அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

JESUS CALLS பதிவரிடம் சில கேள்விகள் ?



JESUS CALLS தினகரனும் கொள்ளை கும்பலும்
பதிவரிடம் சில கேள்விகள் ?


நான் இருதினங்களுக்கு முன்பு என் வலைபதிவர் நண்பரின் ஒரு பதிவை பார்த்தேன்.அப் பதிவின் தலைப்பு JESUS CALLS தினகரனும் கொள்ளை கும்பலும்.நான் அப்பதிவை பார்த்ததும் நினைத்தேன் நண்பர் அந்நிய மதத்தை சேர்தவரும் கிறிஸ்தவத்தை பற்றி அறியாமல் அவ்வாறான பதிவிட்டு இருப்பார் என. ஆனாலும் அவரது அடுத்த பதிவில் தானும் ஒரு கிறிஸ்தவன்தான் என்ற பொழுது நான் அதிர்ச்சியடைந்தேன்.




நண்பர் கூறிய சில விடயங்களுக்கு எனது கருத்தை கூற விரும்புகிறேன்.ஏன் என்றால் நானும் ஒரு கிறிஸ்தவன் என்றபடியால்.நான் நண்பரின் பதிவுக்கு பின்னூட்டல் மூலமே எனது கருத்தை தெரிவித்திருப்பேன் ஆனாலும் எல்லோரும் வாசிக்க வேண்டுமென்பதற்காக ஒரு பதிவாக இடுகிறேன்.


நண்பர் கூறி இருந்தார் தான் இளம் வயதிலிருந்தே ஜெபகூட்டங்களுக்கு செல்வதாக அவ்வாறு நீங்கள் சென்று இருப்பிர்களானால் கடவுள் (இயேசு) பற்றி நன்கு அறிந்து இருப்பீர்கள் மற்றும் பைபிளை வாசித்து இருப்பீர்கள். நான் கூறுவது சரியா நண்பரே ?


உங்கள் பதிவில் இவ்வாறான ஒரு விடயம் இருந்தது.
“கடவுளுக்கு வேற வேலை இல்லையா ? இவர் காதில் இந்த ஆண்டு என்னென்ன நடக்கப் போகிறது என்று சொல்வதுதான் வேலையா ? பேரழிவுகளை பற்றி முன்கூட்டியே சொல்ல வேண்டியது தானே?


நண்பரே நீங்கள் கிறிஸ்தவனாக இருந்தால் இவ்வாறான கேள்விகளை கேட்டு இருக்க மாட்டீர்கள்.
ஏன் என்றால் கிறிஸ்தவனுக்கு தெரியும் கடவுள் மனிதர்களுடன் பேசுவார் என்பதை.பேசுவார் என்றால் முன்னால் தோன்றி இல்லை ஜெபம் செய்யும் போழுது…


பேரழிவுகளை பற்றி கூறி இருக்குறார்கள்.பேரழிவை பற்றி நேரடியாக கூறமாட்டார்கள்.கன்னியாகுமாரியில் இலங்கையில் சுனாமி வர போகுறது என இடத்தை சரியாக எந்த தீர்க்கதரிசியும் சொல்ல மாட்டார்கள் மறைபொருளாகவே தீர்க்கதரிசனத் உரைப்பார்கள்.(தீhக்கதரிசி என்றால் யார் என்று உங்களுக்கு தெரியுமோ என எனக்கு தெரியாது.)


அடுத்தது தாங்கள் குறிப்பிட்டு இருந்தீர்கள் “தனக்காக இன்னொருவன் பிராத்தித்தால் கடவுள் கேட்டுவிடுவாரா ?”
( இதை வாசித்ததும் எனக்கு சிரிப்புதான் வந்தது ) கிறிஸ்தவத்தில் மற்றும் அல்ல வேற்று மதங்களிலும் மற்றவர்களின் துன்பத்துக்காக
வேண்டிக்கொண்டால் நிச்சமாக கடவுள் கேட்பார்.நீங்கள் கிறிஸ்தவர் என சொன்னீர்கள் பைபிள் வாசித்தது 
இல்லையா ?


உன் அயலானை நேசியென இயேசு கூறுகிறார்.
அதுதான் மற்றவர்களுக்கு உதவி செய்வது அவர்களின் துன்பத்துக்காக ஜெபம் பண்ணுவது.


JESUS CALLS பற்றி கருத்து கூறவிரும்பவில்லை ஏன்னென்றால் அதைபற்றிய ஆதரங்கள் என்னிடமில்லை.சில வேளை நீங்கள் குறிப்பிட்டது போலவே இருக்கலாம்.ஆனால் நான் இப்பதிவிடுவதற்கான காரணம் நீங்கள் கிறிஸ்தவனாக இருந்துமா மேலே நான் குறிப்பிட்ட விடயங்களை எழுதியுள்ளீர்கள் ?


உம்மையாக நீங்கள் கிறிஸ்தவரா? 

ஓர் மதத்தை பற்றி எழுத முன்பு அவ்மதத்தை பற்றி நன்கு அறிந்துவிட்டு எழுதுங்கள்.
இவ்வாறாக கொஞ்சத்தை தெரிந்துவைத்த கொண்டு தாங்கள் அறிவாளிகலென சிலர் பதிவுலகில் உலாவுதை நான் அவதானித்துள்ளேன். 
















Post Comment


44 comments:

பொன் மாலை பொழுது said...

JESUS CALLS தினகரனும் கொள்ளை கும்பலும் என்ற பதிவினை பற்றி பேச எவரும் ஒரு கிருஸ்துவராய் இருக்க என்ன அவசியம்? தனிமனித நேர்மையும், 'மதம்' பிடிக்காத சாதாரண மனிதராக இருந்தாலே போதும். சரி. அந்த கும்பல்கள் மீது அவர்கூறிய குற்றசாட்டுகளை பற்றி ஒன்றும் கூறாமல் வெறுமனே அவர நீ ஒரு கிறிஸ்தவனா என்று கேட்பது வேடிக்கை. விஷயத்தை திசை திருப்பாதீர்கள். தினகரன் மற்றும் அவர்களின் கொள்ளைக்கும்பல் பற்றியதே அன்றி கிருஸ்துவத்தை பற்றி எவரும் எதுவும் சொல்லவில்லை. அதற்கு அவசியமம் இல்லை.

டிலீப் said...

//கக்கு - மாணிக்கம் said...
JESUS CALLS தினகரனும் கொள்ளை கும்பலும் என்ற பதிவினை பற்றி பேச எவரும் ஒரு கிருஸ்துவராய் இருக்க என்ன அவசியம்? தனிமனித நேர்மையும், 'மதம்' பிடிக்காத சாதாரண மனிதராக இருந்தாலே போதும். சரி. அந்த கும்பல்கள் மீது அவர்கூறிய குற்றசாட்டுகளை பற்றி ஒன்றும் கூறாமல் வெறுமனே அவர நீ ஒரு கிறிஸ்தவனா என்று கேட்பது வேடிக்கை. விஷயத்தை திசை திருப்பாதீர்கள். தினகரன் மற்றும் அவர்களின் கொள்ளைக்கும்பல் பற்றியதே அன்றி கிருஸ்துவத்தை பற்றி எவரும் எதுவும் சொல்லவில்லை. அதற்கு அவசியமம் இல்லை//




நண்பரே அவர் கூறிய கிறிஸ்தவம் சம்பந்தமான சில விசஷயங்களை தவறு என கூறிகிறேன்.அவரின் அடுத்த பதிவிலேயே சொல்லி இருந்தார் தான் கிறிஸ்தவன் என்று.கிறிஸ்தவன் தெரிந்து இருக்க வேண்டிய அடிப்படை விடயங்கள் கூட தெரியாததை போல் அவர் எழுதி இருப்பதையே நீங்கள் கிறிஸ்த்தவனா என்ற கேள்விக்கு என்னை இட்டு சென்றது.

