முன்னணி பேட்ஸ்மேன்கள் ஏமாற்ற, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில், இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாப தோல்வி அடைந்தது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி, நேற்று டர்பனில் நடந்தது. "டாஸ்' ஜெயித்த தென் ஆப்ரிக்கா கேப்டன் ஸ்மித், பேட்டிங் தேர்வு செய்தார்.
ஆம்லா அசத்தல்: தென் ஆப்ரிக்க அணிக்கு ஸ்மித், ஆம்லா துவக்கம் தந்தனர். நெஹ்ரா பந்து வீச்சில் வெறும் 11 ரன்களுக்கு வெளியேறினார் ஸ்மித். அடுத்து வந்த இங்ராம் (5) சோபிக்க வில்லை. மறுமுனையில் ஆம்லா அதிரடி காட்டினார். இந்திய பந்து வீச்சை விளாசித் தள்ளிய இவர், 36 பந்துகளில் அரை சதம் எட்டினார். இவர் 50 ரன்களுக்கு (8 பவுண்டரி) அவுட்டானார்.
டிவிலியர்ஸ் அதிரடி: பின்னர் டிவிலியர்ஸ், டுமினி இணைந்தனர். இந்த ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அபாரமாக ஆடிய டிவிலியர்ஸ் ஒரு நாள் அரங்கில் 25 வது அரை சதம் கடந்தார். இவருக்கு நல்ல ஒத்துழைப்புக் கொடுத்த டுமினி, ஒரு நாள் அரங்கில் 10 வது அரை சதம் கடந்தார். இந்த ஜோடி 4 வது விக்கெட்டுக்கு 131 ரன்கள் சேர்த்த நிலையில், டிவிலியர்ஸ் (76) வெளியேறினார். அடுத்து களமிறங்கிய மில்லர் (9) சொதப்பினார். 73 ரன்கள் சேர்த்த டுமினி, ரோகித் சுழலில் பெவிலியன் திரும்பினார். போத்தா (23) ஆறுதல் அளித்தார். ஸ்டைன் (7), மார்கல் (0) நம்பிக்கை அளிக்க வில்லை. 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்ரிக்க அணி 289 ரன்கள் எடுத்தது. பார்னெல் (21), டிசோட்சபே (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
சச்சின் "அவுட்': சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு முரளி விஜய் (1) பெரும் ஏமாற்றம் அளித்தார். இவரைத் தொடர்ந்து மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினும் (7) அவுட்டாக, துவக்கமே ஆட்டம் கண்டது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா (11), அம்பயர் கொடுத்த தவறான தீர்ப்பால் வெளியேறினார். முன்னணி வீரர் யுவராஜ் சிங்கும் (2) சொதப்ப, வெறும் 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது இந்திய அணி.
தோனி பரிதாபம்:பின்னர் விராத் கோஹ்லி, தோனி இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி ஓரளவு நம்பிக்கை அளித்த நிலையில், தோனி (25) எதிர்பாராதவிதமாக ரன்-அவுட்டானார். சிறப்பாக ஆடிய கோஹ்லி, ஒரு நாள் அரங்கில் 11 வது அரை சதம் கடந்தார்.
"பவர்-பிளே' சோகம்: அடுத்து ரெய்னா களமிறங்கினார். இந்நிலையில் பேட்டிங் "பவர் பிளேவை' தேர்வு செய்தது இந்தியா. இது சாதகமாக அமையவில்லை. 54 ரன்கள் எடுத்த நிலையில், கோஹ்லி அவுட்டானார். ஹர்பஜனும் "டக்-அவுட்டாக' நம்பிக்கை தகர்ந்தது. சற்று நேரம் அதிரடி காட்டிய ரெய்னா, 32 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். பின்வரிசையில் நெஹ்ரா (1), ஜாகிர் (6) ஏமாற்ற, 35. 4 ஓவரில் "ஆல்-அவுட்டான' இந்திய அணி, 154 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. ஆட்ட நாயகன் விருதை தென் ஆப்ரிக்காவின் டிசோட்சபே தட்டிச் சென்றார். இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் 2 வது ஒரு நாள் போட்டி வரும் 15 ம் தேதி ஜோகனஸ்பர்கில் நடக்க உள்ளது.
