சிட்னி டெஸ்டில் இங்கிலாந்து அணி பல சாதனைகளுடன் இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இன்னிங்ஸ் மற்றும் 83 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா மண்ணில் 23 வருடங்களின் பின்பு ஆஷஸ் தொடரை 3-1 என்ற கணக்கில் வெற்றிகொண்டது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. முதல் 4 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. 5 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்தது.. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 280 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி, 3 ம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 488 ரன்கள் எடுத்திருந்தது.
நேற்று 4 வது நாள் ஆட்டம் நடந்தது. அபாரமாக ஆடிய பிரயர், டெஸ்ட் அரங்கில் 4 வது சதம் கடந்தார். இவருக்கு பிரஸ்னன் (35) நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். 118 ரன்கள் (11 பவுண்டரி, 1 சிக்சர்) சேர்த்து பிரயர் வெளியேறினார். பின்வரிசையில் ஸ்வான் (36) அதிரடி காட்ட, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 644 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் முதல் இன்னிங்சில் 364 ரன்கள் முன்னிலை பெற்றது.
இரண்டாவது இன்னிங்சை துவக்கியது ஆஸ்திரேலியா. வாட்சன் (38), ஹியுஸ் (13), கவாஜா (21), கிளார்க் (41), மைக்கேல் ஹசி (12), ஹாடின் (30), ஆகியோர் விரைவில் அவுட்டாகி ஏமாற்றினர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்து திணறியது. ஸ்மித் (24), சிடில் (17) ஆட்டமிழக்காமல் இருந்தனர். .தொடர்ந்து 5-ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய அவுஸ்திரேலியா அணி நாளின் தொடக்க நேரத்தில் சிறப்பாக ஆடினாலும் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை சமாளிக்க சற்று தடுமாறினார்கள். சிடில் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.8-வது விக்கெட்டுக்காக ஸ்மித்-சிடில் 86 ரன்களை அவுஸ்திரேலியாவின் இரண்டாம் இன்னிங்ஸில் சிறந்த இணைப்பாட்டமாக பெற்றனர்.ஸ்மித் ஆட்டமிழக்காமல் 54 ரன்களை பெற்றார்.இறுதியில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 83 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
5-ம் டெஸ்டின் ஆட்டநாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் குக் தெரிவனார்
4 comments:
வணக்கம் டிலீப் விஜய் பாடல் 10 பதிவிட்டுள்ளேன்
http://vithu9.blogspot.com/2011/01/10.html
//தோழி பிரஷா said...
வணக்கம் டிலீப் விஜய் பாடல் 10 பதிவிட்டுள்ளேன்
http://vithu9.blogspot.com/2011/01/10.html//
வணக்கம் பிரஷா
நான் பார்த்துவிட்டேன் ...
அருமை....
நல்ல பீல்டர் அவரது ஒய்வு கவலைக்குரியது
//தர்ஷன் said...
நல்ல பீல்டர் அவரது ஒய்வு கவலைக்குரியது//
சிறந்த கப்டன் & பேட்ஸ்மென் கூட
Post a Comment