நான் அந்த கும்பலை பற்றி அவர் கூறியதை தப்பு என்று கூறவில்லையே.
நீங்கள் ஒழுங்காக நான் குறிப்பிட்டுள்ள

( கடவுளுக்கு வேற வேலை இல்லையா ? இவர் காதில் இந்த ஆண்டு என்னென்ன நடக்கப் போகிறது என்று சொல்வதுதான் வேலையா ?)

கேள்விகளை பாருங்கள்.அது அந்த கும்பலை பற்றியது இல்லை கிறிஸ்தவத்தை பற்றியே கூறியுள்ளார் மறைமுகமாக...

பொன் மாலை பொழுது said...

நண்பர் டிலீப்,

இயல்பான கண்ணியமான தங்களின் தரப்பு கருத்துக்களை மதிக்கின்றேன். சாதாரணமாக மாற்று கருத்துக்கள் என்றாலே கேவலமாக பதில் எழுத மட்டுமே துடிக்கும் வலைதளைகளில், உங்களின் அணுகுமுறை பாராட்டப்படவேண்டும்.

தொப்பி தொப்பி தன்னுடைய 'JESUS CALLS தினகரனும் கொள்ளை கும்பலும்' பதிவில் அவரகளின் ஏமாற்று தனங்களை பற்றியே பேசியுள்ளார். பிறப்பால் ஒரு கிறிஸ்துவராக இருந்தும் அவர் இந்த கும்பல்கள் செய்துகொண்டிருக்கும் தில்லுமுல்லுகளையும், இறைவன் பெயரில் கர்த்தரில் பெயரில் இவர்கள் அப்பாவி மக்களை சுரண்டி சொத்து சேர்ப்பதும் பற்றியேதான் கூறுகிறார். விவாதம் என்று வரும் பொது கூறப்படும் உவமைகளை மட்டுமே முன்னிருத்தினால் நாம் பேசும் விஷயங்களே திசை மாறி போவிடும். அவரின் நோக்கம் மதத்தை பற்றியதல்ல. மதத்தின் பெயரால் கொள்ளை அடிக்கும் தினகரன் கும்பலை பற்றியதே என்பதை தாழ்மையுடன் குறிப்பிடுகிறேன்.

டிலீப் said...

நன்றி நண்பர் மாணிக்கம்...

நண்பரே நீங்கள் கூறும் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.நான் அவர் கூறிய தினகரன் பற்றிய கட்டுரைக்கு எந்த விமர்சனமும் சொல்லவில்லையே.அவரின் அடுத்த பதிவான நானும் கிறிஸ்தவனே என்றால் பதிவாலே நான் எனது கருத்தை அதாவது சில கேள்விகளை கேட்டிருந்தேன். கிறிஸ்தவத்தின் அடிப்படை விசயங்கள் உங்களுக்கு தெரியவில்லையாயென...

நண்பரே எனது கருத்தை சுமுகமாக தெரிவிக்கவே நான் இதை பதிவாக இட்டேன்.
மற்றபடி கேவலமாக , சண்டையிட்டு பதில் அளிக்க எனக்கு இஷ்டம் இல்லை.
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே

Harini Resh said...

விமர்சனம் என்ற பெயரில் நிறைய பேர் காரண காரியமின்றி ஏதோ எழுதுகின்றோம் என எழுதுகிறார்கள்.
மதத்தின் பெயரால் கொள்ளையடிப்பவர்கள் எல்லா மதத்திலும் இருக்குறார்கள் அதற்காக கடவுளையோ மதத்தையோ குறை கூறுவது மிகப்பிழை
இவ்வாறான விடயங்களை எடுத்துக்காட்டுவதற்கு பாராட்டுக்கள் டிலீப். அத்துடன் அந்த பதிவின் link கையும் இணைத்திருந்தால் வாசகர்களுக்கு புரிந்து கொள்ள இலகுவாக இருந்திருக்கும்.

டிலீப் said...

ஹரிணி Link போடுவதால் வீண் கருத்து மோதல் தான் வரும்
ஆகவே போடவில்லை

Unknown said...

இது ஒரு தனிப்பட்ட மதம் பற்றிய கருத்து அல்ல. மதத்தின் பெயரைச்சொல்லி கடவுளின் authorised agent ஆக செயல்படும் (எல்ல மதத்திலும் உண்டு) ஒரு சிலரைப்பற்றிய கருத்தாகும். நாம் அந்த மதத்தில் இருப்பதனால் அதனை மறைக்கவேண்டும்,மறுக்க வேண்டும் என்பது நாம் நாமே ஏமாற்றிக்கொள்வதுதானே தவிர வேறில்லை. நமக்குள் மதத்தால் ஆன ஒரு பிரிவோ,சர்ச்சையோ தேவையில்லை. மதம் ஒரு நம்பிக்கை,ஒரு பிழைப்போ அல்லது வியாபாரமோ அல்ல. ஆனால் அப்படி ஆகிவிட்டதுதான் வருத்தம். நன்றி.

டிலீப் said...

நண்பரே நான் இங்கு அந்த குழுவை பற்றி கருத்துரைக்கவில்லை.
ஒருவர் நம்புகின்ற மதத்தை பற்றி அவதூரக எழுதிமைக்கே எனது கண்டனத்தை தெரிவித்துள்ளேன. எனது கேள்விகளை குறிப்பிட்டுள்ளேன் பாருங்கள்

sakthi said...

நண்பரே வணக்கம் ,
anybody not against to jesus but i'm against to those people who use the weapon poverty to change a religion .குறிப்பாக வறுமையை குறிவைத்து பல மத மாற்றங்கள் நடக்கின்றன .(யார் மத மாற்றம் செய்கிறார்கள் என்று கண்டிப்பாக உங்களுக்கு தெரியும் ) .கோவையில் வந்து பாருங்கள் பல கிலோ மீட்டர் நீளத்திற்கு காருண்யா க்ரூப் வங்கி உள்ளது ஏது பணம் .?கடவுளிடம் கூட யாருக்கும் பயம் இல்லாமல் போய் விட்டது .எல்லாம் அழிவிற்கு தான் .
நட்புடன் ,
கோவை சக்தி

டிலீப் said...

நண்பரே மதத்தின் பெயரால் கொள்ளையடிப்பவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும். அப்பதிவில் அவர் குறிப்பிட்டு இருந்த சில விடயங்களுக்கே எனது எதிர்ப்பை தெரிவித்துள்ளேன்.

"தனக்காக இன்னொருவன் பிராத்தித்தால் கடவுள் கேட்டுவிடுவாரா ?”

“கடவுளுக்கு வேற வேலை இல்லையா ? இவர் காதில் இந்த ஆண்டு என்னென்ன நடக்கப் போகிறது என்று சொல்வதுதான் வேலையா ?


கருத்துக்கும் வருகைக்கு நன்றி நண்பரே

Kousalya Raj said...

நானும் அந்த பதிவை படித்தேன்...மதத்தின் பெயரால் பணம் சம்பாதிப்பவர்களை பற்றி எழுதுவது மற்றவர்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். சில மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு மதம் என்ன செய்யும்...?

மத உணர்வுகளை புண்படுத்தாமல் தங்கள் கருத்துக்களை சொல்வது ஆரோக்கியமான சூழ்நிலைக்கு நம்மை அழைத்து செல்லும்.

நன்றி டிலிப்.

டிலீப் said...

நானும் அதைத்தான் கூறுகிறேன் மதநம்பிக்கை உணர்வுகளை மதித்து தங்கள் கருத்தை தெரிவியுங்கள்.

கருத்துக்கும் வருகைக்கு நன்றி கௌசல்யா

Jayadev Das said...

