பர் ஸ்ட்டார் இளையதளபதி விஜய் பற்றி கொஞ்சம் அலசி பார்ப்பம் என்று நினைக்கின்றேன்.


விஜய்ய பற்றி என்றா…அவர்ட பயோடெட்டா இல்ல.விஜய்யின் படம் சூப்பர் ஹிட்டாகுவதற்கு முதல் சூப்பரோ சூப்பர் ஹிட்டாவது அவர் நடித்த பட பாடல்கள் தான்.சோ அவர் நடித்த படங்களை விட அவரின் நடனத்தால் ஹிட்டான டொப் டென் பாடல்களை வரிசைப்படுத்த விரும்புகின்றேன்.


1.லிஸ்டில் முதல் பாடல் பாசிலின் இயக்கத்தில் ஷாலினியுடன் ஜோடியாக நடித்த 97-ல் வந்த காதலுக்கு மரியாதை.இளையராஜாவின் அற்பதமான இசையில் ஹரிகரனின் இனிமையான குரலில் வந்த என்னை தாலாட்ட வருவாயா பாடல்.இந்த பாடலை இப்போது கேட்டால் அப்பாடலில் வரும் கவி வரிகளும் பாடலுக்கான மெட்டும் ரசிக்கும்படி உள்ளது. 


2.அடுத்து வருவது எழிலின் இயக்கத்தில் பாடலும் படமும் சூப்பர் ஹிட்டான துள்ளாத மனமும் துள்ளும் படம்.எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையில் உன்னிகிருஷ்னன் பாடிய இன்னிசை பாடி வரும் பாடல்.3.எனது லிஸ்டில் மூன்றாம் இடத்தை பிடிக்கும் பாடல் தரணி முதல் முறையாக விஜய்யை வைத்து இயக்கி தமிழ்நாடு மற்றும் இலங்கையில் சூப்பரோ சூப்பர் ஹிட் கில்லி.இதுக்குபிறகு நான் சொல்லவே தேவையில்ல என்ன பாடல் என்று நீங்களே கண்டு பிடிச்சு இருப்பிங்க.வித்தியாசாகரின் இசையில் கே.கே அனுராதா ஸ்ரீராமின் துள்ளலான குரலில் பாடலை கேட்கும் எல்லோரையையும் ஆட்டம் போட வைக்கும் அப்படி போடு போடு …..


4.விஜயின் சூப்பர் ஹிட் பாடல்களில் நம்பர் போ (4)
ரமணாவின் இயக்கத்தில் வெளிவந்த மிஸ்டர் மவுண்டன்.அட அதுதாங்க திருமலை படம்.மெலடி கிங் வித்தியாசாகரின் இசையில் எஸ்.பி.பி மற்றும் சுஜாதாவின் வசீகரமான குரலில் வரும் அழகூரில் ப+த்தவளே…


5.அடுத்து இவ் ஹிட் லிஸ்டை அலங்கரிக்க வரும் பாடல் 
இந்தியா கிரிகெட் அணியின் துடுப்பாட்டத்தில் உலகின் முடி சூடா மன்னராக விளங்கும் சச்சினின் பெயரை தாங்கி வந்த படம்.ஜான் மகேந்திரன் இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் வெளிவந்த சச்சின் பட பாடல். தேவி ஸ்ரீ பிரசாத்தே இசைத்து அவரே பாடிய கண் மூடி திறக்கும் போது…


6.என்ன நம்ம ஒஸ்கார் தமிழன் இசை மேதை ஏ.ஆர்.ரஹ்மான்னின் பாட்ட காணவில்லையென்று நீங்க யோசிப்பது விளங்குது.இருங்கோ நேக்ஸ்ட் அவர்ட தான்.அழகிய தமிழ் மகன் ரஹ்மான் எந்த விருதை பெற்றாலும் சொல்லும் ஒரு வசனம் “எல்லா புகழும் அவனுக்கே” அதையே பாடல் வரிகாளாக கொண்டு தானே அந்த பாடலை பாடனும் என்ற ஆவலில் பரதனின் இயக்கத்தில் அழகிய தமிழ் மகன் படத்துக்காக பாடிய பாடல் எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே நீ நதி போல் ஓடி கொண்டிரு.பாடலும் அதற்கு விஜய்யின் நடனமும் பெரும் வரவேற்பை பெற்றது.