ஸ்கோர் போர்டு
தென் ஆப்ரிக்கா
ஸ்மித் (கே) ரோகித் (ப) நெஹ்ரா 11 (15)
ஆம்லா (கே) ஹர்பஜன் (ப) முனாப் 50 (36)
இங்ராம் (கே) நெஹ்ரா (ப) முனாப் 5 (23)
டிவிலியர்ஸ் (கே) ஹர்பஜன் (ப) ரோகித் 76 (69)
டுமினி எல்.பி.டபிள்யு., (ப) ரோகித் 73 (89)
மில்லர் (ப) ரெய்னா 9 (11)
போத்தா (ப) ஹர்பஜன் 23 (27)
பார்னெல் -அவுட் இல்லை- 21 (19)
ஸ்டைன் (கே) யுவராஜ் (ப) ஜாகிர் 7 (9)
மார்கல் (ப) ஜாகிர் 0 (1)
டிசோட்சபே -அவுட் இல்லை- 1 (1)
உதிரிகள் 13
மொத்தம் (50 ஓவரில் 9 விக்., இழப்பு) 289
விக்கெட் வீழ்ச்சி: 1-21 (ஸ்மித்), 2-72 (இங்ராம்), 3-82 (ஆம்லா), 4-213 (டிவிலியர்ஸ்), 5-226 (மில்லர்), 6-244 (டுமினி), 7-266 (போத்தா), 8-285 (ஸ்டைன்), 9-286 (மார்கல்).
பந்து வீச்சு: ஜாகிர் 10-0-44-2, நெஹ்ரா 6-0-61-1, முனாப் 7-1-36-2, ஹர்பஜன் 10-0-56-1, யுவராஜ் 6-0-32-0, ரோகித் 7-0-30-2, ரெய்னா 4-0-21-1.
ஆம்லா (கே) ஹர்பஜன் (ப) முனாப் 50 (36)
இங்ராம் (கே) நெஹ்ரா (ப) முனாப் 5 (23)
டிவிலியர்ஸ் (கே) ஹர்பஜன் (ப) ரோகித் 76 (69)
டுமினி எல்.பி.டபிள்யு., (ப) ரோகித் 73 (89)
மில்லர் (ப) ரெய்னா 9 (11)
போத்தா (ப) ஹர்பஜன் 23 (27)
பார்னெல் -அவுட் இல்லை- 21 (19)
ஸ்டைன் (கே) யுவராஜ் (ப) ஜாகிர் 7 (9)
மார்கல் (ப) ஜாகிர் 0 (1)
டிசோட்சபே -அவுட் இல்லை- 1 (1)
உதிரிகள் 13
மொத்தம் (50 ஓவரில் 9 விக்., இழப்பு) 289
விக்கெட் வீழ்ச்சி: 1-21 (ஸ்மித்), 2-72 (இங்ராம்), 3-82 (ஆம்லா), 4-213 (டிவிலியர்ஸ்), 5-226 (மில்லர்), 6-244 (டுமினி), 7-266 (போத்தா), 8-285 (ஸ்டைன்), 9-286 (மார்கல்).
பந்து வீச்சு: ஜாகிர் 10-0-44-2, நெஹ்ரா 6-0-61-1, முனாப் 7-1-36-2, ஹர்பஜன் 10-0-56-1, யுவராஜ் 6-0-32-0, ரோகித் 7-0-30-2, ரெய்னா 4-0-21-1.