நீங்க எத்தனையோ விஷயங்களைச் சொல்லி இதுதான் கிறிஸ்தவம் என்று சொல்கிறீர்கள், அதை எதை வைத்து சரியாகத்தான் சொல்லியுள்ளீர்கள் என்று முடிவு செய்வது? உதாரணத்துக்கு Thou shalt NOT kill என்று முதல் Commandment சொல்கிறது. இதை பலரும் அவரவர் விருப்பத்திற்கேற்ப பல்வேறு விதமான விளக்கம் கொடுக்கிறார்கள். உண்ணுவதற்காக தாவரங்களைத் தவிர மற்ற மிருகங்களையோ, பறவைகளையோ, மீன் போன்றவற்றையோ கொள்ளக் கூடாது என்பது சிலரது விளக்கம். [ஆனா இப்படிச் சொல்கிறவர்கள் ரொம்ப கம்மி. ஹா... ஹா... ஹா...]. NOT kill என்றால் மனுஷனை மட்டும்தான் கொள்ளக் கூடாது, மற்றது எதை வேண்டுமானாலும் அடித்துத் தின்னலாம். [After all வயித்துக்குத்தானே கொள்றோம், தப்பே இல்ல, ஆண்டவன் படைச்சதே மனுஷனுக்குத்தான், மனுஷனைத் தவிர மத்த எதுக்கும் ஆன்மா இல்லப்பா போட்டுத் தள்ளு, அப்படியே இருந்தாலும் அதுங்க என்ன நம்மள மாதிரி பேன்ட் சட்டையா போட்டுகுது, அதுங்க இருந்தா என்ன போனா என்ன போட்டுத் தள்ளு! என்பது இன்னொரு வாதம்!]. NOT kill என்றால் இன்னும் சவுகர்யமா இருக்க சக நாட்டு மனிதரைக் கொள்ளக் கூடாது, இல்லை இல்லை கூடப் பிறந்தவங்களை அட்டும் கூல்லக் கூடாது.... இப்படி இஷ்டத்துக்கு கதையளக்கலாம். Jesus சொல்ல வந்ததென்ன என்பது அவருக்கே வெளிச்சம். நீங்கள் குறிப்பிட்டுள்ளதும் அதே போல்தான், ஆளாளுக்கு மனதில் பட்டதை அள்ளி விடுவது, அதுதான் உண்மையான கிறிஸ்தவம் என்றும் சொல்வது. Bible இன்று இருப்பது உண்மையான வடிவம் இல்லை, ஆளாளுக்கு இஷ்டத்துக்கும் மாற்றப் பட்டு உருக்குலைந்த வடிவே இன்றையது என்றும் சொல்கிறார்கள். நீங்கள் சொல்லப் பாடிருப்பதும் அப்படி யார் அளந்து விட்ட கதையோ தெரியலையே!

Jayadev Das said...

நான் முதலில் பெற்றோர் வற்புறுத்தலால் இறைச்சி சாப்பிட்டவன், பின்னர் அது தவறென்று வீட்டினர் எதிர்ப்பையும் மீறி மாமிசத்தை விட்டு விட்டேன். பின்னர் Lord Jesus செய்த அற்புதங்கள் ஒன்றில் சாப்பிட மீனைக் கொடுத்ததாகப் படித்து, இறைத் தூதரே மீன் கொடுத்து சாப்பிடச் சொல்லியிருக்கிறாரே, அதனால் மீன் உன்னத்தக்கதே என்றெண்ணி மீன் மட்டும் சாப்பிட ஆரம்பித்தேன். பின்னர், எனது ஆசிரியரிடம் [கிறிஸ்தவர்], விளக்கம் கேட்டபோது அவர் சொன்னார், "மாமிசம் எந்த வகையிலும் உண்ணலாகாது, அந்த அற்புதம் செய்தது இறைவனின் மேல் விசுவாசம் வைத்திருப்பது எவ்வளவு மகத்துவமானது என்று காண்பிப்பதற்க்காகச் செய்யப்பட்டது, அதைப் பார்த்து கண்ணில் கண்டதையெல்லாம் அடித்துச் சாப்பிடுவது தவறு, நமக்கு கொடுக்கப் பட்டது தாவர உணவே". அன்றைக்கு விட்டவந்தான் இந்தப் புலாலை! நாக்குக்கு அடிமையான பின், பைபிளையே திரித்துக் கூறுபவர்கள் தான் நிறைய இருக்கிறார்கள், என் ஆசிரியர் மாதிரி மாதிரி எத்தனை கிறஸ்தவர்கள் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?

Jayadev Das said...

// கடவுள் மனிதர்களுடன் பேசுவார் என்பதை.பேசுவார் என்றால் முன்னால் தோன்றி இல்லை ஜெபம் செய்யும் போழுது…...//எங்கள் நண்பரின் மகன், இளைய வயது, கிறிஸ்தவனாகி விட்டான். அவன் சொல்கிறான், "ஒரு நாள் நான் ரொம்ப மனக்கஷ்டத்தில் இருந்தேன், அப்போது ஜீசஸ் நேரிலேயே வந்தார், என்னை மார்போடு அனைத்துக் கொண்டார், என் கண்ணீரை துடைத்து விட்டு தலையை கோதி விட்டார், ஆறுதல் சொன்னார்!" இதை சொன்னது யார் தெரியுமா? பொறியியல் படித்து இன்று வெளிநாட்டில் பணிபுரியும் ஒருத்தன்! எங்கே போய் முட்டிக் கொள்வது? ஐயா இதெல்லாம் மிஞ்சிப் போனால் Hallucination என்று வேண்டுமானால் சொல்லலாம், வேறொன்றுமில்லை. இயற்கைச் சீரழிவு, விபத்து, நோய், எதிர் பாராத மரணம் என்பது எல்லா நாடுகளிலும் நடப்பது, அதில் கடவுளை இழுத்துப் போட்டு குழப்ப வேண்டுமா? வேண்டுமென்றால் உண்மையான கிறிஸ்தவர்கள் ஒரு லட்சம் பேரைச் சொல்லுங்கள், அவர்களை ஒரு வருடம் கண்காணிப்போம், அவர்களுக்கு எந்த நோயும் வரக்கூடாது, எந்த விபத்தாலோ, நோயாலோ மடியக் கூடாது, [அப்படி மடிவதென்றால் முன் கூட்டியே சொல்லிவிடவேண்டும்], சுனாமி போன்ற சீரழிவுகளாலும் பாதிப்படையக் கூடாது. அப்படி இருந்து விட்டால் நீங்கள் கடவுளிடம்தான் பேசுகிறீர்கள் என்று ஒப்புக் கொள்ளலாம்.

Jayadev Das said...

//“தனக்காக இன்னொருவன் பிராத்தித்தால் கடவுள் கேட்டுவிடுவாரா ?”//Without the sanction of God, not a blade of grass can move. அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்று நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ நான் நம்புகிறேன். ஒருத்தன் கஷ்டப் படுறான் என்றால் அந்த கஷ்டத்தைக் கொடுக்கும் காரணிகளையும் இறைவன்தானே உண்டாக்கியிருக்கிறான்? அந்த காரணிகளை உருவாக்கும் போதே தெரியாதா, அது அவனுக்கு துன்பத்தைத் தரப் போகுமென்று? அப்படியிருந்தும் இறைவன் ஏன் தடுக்கவில்லை? அவன் துன்பத்தை அனுபவிக்க வேண்டியவன், தண்டனை பெறத் தக்கவன் என்பதால் தானே? அப்படிஎன்றால், அவன் செய்யும் தவறு என்ன, இறைவனின் விருப்பத்திற்கு எதிராக என்ன செய்கிறான் என்று கண்டு பிடித்து அதை செய்யாதே என்று அறிவுறுத்துவது சரியா, இல்லை அதை விடுத்து ஆண்டவனுக்கே புத்திமதி சொல்வது போல, இந்த பாவியை கஷ்டப் படுத்த வேண்டாமென்று ஜபம் செய்வீர்களா? அப்படியே கேட்பதென்றால் கஷ்டப் படுபவனே நேரிடையாக இறைவனிடம் கேட்கலாமே, நடுவில் இடைத் தரகர் எதற்கு? எல்லோரையும் படைத்தவன் எல்லோருக்கும் தந்தை இறைவன் என்றால், இறைவனிடம் தன்னுடைய தந்தையிடம் பிரார்த்திக்க மூன்றாம் ஆள் எதற்கு? கஷ்டப்படுபவனுக்கு வாயில்லையா? வாயே இல்லையென்றாலும், மனதளவில் நினைத்து பிரார்த்தித்தாலும் இறைவன் இசைவானே? அப்புறம் என்ன? உங்கள் நோக்கமெல்லாம் பணம் வசூல் செய்வது. நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொண்டிரு, எங்களுக்கு கப்பம் கட்டு, உன் அயோக்கியத் தனங்களுக்கு ஒன்றுமே செய்ய வேண்டாமென நாங்கள் ஜபம் செய்வோம். இதைதான் சரி என்கிறீர்களா?

