“நீ தோல்வியடைவாய் என்று சொல்பவர்கள் முன்னிலையில் வெற்றிகரமாக வாழ்ந்து காட்டுவதும் ஒரு விதத்தில் பழி தீர்ப்பதுதானே”
புத்தாண்டிலாவது மனிதருக்கிடையில் காணப்படும் பழிவாங்கும் அல்லது பழிதீர்க்கும் எண்ணம் அவர்களை விட்டு அகல வேண்டும் என்பதற்காகவே சோக நாடகங்களின் தந்தையை பற்றியும் அவர் எழுதிய பழிதீர்த்தல் நாடகத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
வைரக்கல் சிறியதாக இருந்தாலும் அதன் மதிப்பே தனி என்பது போல ஏதென்ஸ் நாடும் சிறதுதான்.இருந்தாலும் அதன் புகழும் செல்வாக்கும் உலகின் பல நாடுகளின் கலாச்சாரத்தை மாற்றியமைத்தது.
கிரேக்க போர்களில் அடைந்த வெற்றிகளை கொண்டாட கிரேக்கர்களுக்கு இலக்கியம் தேவைப்பட்டது.தோல்விகளுக்கும் இலக்கியம் வடிகாலாக உதவியது.
ட்ராஜடி என்கிற சோக நாடகங்கள் முதலில் தோன்றியது ஏதென்ஸில்தான்.ட்ராஜடி சீன் ஆர்க்கெஸ்டிரா போன்ற ஆங்கில சொற்களெல்லாம் கிரேக்க மொழியிலிருந்து வந்தவையே.போட்டியில் வெற்றி பெறும் சோக நாடகத்துக்கு செம்மறியாடு ஒன்றைப் பரிசாக கொடுப்பது பண்டைய கிரேக்க சம்பிரதாயம்.
சோக நாடங்களின் தந்தை என அழைக்கப்படுபவர்
எஸ்கீலஸ்.அவர் கி.மு.525-ல் பிறந்தார்.புகழ்பெற்ற மாரத்தான் போரில் பங்கேற்று வீரத்தோடு போரிட்ட நாடகாசிரியர் எஸ்கீலஸ்.
நாடகத் தந்தை என்று அழைக்கப்பட்டாலும் எஸ்கீலஸ் தான் இறந்தபிறகு தன் கல்லறையில் எழுத சொன்ன வாசகம் இதுதான்.”இது எஸ்கீலஸின் கல்லறை.அவருடைய வீரத்துக்கு அவர் பங்கேற்ற மாரத்தான் போரே சாட்சி சொல்லும்”
நாடகக் கலையில் முதன்முதலாக பல புதிய அம்சங்களை புகுத்தியவர் எஸ்கீலஸ்.அவருடைய பிரவேசத்துக்கு முன்புவரை நாடக மேடையில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே நின்று வசனங்களை
உச்சரிப்பார்.இரண்டாமவரான ஒரு நடிகரை நாடகத்தில் முதலில் புகுத்தியவர் எஸ்கீலஸ் தான்.அதிலிருந்துதான் ‘டயலொக்’ என்னும் நாடகத்தில் இருவர் உரையாடும் வழக்கமே ஆரம்பித்தது.கதாபாத்திரங்களுக்கேற்ப மேக்கப் போடுகிற வழக்கத்தை தொடங்கி வைத்ததும் அவரே.
எஸ்கீலஸ் எழுதிய பல நாடங்கள் தொலைந்து போய் விட்டன.தப்பித்தது சில பொக்கிஷங்களே.அதில் முக்கியமானது கி.மு.458-ல் எழுதப்பட்ட “ஒரிஸ்டீயா”!.ஒரே கதையில் அமைந்த மூன்று குறுங்நாடகங்கள் இணைநடத பெரும் நாடகம்.
ஒரிஸ்டீயாவின் கதை சுருக்கம்.
ட்ரோஜன் யுத்தத்தில் (மாபெரும் மரக்குதிரையிலிருந்து வீரர்கள் வெளிப்பட்ட போர்) கிரேக்க படைக்குத் தலைமை தாங்கிய அகெமெம்னான் வாழ்கையிலிருந்து கதை தொடங்கிறது.
அந்த போருக்கு கப்பல்களை கொண்டு செல்ல முடியாதவாறு கடலில் கடும் புயல் காற்று வீசுகின்றது.காற்று தேவதையான ஆர்டெமிசுக்கு அகெமெம்னானின் மகள் இஃபிஜீனியாவை பலி கொடுத்தால் தான் புயல் நிற்கும் என்கிறது அசரீரி.
தன் மனைவி அதை அனுமதிக்கமாட்டாள் என்று ஊகிக்கும் அகெமெம்னான் மகளுக்கு அகிலீஸ் என்னும் மகா வீரனுடன் திருமணம் செய்ய போவதாக பொய் சொல்லிவிட்டு மகளை அழைத்து சென்று பலி கொடுத்து விடுகிறான்.
கணவன் தன்னிடம் பொய் சொன்னது தெரிந்து கடுங்கோபம் கொள்கிறாள் மனைவி.பத்து ஆண்டுகள் கழித்து அகெமெம்னான் நாடு திரும்புகிறான்.மனைவியின் பழி உணர்வு அகலவில்லை.தன் காதலனுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி கணவன் குளித்துக் கொண்டிருக்கும் போது அவனைக் கொலை செய்கிறாள்.