இந்தியா
விஜய் எல்.பி.டபிள்யு., (ப) ஸ்டைன் 1 (3)
சச்சின் (கே) ஸ்டைன் (ப) டிசோட்சபே 7 (11)
கோஹ்லி (கே) ஸ்மித் (ப) ஸ்டைன் 54 (70)
ரோகித் (கே) டிவிலியர்ஸ் (ப) மார்கல் 11 (27)
யுவராஜ் (கே) ஸ்மித் (ப) மார்கல் 2 (4)
தோனி -ரன் அவுட் (பார்னெல்)- 25 (35)
ரெய்னா (கே) இங்ராம் (ப) டிசோட்சபே 32 (36)
ஹர்பஜன் (ப) பார்னெல் 0 (4)
ஜாகிர் (கே) டுமினி (ப) டிசோட்சபே 6 (16)
நெஹ்ரா (ப) டிசோட்சபே 1 (7)
முனாப் -அவுட் இல்லை- 1 (1)
உதிரிகள் 14
மொத்தம் (35.4 ஓவரில் "ஆல்-அவுட்') 154
விக்கெட் வீழ்ச்சி: 1-3 (விஜய்), 2-13 (சச்சின்), 3-41 (ரோகித்), 4-43 (யுவராஜ்), 5-95 (தோனி), 6-128 (கோஹ்லி), 7-129 (ஹர்பஜன்), 8-148 (ரெய்னா), 9-153 (நெஹ்ரா), 10-154 (ஜாகிர்).
பந்து வீச்சு: ஸ்டைன் 6-0-29-2, டிசோட்சபே 8.4-0-31-4, மார்கல் 5-0-12-2, பார்னெல் 7-0-25-1, போத்தா 7-0-46-0, டுமினி 2-0-7-0.
சச்சின் (கே) ஸ்டைன் (ப) டிசோட்சபே 7 (11)
கோஹ்லி (கே) ஸ்மித் (ப) ஸ்டைன் 54 (70)
ரோகித் (கே) டிவிலியர்ஸ் (ப) மார்கல் 11 (27)
யுவராஜ் (கே) ஸ்மித் (ப) மார்கல் 2 (4)
தோனி -ரன் அவுட் (பார்னெல்)- 25 (35)
ரெய்னா (கே) இங்ராம் (ப) டிசோட்சபே 32 (36)
ஹர்பஜன் (ப) பார்னெல் 0 (4)
ஜாகிர் (கே) டுமினி (ப) டிசோட்சபே 6 (16)
நெஹ்ரா (ப) டிசோட்சபே 1 (7)
முனாப் -அவுட் இல்லை- 1 (1)
உதிரிகள் 14
மொத்தம் (35.4 ஓவரில் "ஆல்-அவுட்') 154
விக்கெட் வீழ்ச்சி: 1-3 (விஜய்), 2-13 (சச்சின்), 3-41 (ரோகித்), 4-43 (யுவராஜ்), 5-95 (தோனி), 6-128 (கோஹ்லி), 7-129 (ஹர்பஜன்), 8-148 (ரெய்னா), 9-153 (நெஹ்ரா), 10-154 (ஜாகிர்).
பந்து வீச்சு: ஸ்டைன் 6-0-29-2, டிசோட்சபே 8.4-0-31-4, மார்கல் 5-0-12-2, பார்னெல் 7-0-25-1, போத்தா 7-0-46-0, டுமினி 2-0-7-0.
6 comments:
அருமை அலசல்.....
நாங்க வெல்லாமல் வரமாட்டம்.................
வெற்றிக்கும் தோல்விக்கும் ஒரு சிறு வித்யாசம் தான். கடமையை”செய்”தால் நிச்சயம் வெற்றி..கடமை”க்கு” செய்தால் தோல்வி.
:( :'(
//“நிலவின்” ஜனகன் said...
அருமை அலசல்.....
நாங்க வெல்லாமல் வரமாட்டம்.................//
எதை ஜனகன் ??
//sakthistudycentre.blogspot.com said...
வெற்றிக்கும் தோல்விக்கும் ஒரு சிறு வித்யாசம் தான். கடமையை”செய்”தால் நிச்சயம் வெற்றி..கடமை”க்கு” செய்தால் தோல்வி//
அருமை நண்பரே சிறந்த விளக்கம்
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சக்தி
//Harini Nathan said...
:( :'(//
:):):):):):):):):):):):):):)
Post a Comment