Jayadev Das said...

ஒன்று மட்டும் சொல்கிறேன், துன்பத்தை அனுபவிக்காத மனிதனோ, மற்ற எந்த ஜீவராசியோ இந்த உலகில் இல்லை. எல்லோரும் ஏதாவதொரு வகையில் துன்பப் பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம், வேறெதுவுமே இல்லையென்றாலும் குறைந்த பட்சம் நோய், மூப்பு, மரணம் இவை இல்லாதவர்கள் யாருமில்லை. இதற்கும் மேல் நமது மனதாலும் உடலாலும் உண்டாகும் துன்பம்[Eg.மனக்கஷ்டம், நோய்வாய்ப் படுதல்] , மற்ற உயிரினங்களாலும் [Eg.கொசு கடிப்பது, நாய், பாம்பு கடிப்பது, பக்கத்து வீட்டுக்காரன் ஆபிஸ் மேனேஜர் தொல்லை etc.,], இயற்கைச் சீரழிவுகளாலும் [Eg:சுனாமி, புயல், மழை etc.,] வரும் துன்பம் இவை அத்தனையுமே எல்லோருக்குமே இருக்கும், யாராலும் தடுக்க முடியாது. இது சகஜம் என்பதை விடுத்து, உனக்கு நான் பிரார்த்தனை செய்கிறேன், இதை நீக்கப் போகிறேன் என்பதெல்லாம் காசு பண்ணும் வேலை. யாராலும் துன்பத்தை தடுத்து நிறுத்த முடியாது. அது இறைவன் நாம் திருந்துவதர்க்காக கொடுப்பது, மருத்துவர் கசப்பான மருந்தைக் கொடுப்பது போல. அது நமது நன்மைக்கே. இத்தனை கஷ்ட்டதிலும் இறைவன் நம்மிடம் இருந்து எதிர் பார்ப்பது என்ன என்று அறிந்து அதன் படி வாழ்க்கையை நடத்திச் செல்பவனே உண்மையான இறை நம்பிக்கை உள்ளவன், மற்றவர்கள் வியாபாரிகள்.

டிலீப் said...

நண்பரே நீங்கள் குறிப்பிட்டதை நான் வாசிக்கும் போது ஒன்றை மட்டும் புரிந்து கொண்டேன் நீங்கள் கிறிஸ்த்தவதுக்கு எதிரான் நபர் என்பதை.
Thou shalt NOT kill என்று முதல் Commandmentநீங்கள் ஏன் பலர் சொல்வதை கேட்கிறீர்கள்.
பைபிள் கொலை செய்யாய் இருப்பாயாக என்று கூறுவது மனிதனையே.
மிருகத்தை அல்ல.யாரும் மிருகத்தை கொன்று நான் மிருகத்தை கொலை செய்து விட்டேன் என சொல்ல மாட்டார்கள்.

நீங்கள் எவ்வாறு சொல்லுகிறீர்கள் தற்போது இருக்கும் பைபிள் உம்மையான வடிவம் இல்லை என்று தங்களிடம் ஆதரம் இருக்கிறதா?

மாமிசம் சாப்பிடல் ஆகாது என பைபிளில் குறிப்பிடப்படவில்லை...
மிருகத்தின் இரத்தத்தை தான் உன்னா இருப்பாய் என்று கூறப்பட்டுள்ளது.
உங்கள் ஆசிரியரும் இப்படி பட்ட பதிவை எழுதிய நபரை போன்ற கிறிஸ்தவராக இருப்பார் போல...

இயேசு மார்ப்பில் அனைத்து கொள்வார்தான் மாமிசரிதீயில் அல்ல ஆவியின் மூலம்.
நண்பரே நீங்கள் சொல்வதை பார்த்தால் கிறிஸ்தவர்களுக்கு நோய் துன்பம் சாவு வராது என்று சொல்லுகிறிர்களா? கிறிஸ்தவர்களும் மனிதர்கள் தான் தெய்வம் அல்ல.

THOPPITHOPPI said...

உங்களுடைய பதிவை இன்றுதான் படித்தேன் அதனால் உடனே பதில் அளிக்க முடியவில்லை.


//நண்பரே நீங்கள் கிறிஸ்தவனாக இருந்தால் இவ்வாறான கேள்விகளை கேட்டு இருக்க மாட்டீர்கள். ஏன் என்றால் கிறிஸ்தவனுக்கு தெரியும் கடவுள் மனிதர்களுடன் பேசுவார் என்பதை.பேசுவார் என்றால் முன்னால் தோன்றி இல்லை ஜெபம் செய்யும் போழுது…//

நீங்கள் கிறிஸ்த்தவர் தானே "பிதாவே இவர்களை மன்னியும்" இந்த வார்த்தைக்கு அர்த்தம் சொல்லுங்கள். பிதா என்பவர் யார்?

அப்படியென்றால் JESUS பிதா என்று சொல்பவரை வணங்காமல் ஏன் இயேசுவை கடவுளாக வணங்குகிறோம்?

உங்களுடன் கடவுள் பேசிய அனுபவம் உண்டா?

எனக்கு தெரிந்து தொலைக்காட்ச்சியில் பணம் கேட்பவர்கள் தான் கடவுள் பேசினார் என்று கேட்டிருக்கிறேன்.



//பேரழிவுகளை பற்றி கூறி இருக்குறார்கள்.பேரழிவை பற்றி நேரடியாக கூறமாட்டார்கள்.கன்னியாகுமாரியில் இலங்கையில் சுனாமி வர போகுறது என இடத்தை சரியாக எந்த தீர்க்கதரிசியும் சொல்ல மாட்டார்கள் மறைபொருளாகவே தீர்க்கதரிசனத் உரைப்பார்கள்.(தீhக்கதரிசி என்றால் யார் என்று உங்களுக்கு தெரியுமோ என எனக்கு தெரியாது.)//

இடத்தை சரியாக சொல்ல தெரியாதவர்கள் மெரினா கடற்கரையில் பல ஆயிரம் பேர் இருக்க கூடிய ஒரு இடத்தில் ஒருவருடைய பெயரை மட்டும் எப்படி சொல்லி அழைக்க முடியும்?

//அடுத்தது தாங்கள் குறிப்பிட்டு இருந்தீர்கள் “தனக்காக இன்னொருவன் பிராத்தித்தால் கடவுள் கேட்டுவிடுவாரா ?”
( இதை வாசித்ததும் எனக்கு சிரிப்புதான் வந்தது ) கிறிஸ்தவத்தில் மற்றும் அல்ல வேற்று மதங்களிலும் மற்றவர்களின் துன்பத்துக்காக
வேண்டிக்கொண்டால் நிச்சமாக கடவுள் கேட்பார்.நீங்கள் கிறிஸ்தவர் என சொன்னீர்கள் பைபிள் வாசித்தது
இல்லையா ?//

JESUS சிறுவயதில் காணாமல் போனாரே அவர் எங்கே போயிருந்தார், எதற்க்காக போனார் என்று உங்களால் சொல்லமுடியுமா? காரணத்தோடு?

இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள் நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன்

கடவுளை வழிபடலாம், கண்மூடித்தனமாக கூடாது.

டிலீப் said...

நண்பரே பிதா சுதன் பரிசுத்த ஆவி...
பிதா என்பவர் சுதனுக்கு மேல் உள்ளவர் அதாவது தந்தை .சுதன் -இயேசுகிறிஸ்து
மனிதர்களின் பாவத்தை போக்கவே பிதா ஆனவர் தனது குமாரனான சுதனை (இயேசுவை) மனித தோற்றத்தில் இப்புவிக்கு அனுப்பினார்.
கிறிஸ்தவர்கள் பிதா சுதன் பரிசுத்த ஆவி இவ் மூவரும் சேர்ந்த ஒரு கடவுளை தான் வணங்குகின்றார்கள். இயேசுவை மட்டும் யாருமே வணங்கவில்லையே.

கடவுள் அப்பிடியே மனிதனை போல முன்னுக்கு வந்து பேசமாட்டார்.நாம் அமைதியாக உங்கள் பாஷையில் தியானத்தில் ஜெபம் பண்ணும் போதே பேசுவார்.
எனக்கு அனுபவம் உண்டு நண்பரே.

நீங்கள் சொன்னதன் பிறகே எனக்கு தெரியும் பெயரை சொல்லி அழைத்துள்ளார்கள் என.அவ்வாறு எந்த தீர்க்கதரிசியும் சரியான பெயரை குறிப்பிட்டு அழைக்கமாட்டார்கள்.எனது அனுபவத்தில் கூறுகிறேன்.வெகுவாக இவ்வாறு பிரச்சனையில் உள்ள நபர் இல்லாவிட்டால் ஒரு வாலிபன் அல்லது யுவதி என்றுதான் அழைப்பார்கள்.

நண்பரே நீங்கள் கிறிஸ்தவர் என்று கூறினீர்களே வாழ்வில் ஒரு தடவையாவது பைபில் வாசித்ததுண்டா ??
லுக்கா 3-ம் அதிகாரம் 43-ம் வசனம் தொடக்கம் வாசித்த பாருங்கள் எங்கே போனார் என காரணத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

நான் உங்கள் பதிவில் காணப்படும் பிழைகளை சுட்டிகாட்டி கேள்விகளை கேட்டால் எனக்கே மீள் கேள்வியா ??

THOPPITHOPPI said...

நான் JESUS CALLS பற்றிதான் பதிவு எழுதி இருந்தேன் நீங்கள் அதில் குற்றம் கண்டுபிடித்து பதிவு எழுதி விட்டீர்கள். உங்களுக்கு பதில் சொல்லவே இந்த பின்னூட்டம். எனது கேள்விகள் கடவுளுக்கு எதிரானது என்று எடுத்துக்கொள்ள வேண்டாம்.

//மனிதர்களின் பாவத்தை போக்கவே பிதா ஆனவர் தனது குமாரனான சுதனை (இயேசுவை) மனித தோற்றத்தில் இப்புவிக்கு அனுப்பினார்.//

அப்படி என்றால் பூமிக்கு சுதன் வந்த பின்பு பாவம் போக்கப்பட்டு விட்டதா? பாவமே இப்போது பூமியில் இல்லையா? சுதன் பூமிக்கு வந்ததால் என்ன பயன்? நான் தான் கடவுள்(சுதன்) என்று காட்டிக்கொள்ள வந்தாரா?

//நண்பரே நீங்கள் கிறிஸ்தவர் என்று கூறினீர்களே வாழ்வில் ஒரு தடவையாவது பைபில் வாசித்ததுண்டா ??
லுக்கா 3-ம் அதிகாரம் 43-ம் வசனம் தொடக்கம் வாசித்த பாருங்கள் எங்கே போனார் என காரணத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது..//

நீங்கள் எப்போதும் பைபிள் வாசிப்பவர் போல?

லுக்கா 3 ஆம் அதிகாரத்தில் 38 வசனம் மேல் உள்ளது என்று நீங்கள் சொல்லிதான் எனக்கு தெரியும்(நீங்கள் படிப்பது பைபிள் தானா?,
வாழ்வில் ஒரு தடவையாவது பைபில் வாசித்ததுண்டா ??)

நான் இதுபோன்று பல கிறிஸ்த்துவர்களிடம் கேள்வி கேட்டுள்ளேன். ஆனால் அவர்கள் சொல்லும் பதில் பைபிள் படித்து தெரிந்து கொள்ளுங்கள் என்பதுதான், பதில் தெரியாததாலா?


எனது கேள்விகள் கடவுளுக்கு எதிரானது என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்களுக்கு புரியவைக்கவே.

கடவுளை வழிபடலாம், கண்மூடித்தனமாக கூடாது.

THOPPITHOPPI said...

//உம்மையாக நீங்கள் கிறிஸ்தவரா?

ஓர் மதத்தை பற்றி எழுத முன்பு அவ்மதத்தை பற்றி நன்கு அறிந்துவிட்டு எழுதுங்கள்.
இவ்வாறாக கொஞ்சத்தை தெரிந்துவைத்த கொண்டு தாங்கள் அறிவாளிகலென சிலர் பதிவுலகில் உலாவுதை நான் அவதானித்துள்ளேன். //

இந்த வரிகள் தேவையற்றது, இன்னும் சொல்லவேண்டும் என்றால் என்னை கோபமூட்ட நீங்கள் பயன்படுத்திய வார்த்தை என்றே சொல்லலாம்.




//தாங்கள் அறிவாளிகலென சிலர் பதிவுலகில் உலாவுதை நான் அவதானித்துள்ளேன்//

இதுபோன்ற வார்த்தை ஒருவரை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் சொல்லக்கூடாது.

இந்த வார்த்தையை பயன்படுத்தும் நீங்கள் ஒரு கிறிஸ்த்துவரா?

உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன். உங்கள் பதிலை பொறுத்து எனது கோபத்தை காட்டுகிறேன்.

சும்மா.. டைம் பாஸ் said...

Hi THOPPITHOPPII I think he wanted to say லுக்கா 4-ம் அதிகாரம் 43-ம் வசனம்
"அவரோ அவர்களிடம், "நான் மற்ற ஊர்களிலும் இறையாட்சியைப் பற்றி நற்செய்தி அறிவிக்க வேண்டும்; இதற்காகவே நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்" என்று சொன்னார"
If this is what he is really referring this guy is another confusing person since Jesus said this words much later in his life, he is trying to tie a knot between head and tail. Dillep it is best you should say that you do not know about these things rather to pretend that you are authorized translator of St. Luke (that is what many hypocrites are doing), what he mention in this verse is not what you say. Not even "REAL" scholars in Christianity could give proper answer to this. So there are no straight forward answers to many things in Bible. Let's give this job to christian researcher who have facilities and access to old scriptures and places. Do not play with the bible words. Here we Talk about amalgamation of wealth by some people in the name of religion do not divert from this topic, both your replies leads to questioning Christianity. THOPPITHOPPII I also feel about commercialization of religion by Jesus Calls that too I am seeing this more after the death of MR. Dinakaran, but one positive thing what I see about them is intervening to the people at the right time. I have seen many people who were at the edge of their life, about to end their life have changed their mind because of them. They give hope in the name of lord at the right time this they can not get it even from any paid counseling. It is such a powerful socio-religious therapy, after the saving or rescue from the death or from any deep suffering or any problem people became addicted to them. I feel at this stage they try to capitalize their service. But as I said like this free right time intervention or therapy is much needed for many people to keep on burning the hope in life. But this service needs to be genuine and non-profit motive that's what lacking now.