7.அட அடுத்த பாட்டும் ஒஸ்கார் மன்னனின் இனிமையான இசையில் அழகிய தமிழ் மகன் படத்தையே மெலடி பாடலால் கவர்ந்த ஸ்ரீராம் சாயின் இனிமையான காந்த குரலால் பாடலுக்கே உயிர்ரை கொடுத்த “ கேளாமல் கையிலே வந்தாயே”


8.குருவி பறந்து பறந்து உயரத்துக்கு அல்லது உச்சத்துக்கே செல்லும் அதை போலதான் இளையதளபதி விஜய்யும் தனது நடிப்பினாலே உச்சத்தை அடைந்தவர்.இயக்குனர் தரணி இரண்டாம் முறையும் விஜய்யை வைத்து இயக்கிய படம் குருவி.படம் தோல்வியடைந்தாலும் அப்படத்தின் பாடல்கள் ஹிட்டானது.வித்தியசாகர் மெலடி பாடல்கள் என்றாலே பின்னி பெடல் எடுத்துடுவார்.உதித் நாராயணன் ஸ்ரேயா கோஷாலின் அற்புதமான குரலில் இருவரும் அனுபவித்து பாடிய பாடல் “தேன்…தேன்…தேன் உன்னை தேடியலைந்தேன்” இவ் பாடல் விஜயின் ஹிட் பாடல் லிஸ்டை அடுத்து அலங்கரிக்கிறது.


9.காட்டு மிருங்கள் அதிகம் பயப்படுவது வேட்டைகாரன் காட்டை நோக்கி வரும் போது தான்.அதை போல தான் இளையதளபதி வேட்டைகாரனாக தியேட்டருக்கு வரும் போதும் தியேட்டரல படங்கள் ஓடவே பயப்படும்.
பாபுசிவனின் இயக்கத்தில் முதன்முறையாக இரண்டு விஜய்கள் இணைந்து பணியாற்றிய படம் வேட்டைகாரன்.விஜய் அன்டனி அதிரடி இசையில் சுருஜித் சங்கிதாவின் இனிமையான குரலில் எல்லாரையும் ஈர்த்த பாடல் “கரிகால கால போல”


10.சினிமா துறையில் கிங் என்ற ரஜனி கமல் அவர்களுக்கு அடுத்து கிங் என்ற நம்ம தளபதி தான்.சமுத்திரத்தில கிங் என்ற அது சுறா.நான் முதலும் சொல்லி இருக்கிறன் விஜய்யின் படத்தை விட பாடல்கள் தான் ஹிட்டாவது என்பதை.சமீபத்தில் வந்த தமன்னாவுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த சுறா படம்.அவ் படத்தில் வந்த அனைத்து பாடலுகளும் நான் அறிந்த வரை ஹிட்.எனக்கு பிடித்த பாடகர் கார்த்திக் மற்றும் ரீட்டா ஆகியோரின் இனிமையான குரலுக்கு மெட்டு போட்டு இசையமைத்தார் மணிசர்மா.அதுதாங்க பாட்டு “சிறகடிக்கு நிலவு”


ஓ…ஒரு டீ பிளிஸ்……ரொம்ப டயர்ட் இவ்வளத்தையும் தொகுத்து முடிப்பதற்கு.விஜய்யின் பாடல்கள் என்ற சும்மாவா??

