அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube


Sachin Tendulkar reaches his half-century

கேப் டவுன் டெஸ்டில் அபாரமாக ஆடிய சச்சின் சதம் கடந்தார். இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் 51 வது சதம் அடித்து, மீண்டும் அசத்தினார். இவரது சதம் கைகொடுக்க இந்திய அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது. தென் ஆப்ரிக்கா சார்பில் ஸ்டைன், 5 விக்கெட் கைப்பற்றினார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. வெற்றியாளரை முடிவு செய்யும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடக்கிறது.
தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 362 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி தனது முதல் இன்னிங்சில், 2 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்திருந்தது. காம்பிர் 65, சச்சின் 49 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.

நழுவிய சதம்:நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. சச்சின், காம்பிர் ஜோடி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஸ்கோர் சீராக உயர்ந்தது. இந்த ஜோடியை பிரிக்க, தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித் செய்த, எந்த முயற்சியும் பலிக்கவில்லை. மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 176 ரன்கள் சேர்த்து சாதித்தது. இந்நிலையில் காம்பிர், 93 ரன்களுக்கு (13 பவுண்டரி) அவுட்டாகி, சதமடிக்கும் வாய்ப்பை தவற விட்டார்.


Gautam Gambhir plays a defensive stroke



"மிடில் ஆர்டர்' சரிவு:பின் சச்சினுடன் லட்சுமண் இணைந்தார். வழக்கத்துக்கு மாறாக லட்சுமண், சற்று அதிரடியாக விளையாடினார். இவர் 15 ரன்கள் எடுத்த நிலையில், துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார். கடந்த போட்டியில் ஏமாற்றிய இளம் வீரர் புஜாரா (2), மீண்டும் சொதப்பினார். கேப்டன் தோனி "டக்' அவுட்டானார். 

சச்சின் சதம்:ஒருமுனையில் தொடர்ந்து விக்கெட் சரிந்த போதும், மறுமுனையில் சச்சின் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டிசோட்சபே ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் விளாசிய சச்சின், மார்கல் பந்தில் "மிரட்டல்' சிக்சர் அடித்து, சர்வதேச டெஸ்ட் அரங்கில் 51 வது சதத்தை எட்டினார். 

Sachin Tendulkar was more comfortable against spin

ஹர்பஜன் ஆறுதல்:சச்சினுடன் இணைந்த ஹர்பஜன், துவக்கத்தில் தடுமாறிய போதும், பின் அதிரடியில் அசத்தினார். டிசோட்சபே பந்தில் சூப்பர் சிக்சர் அடித்த இவர், ஸ்டைனின் பந்திலும் சிக்சர் விளாசினார். ஹர்பஜன் 40 ரன்கள் எடுத்து அவுட்டானர். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின் 146 ரன்கள் (17 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து, மார்கல் பந்தில் போல்டானார். இஷாந்த் (1) நிலைக்கவில்லை.
கடைசியில் ஜாகிர் கான் (23) அடித்த 2 சிக்சர் கைகொடுக்க, இந்திய அணி முதல் இன்னிங்சில் 364 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்ரீசாந்த் (4) அவுட்டாகாமல் இருந்தார். வேகத்தில் மிரட்டிய தென் ஆப்ரிக்க வீரர் ஸ்டைன், 5 விக்கெட் வீழ்த்தினார்.

இந்தியா முன்னிலை:இரண்டு ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சை துவங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் ஸ்மித், பீட்டர்சன் துவக்கம் கொடுத்தனர். ஸ்மித் 29 ரன்கள் எடுத்தார். "நைட் வாட்ச்மேன்' ஹாரிஸ் "டக்' அவுட்டானார். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 52 ரன்கள் எடுத்து இருந்தது. பீட்டர்சன் (22), அவுட்டாகாமல் இருந்தார். ஹர்பஜன் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் ஆடுகளம் சுழலுக்கு கைகொடுக்கும் என்று தெரிகிறது. இதனால் பவுலிங்கில் ஹர்பஜன் உள்ளிட்டவர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், இந்திய அணி வெற்றிக்கு முயற்சிக்கலாம்.

