"எம் தேசத்தின் குரல் செவியில் விழாதா"
மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு முட்டியது போன்று போர் என்ற அரக்கனின் பிடியிலிருந்து விடுபட்டு நிம்மதியான சுவாசகாற்றை சுவாசிக்கும் போது இயற்கை அன்னையின் கோரப்பிடியில் சிக்கி அல்லலுறும் நம் உறவுகளுக்காக..
இன்றைய நாட்காளில் இயற்கை கூட சதி செய்கிறது நம் உறவுகளுக்கு.
கிழக்கின் பெருமழை காரணமாக அல்லலுறும் எம் மக்களுக்கு உதவி கரம் நீட்டவே இப்பதிவு
அன்புள்ள நெஞ்சங்களே உடமை இழந்து , இருக்க இடமின்றி உண்ண உணவின்றி அவதிப்படும் மக்களுக்கு உதவுங்கள்.
கிழக்கின் பெருமழை காரணமாக அல்லலுறும் எம் மக்களுக்கு உதவி கரம் நீட்டவே இப்பதிவு
அன்புள்ள நெஞ்சங்களே உடமை இழந்து , இருக்க இடமின்றி உண்ண உணவின்றி அவதிப்படும் மக்களுக்கு உதவுங்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு பாடசாலைகளிலும், ஏனைய இடங்களிலும் தங்கியுள்ள மக்கள் சுகாதார வசதிகள் இன்றி பெரும் அவலப்படுகின்றனர்
கிழக்கு மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு முடியுமானால் உதவிகளை வழங்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளர் காமினி ராஜகருண கருத்து வெளியிடுகையில் :
இலங்கை வங்கியின் டொரிண்டன் கிளையின் 0007040166 என்ற கணக்கு இலக்கத்துக்கு வைப்புச் செய்யலாம். அல்லது 0112681983 என்ற இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டு நிதியுதவியை வழங்க முடியும்.

இதேவேளை பொருள் உதவியை வழங்க விரும்புபவர்கள் 0112530438 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டு ஊருகொடவத்தையில் உள்ள உணவு களஞ்சியசாலையில் அவற்றை ஒப்படைக்கலாம். 0713041226 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் தொடர்புகொண்டு பொருள் உதவியை வழங்க முடியும் என்றார்
இவ்வாறு அரசாங்கம் தனது அனர்த்த முகாமைத்துவ நிவாரண பணியை ஆரம்பிக்க , அரச சார்பற்ற நிறுவனங்கள் , வானொலி சேவைகள் மற்றும் நல மனம் கொண்ட பலரும் என் சொந்தங்களுக்கு உதவிகளை செய்ய முற்படுகின்ற வேலை மனிதம் கொண்ட உங்களாலும் முடிந்த உதவிகளை நம் சொந்தங்களின் மிக அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய உதவுங்கள். குறிப்பாக...
தண்ணீர் போத்தல்,உலர் உணவுப் பொதிகள்
பால்மா , பருப்பு , அரிசி
மருந்துகள், கொசு வலைகள்
பால்மா , பருப்பு , அரிசி
மருந்துகள், கொசு வலைகள்
என்பவற்றை அன்புள்ளங்கள் உங்களிடம் உதவி கரம் நீட்டுமாறு தாழ்மையுடன் கேட்கின்றோம்
உன் உறவுகள் பசிப்போக்க உதவிடுங்கள்.
உன் உறவுகள் பசிப்போக்க உதவிடுங்கள்.
8 comments:
//"எம் தேசத்தின் குரல் செவியில் விழாதா"//
கண்டிப்பாக கேட்கும்
அவசியமான் பதிவு டிலீப்
கண்டிப்பாக உதவிகள் கிடைக்கும்
நம்மவர்கள் கைவிட மாட்டார்கள் அன்பா..
உங்கள் ஆதங்கம் செவிடன் காதில் ஊதிய சங்குதான் என்றாலும் அம்மளுக்காக பிரார்த்திக்கின்றேன்
அரசு ஊடாக செய்வது எங்கு போகுமோ என்று பலரும் ஐயுறுகின்றார்கள்.
ஆனாலும் தனிப்பட்ட உதவிகள் வந்துள்ளன என்பது தெரிகிறது.
நாமும் வருகிறோம்..
மீண்டும் வளம் பெறும் இம்மக்கள் வாழ்வு.
எம்மால் முடியும். நம்பி இருங்கள் சகோ..
//Harini Nathan said...
//"எம் தேசத்தின் குரல் செவியில் விழாதா"//
கண்டிப்பாக கேட்கும்
அவசியமான் பதிவு டிலீப்
கண்டிப்பாக உதவிகள் கிடைக்கும்//
ஆம் ஹரிணி இன்னலின் போது உதவி செய்பவன்தான் மனிதன்
நம்புகிறேன் உதவி கிடைக்குமென்று...
//“நிலவின்” ஜனகன் said...
நம்மவர்கள் கைவிட மாட்டார்கள் அன்பா..//
நிச்சமாக நண்பா.
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
உங்கள் ஆதங்கம் செவிடன் காதில் ஊதிய சங்குதான் என்றாலும் அம்மளுக்காக பிரார்த்திக்கின்றேன்//
சதீஷ் அண்ணா மனிதாபிமானம் உள்ளவர்கள்
உதவி செய்வர்கள் என்று நினைக்கிறேன்.
//LOSHAN said...
அரசு ஊடாக செய்வது எங்கு போகுமோ என்று பலரும் ஐயுறுகின்றார்கள்.
ஆனாலும் தனிப்பட்ட உதவிகள் வந்துள்ளன என்பது தெரிகிறது.
நாமும் வருகிறோம்..
மீண்டும் வளம் பெறும் இம்மக்கள் வாழ்வு.
எம்மால் முடியும். நம்பி இருங்கள் சகோ.//
லோஷன் அண்ணா அரசாங்கத்தின் வள்ளலைத்தானே சுனாமி நிவாரண பணியின் போதே கண்டுவிட்டோமே.
தனியார் மற்றும் வானொலி நிறுவனங்கள் நிவாரணங்களை சேகரிப்பதாக கேள்விப்பட்டேன். ஆனால் எப்போது எப்பிரதேசங்களுக்கு அவ் வானொலி சேவை நிறுவனங்கள் நிவாரணங்களை சேகரிக்க செல்கின்றது என தெரியவில்லை.
உங்களால் முடிந்தால் அது சம்பந்தமான தகவலை அறிய தரவும்
Post a Comment