டிஸ்கி 1: காவலன் பாடல்கள் அனைத்தும் சூப்பர் அதையும் போட்டு இருப்பன் பட் வீடியோ கிடைக்கவில்லை.
காவலனில்  படத்தில் வரும் டைட்டில் சோங் சூப்பர்.அதன் வரிகளில் சிறு மாற்றம் செய்தா கலக்கலா இருக்கும்.
விண்ணை காப்பான் ஒருவன் மண்ணை காப்பான் ஒருவன் 
தமிழனை காப்பான் ஒருவன் அவன்தான் நம்ம இளையதளபதி.

டிஸ்கி 2:இத்தோட இதை முடிக்க நான் விரும்பல  சோ இதை தொடருமாறு எனக்கு தெரிந்த சில தளபதி பான்ஸ் பதிவர்களை(பெயர சொல்லனுமா ??) கேட்டு கொள்கிறேன்.

டிஸ்கி 3: என் நெருங்கிய தோழி மலைச்சாரலின் எஜமானி ஹரிணி கட்டாயமாக இதை தொடர வேண்டும் என கேட்டுகொள்கிறேன்(ஏன் என்றா நான் இப்படி ஒன்று எழுதுறன் என்று ஹரணிடம் சொன்னதும் ஏன் அப்பிடி எழுதுற டொப் டென் சொதப்பல் படங்களை எழுது என்று சொன்னவள்.ஆப்பு வச்சுட்டமில்ல “ நாங்க தளபதி ரசிகன்ல” )Post Comment


21 comments:

எல் கே said...

தவறாக என்ன வேண்டாம்,. சூப்பர் ஸ்டார் ஒருவரே . எனவே அடுத்த சூப்பர் ஸ்டார் என்று யாரையும் அழைக்க முடியாது

Harini Resh said...

வணக்கம் டிலீப்
இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப கற்பனைதான்
இருங்க நான் எங்க தல பத்தி எழுதுறதா இல்ல தலதளபதி பேச்சு வார்த்தயானு
யோசிச்சு சொல்லுறேன் :)

Unknown said...

நம்ம வருகால சூப்பர் ஸ்ட்டார் இளையதளபதி விஜய் பற்றி கொஞ்சம் அலசி பார்ப்பம் என்று நினைக்கின்றேன்.

நண்பா தல இருக்கும் போது வால் ஆட முடியாது.

நம்ம தல போல வருமா

என்றைக்கும் ஓரே சுப்பர் ஸ்ரார் நம்ம ரஜனி யாரும் நெருங்க முடியாது.

SShathiesh-சதீஷ். said...

வாழ்த்துக்கள் நான் இப்படி ஒரு பதிவை எழுத நினைத்தேன் நீங்கள் முந்திவிடீர்கள். வாழ்த்துக்கள். முடிந்தால் தொடர்கின்றேன்.

orin said...

vijay da top 10 select pannurathu rompa kastam than, but itha nalla songs niraya irukku bro

Unknown said...

@SShathiesh-சதீஷ்.

சதிஸ் அண்ணா விஜய் என்றா விடமாட்டேல் போல

டிலீப் said...

//LK said...
தவறாக என்ன வேண்டாம்,. சூப்பர் ஸ்டார் ஒருவரே . எனவே அடுத்த சூப்பர் ஸ்டார் என்று யாரையும் அழைக்க முடியாது//


எல்.கே அண்ணா நீங்கள் சொல்வது சரி.
ரஜனிக்கு அடுத்து வசூல் மன்னனாக விளங்குவது விஜய் மட்டுமே. அதனாலே அனேகர் சூப்பர் ஸ்ட்டார் என்று சொல்லுகிறார்கள்

டிலீப் said...

//Harini Nathan said...
வணக்கம் டிலீப்
இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப கற்பனைதான்
இருங்க நான் எங்க தல பத்தி எழுதுறதா இல்ல தலதளபதி பேச்சு வார்த்தயானு
யோசிச்சு சொல்லுறேன் :)//


ஹரிணி நீங்க தல இல்ல வால்ல பற்றி எழுதுங்க பட் டிஸ்கி 3 சொன்ன மாதிரி உங்களிடமிருந்து ஒரு பதிவை எதிர்பார்க்கிறேன்.