சச்சின் மீண்டும் அசத்தல்சர்வதேச டெஸ்ட் அரங்கில் சமீபத்தில் 50 வது சதம் அடித்து சாதனை படைத்த சச்சின், நேற்று 51வது சதம் கடந்து (177 போட்டி), மற்றொரு சாதனை படைத்தார். தவிர, 442 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று, 46 சதம் அடித்துள்ள சச்சின், ஒட்டுமொத்தமாக 97 சதம் அடித்து அசத்தியுள்ளார்.
டெஸ்ட் அரங்கில் அதிக சதம் அடித்த, "டாப்-3' வீரர்கள்:
வீரர்/அணி போட்டி ரன்கள் சதம்1.சச்சின் (இந்தியா) 177 14,678 51
2.காலிஸ்(தெ.ஆப்.,) 145 11,838 39
3.பாண்டிங்(ஆஸி.,) 152 12,363 39

Sachin Tendulkar walks back after being dismissed
"பெஸ்ட்' ஜோடிநேற்று இந்தியாவின் சச்சின், காம்பிர் ஜோடி 176 ரன்கள் சேர்த்து, தென் ஆப்ரிக்க மண்ணில் 1990க்கு பின் 3வது விக்கெட்டுக்கு, அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற பெருமை பெற்றது. இதற்கு முன் ஜெயவர்தனா, சங்ககரா ஜோடி 168 ரன்கள் (2000) சேர்த்து இருந்தது. தவிர, இந்தியா சார்பிலும் 3வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற பெருமையும் பெற்றது. இதற்கு முன் டிராவிட், கங்குலி ஜோடி 84 ரன்கள் (2007) சேர்த்து இருந்தது.

"லக்கி' ஹர்பஜன்நேற்று ஹர்பஜன் 6 ரன்கள் எடுத்திருந்த போது, தென் ஆப்ரிக்க வீரர் ஸ்டைனின் புயல் வேக பந்தை எதிர்கொண்டார். இதை அடிக்காமல் விட்டுவிட, பந்து "ஆப் ஸ்டம்பை' உரசிக்கொண்டு விக்கெட் கீப்பரிடம் சென்றது. ஹர்பஜன் "அவுட்' என எல்லோரும் துள்ளிக்குதித்தனர். ஆனால் "பைல்ஸ்' கீழே விழாததால், அதிருஷ்டவசமாக ஹர்பஜன் தப்பினார்.

காலிஸ் காயம்கேப்டவுன் டெஸ்டின் 2வது நாளில் தென் ஆப்ரிக்க வீரர் காலிஸ், ஸ்ரீசாந்த் பந்தை எதிர்கொண்ட போது, வலது நெஞ்சில் காயம் ஏற்பட்டது. இதனால் நேற்று இவர் பீல்டிங் செய்யவரவில்லை. இவர் 2வது இன்னிங்சில் களமிறங்குவது கடினம். தவிர, முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது.

ஸ்ரீசாந்த் மீது பாட்டில் "வீச்சு'நேற்று தென் ஆப்ரிக்க அணியின் 2வது இன்னிங்சில், மைதானத்தின் எல்லைப் பகுதியில் இந்திய வீரர் ஸ்ரீசாந்த், பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது ரசிகர்கள் இவர் மீது காலியான பாட்டில்களை கொண்டு எறிந்தனர். இதனால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது.

