வார இறுதி நாட்களில் மலையேறுதலை பொழுதுபோக்காக கொண்டவர் அரோன்(ஹீரோ) வெள்ளிக்கிழமை வேலை முடிந்ததும் இரவோடு இரவாக அப்பகுதிக்கு சென்று சனிக்கிழமை காலை மலை ஏறுவதற்கு கனனியன் மலை தொடருக்கு சென்றுடுவார்.
ஹிப்போப் பாடலை கேட்டு கொண்டு ஜாலியாக அவன் செல்ல வேண்டிய மலை பகுதிக்கு சென்று கொண்டு இருக்கையில் அவ் மலை பகுதியில் காணப்படும் ஓர் குகையை தேடி வரும் இரு பெண்கள் குகைக்கு செல்லும் வழியை அறியாமல் தடுமாறும் பொழுது அரோனின் ஜாலியான அறிமுகத்துடன் அவன் அவர்களை அக்குகைக்கு கூடிச் செல்கிறான்.
(ஹி..ஹி… குகையில ஒன்டுமே நடக்கேலங்க….) குகையிலிருந்து வெளியே வந்து அரோன் அவர்களிடமிருந்து விடைபெற்று தனது பயணத்தை தொடர்கிறான்.தான் செல்ல வேண்டிய மலைபகுதி வந்ததும் அவன் அந்த மலைக்குள்ளாக ஊடுறுத்து கீழே செல்கையில் கால் தடுமாறி கீழே விழுகிற போது ஒரு அளவான கற்குன்று ஒன்று அவன் கூடவே வந்து கீழே விழுந்து அவனது இடதுகை அந்த கற்குன்றில் இறுகின்றது. அந்த தருணத்திலிருந்து ஆரம்பிக்கிறது 127 ஹவர்ஸ்.அவன் அந்த கல்லுடன் போராடி எப்படி அதிலிருந்து விடுபடுகிறான் என்பதே மீதி கதை.
அரோன் : மிகவும் உணர்ச்சிபூர்வமாக தனது முழு திறமையும் வெளிக்காட்டயுள்ளார்.அந்த கல்லிலிருந்து விடுபடுவதற்கு எடுக்கும் முயற்சிகளும் அவ் முயற்சிகள் சரிவராமல் போகும் போது அவனின் முகத்தில் வெளிப்படும் ஏக்கம்.தண்ணீரை குடிக்கும் ஒவ்வொரு முறையும் தண்ணீரை பற்றிய பழைய நினைவுகளை மீட்டெடுப்பதும் தனது குடும்பம் காதலி நண்பர்கள் கடைசியாக சந்தித்த இரு பெண்களை பற்றிய மீட்டலின் போது அரோனின் நடிப்பு அற்புதம்.
இசை: இப்படத்தில் ரஹ்மானின் இசை வித்தியாசமாக இருந்தது.பாடல்கள் இல்லாவிட்டாலும் பின்னணி இசை பார்கின்றவர்களை மிரள வைக்கின்றது.அரோனின் கடைசி முயற்சி காட்சிக்கேற்றது போல வரும் பின்னணி இசை நம் இதயம் செயற்படும் வேகத்தை அதிகரிக்க செய்கின்றது.
நிச்சயமாக இன்னுமொரு ஒஸ்கார் விருதை எதிர் பார்க்கலாம்.
ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் :அன்டனியின் ஒளிப்பதிவு என்னை பிரமிக்க வைத்தது குளோப்ஸ் லோக் சோட் அற்புதம்.எடிட்டிங் வித்தியாசமாக இருந்தது ஒரு பிரேமில் மூன்று லேயர்களில் ஓரே காட்சியை வேறு அங்கலில் வருவது அருமை.
12 comments:
கட்டாயம் பார்க்க வேண்டிய படம், காரணம் தலைவரின் இசை..
//யோ வொய்ஸ் (யோகா) said...
கட்டாயம் பார்க்க வேண்டிய படம், காரணம் தலைவரின் இசை.//
கட்டாயமாக யோ..
பின்னணி இசை சூப்பர்.
நல்ல இசையழுத்தம் உள்ள படமாக இருக்கிறது..
//ம.தி.சுதா said...
நல்ல இசையழுத்தம் உள்ள படமாக இருக்கிறது.//
ஆம் சுதா இசையும் படத்துக்கு ஒர் வெற்றியாக அமைந்துள்ளது.
டிலீப் உங்கள் விமர்சனமே படம் பாத்த மாறி இருக்கு
இருந்தாலும் நான் படம் பாத்துட்டு சொல்லுறேன்
//Harini Nathan said...
டிலீப் உங்கள் விமர்சனமே படம் பாத்த மாறி இருக்கு
இருந்தாலும் நான் படம் பாத்துட்டு சொல்லுறேன்//
நல்லது பார்த்து சொல்லுங்கோ.ஆனாலும் கடைகளில் சிடி வந்திருக்காது என்று நினைக்கிறேன்.நீங்க ஒன்லைன்ல பாருங்க.
OK Online ல பாக்குறேன்
விமர்சனமே படம் பாத்த மாறி இருக்கு டிலீப்...
//Harini Nathan said...
OK Online ல பாக்குறேன்//
நன்றி வணக்கம்.
//தோழி பிரஷா said...
விமர்சனமே படம் பாத்த மாறி இருக்கு டிலீப்..//
படம் அருமை பிரஷா. விமர்சனத்தில் நான் சொன்னதை விட படத்தில் நிறைய சுவராஸ்சியமான விஷயங்கள் உள்ளது.கண்டிப்பாக படத்தை பாருங்கள்
படத்தின் Trailer மிரட்டியது
// நிச்சயமாக இன்னுமொரு ஒஸ்கார் விருதை எதிர் பார்க்கலாம்.//
இந்த வரிக்கு ஒரு ஒ
//படத்தின் Trailer மிரட்டியது
// நிச்சயமாக இன்னுமொரு ஒஸ்கார் விருதை எதிர் பார்க்கலாம்.//
இந்த வரிக்கு ஒரு ஒ//
ஹி...ஹி... நானும் ஒரு ஒ போடுறன்.
ஒ.........ஒ...........
Post a Comment