Robin said...

தொப்பி தொப்பி ஒரு கிறிஸ்தவர்தான் என்று நானும் தவறாக் எண்ணிவிட்டேன். ஆனால் அவர் எழுப்பும் கேள்விகளைப் பார்த்தால் கிறிஸ்தவராகத் தெரியவில்லை. கிறிஸ்தவர் என்ற போர்வையில் குட்டையை குழப்ப வந்தவர்போலத் தெரிகிறது.

//JESUS CALLS பற்றி கருத்து கூறவிரும்பவில்லை ஏன்னென்றால் அதைபற்றிய ஆதரங்கள் என்னிடமில்லை.சில வேளை நீங்கள் குறிப்பிட்டது போலவே இருக்கலாம்.// இப்படி பேசுவது சரியல்ல. தினகரன் எப்படிப்பட்டவர், அவர் எப்படி கிறிஸ்தவர்களை ஏமாற்றி பணம் சேர்த்தார் என்பதை மற்ற மதத்தினரே அறிவார்கள். ஆனால் நீங்கள் இதை தெரியவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. கிறிஸ்தவர்கள் இந்தக் கும்பல்களைப் பற்றி எழுதினால் மற்றவர்கள் குள்ள நரிபோல உள்ளே நுழைந்து பேசமாட்டார்கள். நம் வீட்டில் இருக்கும் அழுக்கை நாம் தான் சுத்தப்படுத்தவேண்டும். உதாசீனப்படுத்தினால் அடுத்தவர்கள் அதைப் பற்றி பேச ஆரம்பிப்பார்கள்.

டிலீப் said...

THOPPITHOPPI @

நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் முதலில் பதில் அளியுங்கள்.
என்னை கேள்வி கேட்கமால்.

நான் பொதுவாகவே சொன்னேன். கிறிஸ்தவ மதத்தின் அடிப்படை விசயங்களை அறியமால் அவ் மதத்தை பற்றி அவதூராக பேசாதீர்கள்.

இதற்கு மேல் நான் கருத்துரைக்க விரும்பவில்லை நண்பரே.
நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளியுங்கள்.
வீண் கருத்து மோதல்தான் உருவாகும்.

THOPPITHOPPI said...

நீங்கள் கேட்ட கேள்விக்கு தான் பதில் அளிக்கிறேன். உங்களிடம் யாரோ பெசியாதக சொன்னிர்களே அது யார் என்று தெரிந்து கொள்ளதான் இந்த கேள்வி. உங்கள் பதிலில் தான் எனது பதிலும் இருக்கு.


//நண்பரே நீங்கள் கிறிஸ்தவனாக இருந்தால் இவ்வாறான கேள்விகளை கேட்டு இருக்க மாட்டீர்கள்.
ஏன் என்றால் கிறிஸ்தவனுக்கு தெரியும் கடவுள் மனிதர்களுடன் பேசுவார் என்பதை.பேசுவார் என்றால் முன்னால் தோன்றி இல்லை ஜெபம் செய்யும் போழுது…//

//அடுத்தது தாங்கள் குறிப்பிட்டு இருந்தீர்கள் “தனக்காக இன்னொருவன் பிராத்தித்தால் கடவுள் கேட்டுவிடுவாரா ?”
( இதை வாசித்ததும் எனக்கு சிரிப்புதான் வந்தது ) கிறிஸ்தவத்தில் மற்றும் அல்ல வேற்று மதங்களிலும் மற்றவர்களின் துன்பத்துக்காக
வேண்டிக்கொண்டால் நிச்சமாக கடவுள் கேட்பார்.நீங்கள் கிறிஸ்தவர் என சொன்னீர்கள் பைபிள் வாசித்தது
இல்லையா ?//

இதெல்லாம் என்னை பார்த்து கேட்க்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கு?
நான் கேட்ட கேள்விக்கே பதில் சொல்ல தெரியல, பிறகு எதுக்கு எனக்கு எதிர்ப்பதிவு போடவேண்டும். " தாங்கள் அறிவாளிகலென சிலர் பதிவுலகில் உலாவுதை நான் அவதானித்துள்ளேன். " ஏன் இது போன்ற வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்த வேண்டும்?.

சரி நீங்கள் அறிவாளிதானே என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.



@ Robin

நீங்கள் சொல்லும் பொய் பித்தலாட்டத்தை எல்லாம் கேட்டுக்கொண்டு அமைதியாக இருக்கவேண்டும். மீறி கேள்வி கேட்டால் என்னையே கிறிஸ்த்துவனா என்று கேட்ப்பீர்களோ?

THOPPITHOPPI said...

//நான் பொதுவாகவே சொன்னேன். கிறிஸ்தவ மதத்தின் அடிப்படை விசயங்களை அறியமால் அவ் மதத்தை பற்றி அவதூராக பேசாதீர்கள்.//

எந்த அடிப்படை விஷயத்தை அறியாமல் நான் அவதூறாக பேசினேன்? அந்த அடிப்படையை சொல்லுங்கள்?


//இதற்கு மேல் நான் கருத்துரைக்க விரும்பவில்லை நண்பரே.
நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளியுங்கள்.
வீண் கருத்து மோதல்தான் உருவாகும்.//


நிச்சயம் இது கருத்து மோதல் இல்லை நீங்கள் என் நண்பர்தான். நீங்கள் எனக்கு எதிர்ப்பதிவு செய்துவிட்டீர்கள் அதில் என்னை பார்த்து பைபிள் படித்தது இல்லையா, உம்மையில் கிறிஸ்த்துவனா? போன்ற கேள்வியை எல்லாம் கேட்டு என்னை அவமதிக்கும் விதத்தில் அறிவாளியா என்பதுபோல் எல்லாம் கேள்வி கேட்டு விட்டீர்கள் பிறகு கருத்து மோதல் வந்துவிடுமோ என்று சொன்னால் என்ன அர்த்தம்.


அறிந்தோ அறியாமலோ எனது வலைத்தள பெயரை வைத்து எதிர்ப்பதிவு செய்துவிட்டீர்கள், பலர் படித்துவிட்டார்கள் அவர்களுக்கு நான் என் தரப்பு உண்மையை சொல்லிதானே ஆகவேண்டும்.

டிலீப் said...

நீங்கள் கிறிஸ்தவராக இருப்பதற்கு தகுதியில்லாத படியால் தான் உங்களுக்கு இந்த கேள்விகள்.

யார் என்று சொன்னால் நீங்கள் நம்பவா போறீர்கள்.


நீங்கள் கேட்டதற்கு நான் பதிலளித்து விட்டேன்.இதற்கு மேலும் உங்களுக்கு புரியாவிட்டால் நான் ஒன்றும் பண்ணமுடியாது.
கடைசியாக ஒன்றை மட்டும் கூறி செல்கிறேன். ஒரு மதத்தின் நம்பிக்கை மற்றும் அதன் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க முதலில் கற்றுக்கொள்ளுங்கள்.

பதிவு எழுதிகிறோம் என்பதற்காக பொய்களை எழுதாதிர்கள்.
ஒரு மதத்தை பற்றி அவதூரக எழுதுவதை நிறுத்திக்கொள்ளுகள்.

டிலீப் said...

நீங்கள் மதத்தை பற்றி தப்பாக எழுதிமைக்கே எனது எதிர்ப்பை தெரிவித்துள்ளேன்.
மற்றபடி உங்களின் கும்பல் கட்டுரைக்கு நான் எந்த கருத்தும் சொல்லவில்லையே

நன்றி

THOPPITHOPPI said...