டிலீப் said...

//sivatharisan said...
நம்ம வருகால சூப்பர் ஸ்ட்டார் இளையதளபதி விஜய் பற்றி கொஞ்சம் அலசி பார்ப்பம் என்று நினைக்கின்றேன்.

நண்பா தல இருக்கும் போது வால் ஆட முடியாது.

நம்ம தல போல வருமா

என்றைக்கும் ஓரே சுப்பர் ஸ்ரார் நம்ம ரஜனி யாரும் நெருங்க முடியாது//


நண்பா…தல தல என்றியே பாத்து எப்ப தல கழன்டு போக போகுதோ தெரியாது.
தல போல வராது தருதல போல வரும்
(நண்பா இந்த சண்டை இப்பதிவுக்கு மட்டுமே. எங்கள் நட்பு சண்டைகள் இல்லாமல் தொடரும் )

டிலீப் said...

//SShathiesh-சதீஷ். said...
வாழ்த்துக்கள் நான் இப்படி ஒரு பதிவை எழுத நினைத்தேன் நீங்கள் முந்திவிடீர்கள். வாழ்த்துக்கள். முடிந்தால் தொடர்கின்றேன்.//


நன்றி சதீஸ் தொடருங்கள் உங்கள் பதிவை எதிர்ப்பார்க்கிறேன்.

டிலீப் said...

//orin said...
vijay da top 10 select pannurathu rompa kastam than, but itha nalla songs niraya irukku bro//

ஒரின் நீங்கள் கூறுவது சரி விஜயின் பாடல்களை வரிசைப்படுத்துவது கடினம் ஏனென்றால் அவரின் படங்களில் வரும் அனைத்து பாடல்கள் சூப்பர்.மற்றைய பாடல்களை இப்பதிவை தொடர விரும்புகின்றவர்கள் வழங்குவார்கள்

டிலீப் said...

//sivatharisan said...
@SShathiesh-சதீஷ்.

சதிஸ் அண்ணா விஜய் என்றா விடமாட்டேல் போல//


நண்பா விஜய் என்றால் சும்மாவா??

Unknown said...

@டிலீப்

நன்றி தல டிலிப் நண்பா

டிலீப் said...

ஹா....ஹா....

நன்றி தல சிவா நண்பா

Unknown said...

நாமளும் தளபதி ரசிகர் தாம்..தொடருவோம்லே!!

டிலீப் said...

//மைந்தன் சிவா said...
நாமளும் தளபதி ரசிகர் தாம்..தொடருவோம்லே!!//

எனக்கு தெரியும் நீங்கள் விஜய் ரசிகர் என்று அதனாலே இங்கே குறிப்பிடமால் முகபுத்தகத்தில் கூறினேன் தொடரும்படி....

Harini Resh said...

டிலீப் உங்க வேண்டுகோளுக்கு இணங்க தொடர் பதிவு போட்டு விட்டேன் .பாருங்க
உங்களுக்கும் ஆப்பு வச்சிட்டம் இல்ல
http://harininathan.blogspot.com/2010/12/top-10.html

டிலீப் said...

ஹி..ஹி....நாங்களும் வச்சுடமுள்ள

Harini Resh said...

ah :)))))))

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நானும் விஜய் ரசிகை..நன்றி தீலிப். விஜய் பாடல்கள் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.....

Harini Nathan
தளம் பதிவும் பார்க்கனுமே..

டிலீப் said...

//பிரஷா said...
நானும் விஜய் ரசிகை..நன்றி தீலிப். விஜய் பாடல்கள் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.....

Harini Nathan
தளம் பதிவும் பார்க்கனுமே.//

பிரஷா நீங்களும் விஜய் ரசிகையென்றால் உங்களிடமிருந்து தொடர் பதிவை எதிர்ப்பார்க்கிறேன்.

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.