Sreesanth once again got some stick from the crowd 

ஸ்கோர் போர்டு

முதல் இன்னிங்ஸ்


தென் ஆப்ரிக்கா 362

இந்தியாகாம்பிர்(கே)பவுச்சர்(ப)ஹாரிஸ் 93(222)
சேவக்(கே)ஸ்மித்(ப)ஸ்டைன் 13(20)
டிராவிட்--ரன் அவுட்(டிவிலியர்ஸ்) 5(16)
சச்சின்(ப)மார்கல் 146(314)
லட்சுமண்-ரன் அவுட்(ஹாரிஸ்) 15(19)
புஜாரா-எல்.பி.டபிள்யு.,(ப)ஸ்டைன் 2(14)
தோனி(கே)பிரின்ஸ்(ப)ஸ்டைன் 0(3)
ஹர்பஜன்(கே)சப்-டுமினி(ப)ஸ்டைன் 40(67)
ஜாகிர்(கே)பிரின்ஸ்(ப)மார்கல் 23(22)
இஷாந்த்(கே)பவுச்சர்(ப)ஸ்டைன் 1(2)
ஸ்ரீசாந்த்-அவுட் இல்லை- 4(5)
உதிரிகள் 22
மொத்தம் (117.1 ஓவரில் ஆல் அவுட்) 364
விக்கெட் வீழ்ச்சி: 1-19(சேவக்), 2-28(டிராவிட்), 3-204(காம்பிர்), 4-235(லட்சுமண்), 5-237(புஜாரா), 6-247(தோனி), 7-323(ஹர்பஜன்), 8-341(சச்சின்), 9-350(இஷாந்த்), 10-364(ஜாகிர் கான்).
பந்து வீச்சு: ஸ்டைன் 31-11-75-5, மார்கல் 29.1-7-106-2, டிசோட்சபே 26-5-82-0, ஹாரிஸ் 29-8-72-1, பீட்டர்சன் 2-0-9-0.

இரண்டாவது இன்னிங்ஸ்
தென் ஆப்ரிக்கா
ஸ்மித்--எல்.பி.டபிள்யு.,(ப)ஹர்பஜன் 29(47)
பீட்டர்சன்-அவுட் இல்லை- 22(38)
ஹாரிஸ்-எல்.பி.டபிள்யு.,(ப)ஹர்பஜன் 0(8)
ஆம்லா-அவுட் இல்லை- 0(4)
உதிரிகள் 1
மொத்தம் (16 ஓவரில் 2 விக்.,) 52
விக்கெட் வீழ்ச்சி: 1-50(ஸ்மித்), 2-52(ஹாரிஸ்).
பந்து வீச்சு: ஜாகிர் கான் 5-0-25-0, ஸ்ரீசாந்த் 5-1-20-0, இஷாந்த் சர்மா 3-0-3-0, ஹர்பஜன் 3-0-4-2.


நன்றி:தினமலர்





Post Comment


8 comments:

Anonymous said...

கிரிக்கெட் கடவுள் சச்சின்

Anonymous said...

நான் ஓட்டு போட்டுட்டேன்

ஸாதிகா said...

பிரசண்ட் சார்.(கிரிக்கெட் பற்றி ஆனா ஆவன்னா கூட தெரியாது.பிரஷண்ட் மட்டும் போட்டுக்கறேன்)

டிலீப் said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
கிரிக்கெட் கடவுள் சச்சின்//

ஆஹா..ஆஹா..

டிலீப் said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
நான் ஓட்டு போட்டுட்டேன்//

நன்றி அண்ணா

டிலீப் said...

//ஸாதிகா said...
பிரசண்ட் சார்.(கிரிக்கெட் பற்றி ஆனா ஆவன்னா கூட தெரியாது.பிரஷண்ட் மட்டும் போட்டுக்கறேன்)//

வாங்கோ ஸாதிகா நம்ம கிளஸ்க்கு அ-ஃ வரை கிரிக்கெட்டை பற்றி சொல்லித்தாறன்

Harini Resh said...

வாழ்த்துக்கள் சச்சின்கு
அருமையான பதிவு டிலீப் :)

டிலீப் said...

//Harini Nathan said...
வாழ்த்துக்கள் சச்சின்கு
அருமையான பதிவு டிலீப் :)//

ஓகே ஹரிணி நான் சொல்லிவிடுறன் சச்சின்ட

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.