இப்படி நழுவினால் எப்படி நீங்கள் ஒரு அறிவு ஜீவி என்று நினைத்தேன். எதிர்ப்பதிவு எழுதி என்னை அவமதிக்கும்விதத்தில் வார்த்தைகளை பயன்படுத்திவிட்டு வேண்டாம் என்றால்.

உங்களுக்கு நான் ஒரு எதிர்ப்பதிவு எழுதட்டுமா? "கிறிஸ்த்துவத்தை பற்றி அறியாமல் எனக்கு எதிர்ப்பதிவு எழுதின முட்டாள்" என்று தலைப்பு வைத்து?

Jayadev Das said...

இரண்டு சாதாரண கேள்விகளாலேயே மடக்கி விட்டீர்கள், சூப்பர்! ஆள் விட்டா போதும்டாங்கிற நிலைமைக்கு பம்மிட்டாறு, நமக்கு இந்த மாதிரி நுணுக்கமெல்லாம் வரதுங்கன்னோவ்!!

டிலீப் said...

நான் எங்கேயும் நலுவவில்லை ....
நான் கேட்ட கேள்விகளுக்கே இன்னும் பதில் அளிக்க வில்லை நீங்கள் இதற்கு நான் ஒரு எதிர் பதிவு எழுதவா ??
"கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாத முட்டாள்"

நான் கேட்ட கேள்விகளுக்கு முதலில் பதில் அளியுங்கள்.
நீங்கள் நலுவாமல்;;

நான் சொன்னது சரியாக தான் உள்ளது.
கொஞ்சத்தை தெரிந்துவைத்த கொண்டு தாங்கள் அறிவாளிகலென சிலர் பதிவுலகில் உலாவுதல்..
நீங்கள் கிறிஸ்தவர் என்ற போர்வையில் திரியும் ....... நீங்களே இடைவெளியை நிரப்பிகொள்ளுங்கள்.

//Jayadev Das said...
இரண்டு சாதாரண கேள்விகளாலேயே மடக்கி விட்டீர்கள், சூப்பர்! ஆள் விட்டா போதும்டாங்கிற நிலைமைக்கு பம்மிட்டாறு, நமக்கு இந்த மாதிரி நுணுக்கமெல்லாம் வரதுங்கன்னோவ்!//

பம்முவதற்கு நான் ஒன்றும் அவரை போல் கோழை அல்ல...கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் எனக்கே மொக்கு தனமான கேள்விகளை கேட்கும் நபரே பம்முறார்.

பம்முவதற்கு நான் ஒன்றும் அவரை போல் கோழை அல்ல...கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் எனக்கே மொக்கு தனமான கேள்விகளை கேட்கும் நபரே பம்முறார்

ஒன்றை பற்றி எழுத முதல் ஆறறிவு ஒன்று உள்ளது என்று நம்புகிறேன் அதை பாவியுங்கள்.

தயவு செய்து ஒரு மதத்தை பற்றி அவ்மதத்தின் நம்பிக்கை பற்றி கேவலமாக எழுதுவதை நிறுத்துங்கள்.

Robin said...

//நீங்கள் சொல்லும் பொய் பித்தலாட்டத்தை எல்லாம் கேட்டுக்கொண்டு அமைதியாக இருக்கவேண்டும். மீறி கேள்வி கேட்டால் என்னையே கிறிஸ்த்துவனா என்று கேட்ப்பீர்களோ?//

நல்லா தமாஷ் பண்ணுறீங்க டபுள் தொப்பி. கிறிஸ்தவர்னு பொய் சொன்னதே நீங்கள்தான், இதுல நான் பொய் பித்தலாட்டம் பண்ணுறதா குற்றச்சாட்டு வேற.

இந்த தொப்பி தொப்பி எழுதுறத பார்த்தா எதோ ஆர். எஸ்.எஸ். அம்பி மாதிரி இருக்குது.

Robin said...

//இரண்டு சாதாரண கேள்விகளாலேயே மடக்கி விட்டீர்கள், சூப்பர்! ஆள் விட்டா போதும்டாங்கிற நிலைமைக்கு பம்மிட்டாறு, நமக்கு இந்த மாதிரி நுணுக்கமெல்லாம் வரதுங்கன்னோவ்!// அலோ, என்ன கேள்வி கேட்டு கிழிச்சிட்டாரு. இதெல்லாம் எத்தனையோ பேரு கேட்டு பதில்களும் கொடுக்கப்பட்ட கேள்விகள்தான். எதோ தொப்பி பெரிய மேதாவி மாதிரியும், மற்றவங்களுக்கெல்லாம் ஒன்னும் தெரியாதது மாதிரியும் உதார் விடுகிறீர்களே.

Jayadev Das said...

//இதெல்லாம் எத்தனையோ பேரு கேட்டு பதில்களும் கொடுக்கப்பட்ட கேள்விகள்தான். //பருப்பு இருக்குதான்னு கேட்டா உப்பு இருக்குதுன்னு பதில் சொன்னானாம் எவனோ ஒரு மளிகைக் கடைக்காரன். ஏன்னா அவன்கிட்ட பருப்பு இல்லை. இந்த மாதிரி பதில்களை யார் வேண்டுமானாலும் அடித்து விடலாம். கேட்ட கேள்விக்கு பதில் இல்லை என்பது தான் உண்மை. இங்கே உண்மையான ஆன்மீகவாதிகளை யாரும் கேள்வி கேட்கவில்லை. Fraud எங்கே இருந்தாலும் ஒன்னுதான், அவன் Jesus Calls காரனாகவும் இருக்கலாம், நான்தான் அம்மா என்பவனாகவும் இருக்கலாம், கதவைத் திறக்கச் சொல்லி காற்றை வரவைத்தவனாகவும் இருக்கலாம். போலிகளை இனம் கானுவதுதான் இங்கே கேள்வியே தவிர மதத்தை விமர்சிப்பதல்ல. இது புரியாமல் கேட்காத கேள்விக்கு இல்லாத பதில் சொல்லிவிட்டு கிழித்துவிட்டேன் என்பது பிக்காலித் தனம்.

THOPPITHOPPI said...

திலிப் நிதானம் இல்லாமல் ஏனோதானோ என்று பதில் அளிக்கவேண்டாம் இங்கே பல பேர் நம் எழுத்துக்களை வாசித்துக்கொண்டு இருக்கிறார்கள். கேட்கவேண்டிய கேள்வியை கொஞ்சம் நிதானமாகவும் வார்த்தையில் நாகரீகத்தோடும் கேட்கவும்.
சொல்லுங்கள்
பதிவில் நீங்கள் என்னிடம் கேட்ட கேள்விகள் அதற்க்கு என்பதில்கள்:

//1 . நீங்கள் கிறிஸ்தவர் என சொன்னீர்கள் பைபிள் வாசித்தது
இல்லையா ?//

லூக்கா 3 ஆம் அதிகாரத்தில் 38 வசனங்களுக்கு மேல் வசனம் இல்லை என்பது கூட தெரியாமல் 43 ஆம் வசனத்தை படிக்க சொல்லி பதில் அளித்தவர் நீங்கள். அப்படி இருக்கும்போது எதை நான் பைபிளில் படிக்கவில்லை என்று கூறினீர்கள். நான் jesus calls கொள்ளைகளை பற்றி எழுதியதுக்கும் பைபிள் படிப்பதற்கும் என்ன சம்பந்தம்?


//2 . நீங்கள் கிறிஸ்தவனாக இருந்துமா மேலே நான் குறிப்பிட்ட விடயங்களை எழுதியுள்ளீர்கள் ?//

ஓர் மதத்தில் இருக்கும் தவறுகளை வேறு மதத்தில் இருப்பவன்தான் சொல்லவேண்டும் என்று இல்லை. சரி உங்கள் வாதப்படி நான் கிறிஸ்த்துவன் இல்லை என்றே வைத்துக்கொள்வோம் நீங்கள் கிறிஸ்த்துவர்தானே என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.


