இரண்டாவது போட்டி ஜோகனஸ்பர்க்கில் நடந்தது. "டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார். இரு அணியிலும் மாற்றம் எதுவும் செய்யவில்லை.
மந்தமான துவக்கம்:
இந்திய அணிக்கு சச்சினுடன் இணைந்து முரளி விஜய் துவக்கம் கொடுத்தார். இருவரும் ரன்கள் எடுப்பதை விட, விக்கெட்டை காப்பாற்றுவதிலேயே கவனமாக இருந்தனர். அவ்வப்போது பவுண்டரி அடித்த முரளி விஜய் 16 ரன்களில் வெளியேறினார். விராத் கோஹ்லி (22) ரன்அவுட்டானார். 44 பந்துகளில் 24 ரன்கள் மட்டும் எடுத்த சச்சின், போத்தா சுழலில் வீழ்ந்தார்.
யுவராஜ் அரைசதம்:
அடுத்து யுவராஜ் சிங்குடன் கேப்டன் தோனி சேர்ந்தார். இருவரும் ஒன்று, இரண்டு ரன்களாக சேர்க்க, ஸ்கோர் மெதுவாக உயர்ந்தது. டிசோட்சபே பந்தில் பவுண்டரி அடித்த யுவராஜ், சர்வதேச அரங்கில் 45 வது அரைசதம் கடந்தார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இது 5வது அரைசதம் ஆகும். 4வது விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்த நிலையில், யுவராஜ் சிங் (53) அவுட்டானார்.
பின் பேட்டிங் "பவர்பிளேயிலும்' இந்திய வீரர்கள் சொதப்பினர். ரெய்னா (11) முதலில் திரும்பினார். நீண்ட நேரம் தாக்குப்பிடித்த தோனியும் (61 பந்தில் 38 ரன்கள்) அணியை கைவிட்டார். அடுத்து வந்த ஹர்பஜன் 3, ஜாகிர் கான் "டக்' அவுட்டாகினர். 'பவர்பிளேயில்' (5 ஓவர், 14 ரன்கள்) 4 வீரர்கள் அவுட்டாகினர்.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மாவும் (9) நிலைக்கவில்லை. நெஹ்ரா 1 ரன் எடுத்தார். முடிவில், இந்திய அணி 47.2 ஓவரில் 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கடைசி 21 ரன்கள் எடுப்பதற்குள், இந்தியாவின் 6 வீரர்கள் அவுட்டாகி ஏமாற்றினர். தென் ஆப்ரிக்காவின் டிசோட்சபே 4, ஸ்டைன், மார்கல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
'திரில்' வெற்றி:
எளிய இலக்கை விரட்டிய தென்ஆப்ரிக்க அணிக்கு ஆம்லா (4) ஏமாற்றினார். பின் ஸ்மித் 77 ரன்கள் எடுத்து கைகொடுத்தார். பின்னர் வந்த டும்னி(13), போத்தா(4) ஆகியோர் கைவிட்டனர். தென் ஆப்ரிக்க அணியின் வெற்றிக்கு 4 ரன்கள் தேவை என்ற நிலையில் முனாப் வீசிய போட்டியின் 43வது ஓவரின் 2வது பந்தில் மார்க்கல்(6) ஆவுட்டானார். இதே ஓவரின் கடைசி பந்தில் பார்னலும்(12) ஆவுட்டாக, தென்ஆப்ரிக்க அணி 43 ஓவரில் 189 ரன்களுக்கு சுருண்டது.இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் "திரில்' வெற்றிப்பெற்றது.
ஆட்டநாயகனாக 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முனாப் பட்டேல் தேர்வுப்பெற்றார்.
3 comments:
நன்றி டிலீப்.. எங்கே காவலன் விமர்சனம் காணல... வாசகரை கொமண்டில் கலாய்க்கலாம் சும்மா ஏமாத்தல் பதிவு போட்டு கலாய்க்க வெளிக்கிட்டால் நட்டம் ஏற்படுமே.. கவனமாக எழுதுங்க டிலீப்...
நாம யாரு....கடைசி வரை போராடுவமுல்ல...............
yes நாம யாரு... he he he
Post a Comment