மகளை பலி கொடுத்த குற்றத்தக்கு பழிதீர்க்க வேண்டிய நியாயம் தாயின் தரப்பில் இருந்தாலும் இப்போது கணவனை கொன்ற பழிக்கு ஆளாகிறாள் அவள்.
மனிதர்களிடையே பழிதீர்க்கும் எண்ணத்தை தோற்றுவிக்கும் பெண் கடவுள் எரின்யெஸ் ‘ஒரு போதும் பழிதீர்க்காமல் மனிதன் இருந்து விடக்கூடாது’ என்பதில் மிகவும் குறியாக இருப்பவள்.
மனைவிக்கு அந்த கடவுளின் தர்மப்படி என்ன நேர வேண்டும்?
நாடகத்தின் அடுத்த பகுதி மேலும் தொடர்கிறது.அகெமெம்னானின் மகன் ஒரிஸ்டெஸ் தந்தையைக் கொன்ற தாயை பழிக்கு பழி தீர்க்க சூளுரைப்பதிரிருந்து இரண்டாவது பகுதி தொடங்குகிறது.தாயை மகன் கொலை செய்ய இப்போது தாயைக் கொன்ற பழி மகனுக்கு.பழிகடவுள் குரூரமாகப் சிரிக்கிறாள்.
நாடகத்தின் மூன்றாவது பகுதியில் கடவுள்களின் கடவுளான ஜீயஸ் இந்த பழி தீர்க்கும் படலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் உடனே வழக்காடு மன்றத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று ஆணையிட “ஓரீஸ்டஸ் வழக்கு நீதிமன்த்துக்கு வருகின்றது.நீதி தேவதை ஏதினா பிராஸிக்யுஷன் தரப்பிலும் அப்போலோ ஓரீஸ்டஸ் தரப்பிலும் வாதாடுகிறார்கள்.
பழிதீர்க்கப்பட வேண்டும் என்கிற கடவுளின் ஆணையைத்தான் இந்த இளைஞன் நிறைவேற்றினான்.அது அவன் சிந்தித்து சுயமாக எடுத்த முடிவல்ல.பழி உணர்வை விதைத்தது கடவுளே! என்று அப்போலோ வாதாட நீதிபதிகள் ஓட்டு போடுகின்றனர்.
இருதரப்புக்கும் சரிசமமாக ஓட்டு விழ பிரதம நீதிபதி ஏதினா முத்தாய்ப்பாகத் தன் வோட்டை அந்த இளைஞன் சார்பில் போடுகிறாள்.
கோபமடையும் பழிக்கடவுள் எரின்யெஸ்ஸை ஜீயஸ் கடவுள் அழைத்து பழிதீர்ப்பதை நல்ல விஷயங்களுக்கும் உபயோகிக்கலாம் என்று எடுத்து சொல்லி சமாதானப்படுத்துகிறார். “நீ தோல்வியடைவாய் என்று சொல்பவர்கள் முன்னிலையில் வெற்றிகரமாக வாழ்ந்து காட்டுவதும் ஒரு விதத்தில் பழி தீர்ப்பதுதானே”
எஸ்கீலஸ் மரணம் சற்று இல்லை ரொம்பவே வித்தியாசமானது.
கி.மு.455-ல் ஒரு நாள் தெருவில் எஸ்கீலஸ் நடந்து போய்க் கொண்டிருந்த போது வானத்தில் ஒரு கழுகு பறந்தது.அதன் பிடியிலிருந்த ஆமையொன்று நழுவி எஸ்கீலஸ் தலை மீது விழ தலை பிளந்து இறந்து போனார்.
இந்த கதையை பார்த்தாவது மற்றவர்களை பழிதீர்க்கும் எண்ணம் நம்மை விட்டு நீங்கட்டும்.
8 comments:
நன்றி நண்பரே இதுவரை நான் அறிந்திராது ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி ...
பதிவுலக நண்பர்களே..
அருமையான பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
http://sakthistudycentre.blogspot.com
என்னையும் கொஞ்சம் blog ல Follow பன்னுங்கப்பா...
//sakthistudycentre.blogspot.com said...
நன்றி நண்பரே இதுவரை நான் அறிந்திராது ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி ...
பதிவுலக நண்பர்களே..
அருமையான பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
http://sakthistudycentre.blogspot.com
என்னையும் கொஞ்சம் blog ல Follow பன்னுங்கப்பா...//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே
டிலீப் உங்கள் பதிவுகளில் இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது
வாழ்த்துக்கள் நண்பா
//Harini Nathan said...
டிலீப் உங்கள் பதிவுகளில் இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது
வாழ்த்துக்கள் நண்பா//
புதுவருடம் எனவே கொஞ்சம் வித்தியாசம்
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஹரிணி
ஹ்ம்ம்..நல்ல கருத்தைச் சொல்லும் பதிவு.. நன்றி.. :)
அசத்தல்....
Ananthi (அன்புடன் ஆனந்தி) said...
ஹ்ம்ம்..நல்ல கருத்தைச் சொல்லும் பதிவு.. நன்றி.. :)
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஆனந்தி
//Jana said...
அசத்தல்...//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஜனா அண்ணா.
Post a Comment