//3 . உம்மையாக நீங்கள் கிறிஸ்தவரா?//

ஏன் இந்த கேள்வி? உம்மையில் கிறிஸ்த்துவன், பொய்யில் கிறிஸ்த்துவன் என்று ஏதாவது உள்ளதா?

இந்து மதத்தை விட கிறிஸ்த்துவத்தில் பல மூட நம்பிக்கைகள் உள்ளன அவற்றை நான் பதிவாக எழுதினால் தமிழ்நாட்டில் கிறிஸ்த்துமதம் என்பதே போலி என்று என்னால் ஆதாரத்துடன் எழுத முடியும். நீங்கள் சொல்வது போல் நான் RSS இயக்கத்தை சேர்ந்தவனாக இருந்திருந்தால் அதை எப்போதோ செய்திருப்பேன்.

THOPPITHOPPI said...

நீங்கள் கிறிஸ்த்தவர் தானே இதற்க்கு பதில் சொல்லுங்கள்:

இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி
இயேசு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் // தமிழில்
-மத்தேயு 27 :46


இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி
இயேசு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் // தமிழில்
- மாற்கு 15 :34

தான் சிலுவையில் அறையப்படும்போது இயசு கூறிய வார்த்தைகள். ஏன் சிலுவையில் இந்த வார்த்தையை இயேசு கூறியதாக சொல்லப்பட்டு உள்ளது?



இந்த கேள்விக்கு எந்த ஒரு கிறிஸ்துவனாலும் மழுப்பல் இல்லாமல் பதில் சொல்ல முடியாது. முடிந்தால் நீ சரியான பதில் சொல் நான் எனது பதிவில் எழுதியது தவறு என்று இதே இடத்தில் மன்னிப்பு கேட்க்கிறேன்.

கானாவூர் கல்யாணம், தண்ணீர், திராட்ச்சைரசம், சிலுவையில் இயேசு தண்ணீர் கேட்டது. ரோமன் கேத்தலிக் என்றால் என்ன CSI என்றால் என்ன? இவர்கள் எப்படி கிறிஸ்த்துவத்தை தமிழ்நாட்டில் பரப்பினார்கள், இப்போது எப்படி இயங்குகிறார்கள், இவர்களுக்கு எங்கே இருந்து பணம் வருகிறது. இதெல்லாம் நான் எழுதுனா தாங்கமாட்டிங்க தம்பி. ABCD கத்துவச்சிக்கிட்டு இங்கிலீஷ் பேச நினைக்க வேண்டாம்.

THOPPITHOPPI said...

//4 . ஓர் மதத்தை பற்றி எழுத முன்பு அவ்மதத்தை பற்றி நன்கு அறிந்துவிட்டு எழுதுங்கள்.
இவ்வாறாக கொஞ்சத்தை தெரிந்துவைத்த கொண்டு தாங்கள் அறிவாளிகலென சிலர் பதிவுலகில் உலாவுதை நான் அவதானித்துள்ளேன். //


எதை அறியாமல் நான் எழுதிவிட்டேன்?

ஏதோ கேள்வி கேட்க்க வேண்டும் என்பதற்காக எழுதவேண்டாம், கிறிஸ்த்துவ மதத்தில் அடிப்படையே தவறுதான். உங்களை விட கண்மூடித்தனமாக கிறிஸ்த்துவத்தில் ஊறியவன், என்னிடமேவா? நீங்கள் கிறிஸ்த்துவத்தை மேலோட்டமாக பார்த்துவிட்டு தன்னை அறிவாளி என்பதுபோலும் மற்றவர்கள் எல்லாம் முட்டாள் என்பதுபோலும் நினைக்க வேண்டாம்.

இதையெல்லாம் நான் எழுதுவதால் நான் கடவுளுக்கு எதிரானவன் என்று அர்த்தம் இல்லை. இயேசு என்பவர் மனிதனாக பிறந்து கடவுளாக மரித்தவர். மனிதனாக பிறக்கும் ஒவ்வொருவனுக்குள்ளும் கடவுள் என்ற ஒன்று உள்ளது அதை வெளிக்கொண்டு வருபவனே இந்த பூமியில் கடவுள். புத்தரும் அப்படி வந்தவர்தான்.

என் வார்த்தையில் உங்களுக்கு சந்தேகம் என்றால் இயேசு சிறுவயதில் காணாமல் போனாரே எங்கே போனார், எதற்க்காக போனார் என்று உங்கள் கிறிஸ்த்துவ தலைவரிடம்/போதகரிடம் கேட்டுப்பாருங்கள். கண்டிப்பாக பதில் மழுப்பலாக வரும் இல்லை பே பே.

இதையெல்லாம் JESUS CALLS கொள்ளைக்கும்பல் பதிவில் என்னால் எழுத முடியாது என்று இல்லை சிலர் நம்புவதை, நம்பிக்கையை ஏன் கெடுக்கவேண்டும் என்று நினைத்துதான் தவிர்த்துவிட்டேன்.

THOPPITHOPPI said...

தியானம் என்ற ஒன்றை மறைத்து எவன் ஆன்மிக பிரச்சாரம் செய்கிறானோ அவன் போலி மதத்தை சேர்ந்தவன்தான்.அது எந்த மதமாக இருந்தாலும் சரி.

THOPPITHOPPI said...

இந்த புகைப்படத்தில் பல அர்த்தங்கள் உள்ளது உங்க அப்பா அம்மாகிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோங்க.

http://www.fractalspirit.com/FracJesus/JesusIn-Meditation-Lrg.jpg

Robin said...

//இது புரியாமல் கேட்காத கேள்விக்கு இல்லாத பதில் சொல்லிவிட்டு கிழித்துவிட்டேன் என்பது பிக்காலித் தனம்//

கேள்வி கேட்டு பதில் சொல்லவில்லை என்று சொன்னதே இவர்தான். இப்போ இவர் கேள்வியே கேட்கப்படலைன்கிறாரே, அது என்?

கிறிஸ்தவனாக இல்லாமலேயே நானும் கிறிஸ்தவன்தான் என்று பதிவிடுவது எவ்வளவு பெரிய கேப்மாரித்தனம். இந்த பிராடுகள்தான் மற்றவர்களைப் பற்றி பேசுகிறார்கள்.

THOPPITHOPPI said...

@ Robin

இவ்வளவு பதில் சொன்னபின்பும் என்னை பார்த்து நீங்கள் கிறிஸ்த்துவரா என்று கேட்க்கிறீர்கள் என்றால் உங்களுக்கு படிக்க தெரியாதோ?

சரி நீங்கள் கிறிஸ்த்துவர்தானே என் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள்.

டிலீப் said...

நாகரியத்தை பற்றி நீங்கள் பேசவேண்டாம்.நான் இதுவரை நாகரியமாகதான் பேசி வருகிறேன்.நான் தப்பாக கூறிவிட்டேன்.ஒத்துகொள்கிறேன்.2-ம் அதிகாரம் என்பதற்கு பதிலாக 3 என்று சொன்னமை.யாருதான் தவறுவிடுவதில்லை?அவ்வசனங்களை வாசித்து பாருங்கள்.

கடவுலே இல்லை என்று சொல்பவன் கூட கடவுள் இருக்குறார் என வாதிடலாம்
ஆனால் கடவுள் நம்பிக்கை இருந்தும் மற்ற மதங்களை பற்றி அவதூறாக பேசும் நபர்கள் கூட வாதிட முடியாது.ஏன்னென்றால் அவர்களுடன் கதைப்பது (வாதிடுவது) செத்த பிணத்துடன் கதைப்பதற்கு சமன்.

கீழே விழுந்த தொப்பியை எடுத்து தலையில் போட்டு விட்டு வேற வேலை இருந்தால் பாருங்கள்.

Unknown said...

nalla sonninga duleep
congrats.

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.