உங்கள் வீட்டில் ஏதாவது பறவை முட்டையிட்டிருக்கிறதா? அல்லது, பறவை முட்டைகளை எப்பொழுதாவது பார்த்திருக்கிறீர்களா? பார்க்காவிட்டாலும் பரவாயில்லை. நீங்கள் முட்டை சாப்பிடுகிறவர்தானே? முட்டையின் வடிவம் உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். அது பரீட்சை பேப்பரில் ஆசிரியர் போடும் முட்டையில்லை. பறவைகள் போடும் முட்டையைப் பற்றித்தான் நான் கூறுகிறேன்.
முட்டை முதலில் தோன்றியதா, கோழி முதலில் தோன்றியதா என்றொரு விவாதம் ரொம்ப நாளாக நடந்து கொண்டிருக்கிறது. கோழிதான் முதலில் வந்தது என்று நிரூபித்துவிட்டார்கள். சரி, கோழி கிடக்கட்டும். பறவை முட்டைகளின் வடிவம் ஏன் கோளமாக இல்லாமல், நீள்வட்டமாக இருக்கிறது?
முதலாவதாக, நீள்வட்ட வடிவமாக இருந்தால்தான் ஒரு கூட்டில் இருக்கும்போது குறைந்த இடைவெளியில் முட்டை வசதியாக இருக்க முடிகிறது. கூட்டில் நெருக்கடி ஏற்படுவதில்லை. மேலும் இந்த வடிவம் காரணமாக வெப்ப இழப்பும் அதிகம் ஏற்படுவதில்லை. ஏனென்றால், முட்டை சரியாகப் பொரிந்து குஞ்சு வெளியே வர வெப்ப அளவு ரொம்ப ரொம்ப முக்கியம். அப்பொழுதுதானே குறிப்பிட்ட காலத்துக்குப் பின் முட்டை பொரிந்து குஞ்சு வெளியே வரும்.
இரண்டாவதாக, நீள்வட்ட முட்டைகள் உருள நேரிட்டால் அவை வட்டமான பாதையிலேயே உருளும். இதன் காரணமாக முட்டை கூட்டுக்கு வெளியே உருண்டு விழுவதற்கான வாய்ப்பு குறைந்து போகிறது. இருப்பதிலேயே உறுதியான வடிவம் கோளம்தான். ஆனால் கோள வடிவ முட்டைகள், அதுவும் மலைமுகடுகளில் முட்டையிடும் பறவைகளின் முட்டைகள் கோள வடிவில் இருந்துவிட்டால் என்ன ஆகும்? அவை கீழே விழுந்து உடைந்துவிடும். பறவை சந்ததி பெருகாது. இதன் காரணமாகவே மலைமுகடுகளில் முட்டையிடும் பறவைகளின் முட்டைகள் கோள வடிவில் இருந்து சற்று மாறுபட்டு இருக்கின்றன. இவை உருளும்போது, அரைவட்ட வடிவில் உருளுகின்றன.
மூன்றாவதாக, பறவை முட்டையை இடுவதற்கு வசதியாகவும் இந்த வடிவம் இருக்கிறது. கோள வடிவம், நீள்உருளை வடிவம் போன்ற முட்டைகளை இடுவது பறவைகளை ரொம்ப கஷ்டப்படுத்தும். மேலும் இந்த வடிவங்களில் முட்டைகள் இருந்தால் அவை தாயிடமிருந்து வெளியே வந்து விழும்போது, அந்த வடிவத்தின் பலவீனமான முனைகள் காரணமாக உடைந்து போக வாய்ப்பு உண்டு. அதேநேரம் நீள்வட்ட முட்டை இப்படி உடைவதில்லை.
முக்கியமாக, குளிர் பதனப் பெட்டியின் (தங்ச்ழ்ண்ஞ்ங்ழ்ஹற்ர்ழ்) முட்டை கோப்பைகள், மற்றும் முட்டை தாங்கிகளில் கோழி முட்டைகள் மிகச்சிறப்பாக பொருந்துகின்றன. வேறெந்த வடிவமும் இவ்வளவு கச்சிதமாக உட்காருவதில்லையாம்.
பறவை முட்டைகளின் வடிவம் பற்றிய உங்கள் சந்தேகம் இப்பொழுது தீர்ந்ததா?
இது மட்டுமில்லை. ஒவ்வொரு வகை பறவையின் முட்டையும் அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப, சுற்றுப்புறத்தில் இருந்து பிரித்தறிய முடியாத வகையில் வண்ணத்தையும் பெற்றிருக்கும். தரையில் முட்டையிடும் பறவைகளின் முட்டையை வெறும் கண்களால் கண்டறிவது கடினம். எதிரிகளிடம் இருந்து முட்டைகளை பாதுகாப்பதற்கே இந்த நடைமுறை இருப்பதாகக் கருதப்படுகிறது.
நன்றி:தினமணி
6 comments:
சந்தேகம் தீர்ந்தது நண்பா
நல்ல தகவலா இருக்கே நன்றி dileep
ரொம்ப நல்ல தகவல்..!
//மகாதேவன்-V.K said...
சந்தேகம் தீர்ந்தது நண்பா//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பா
//Harini Nathan said...
நல்ல தகவலா இருக்கே நன்றி dileep//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி Harini
//தங்கம்பழனி said...
ரொம்ப நல்ல தகவல்..!//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி பழனி
Post a Comment