இனிமையான புதிய நாளின் விடியல்.கதிரவன் தனது அன்றாட கடமையை கிழக்கில் இருந்து தனது ஒளியை வீச தொடங்கினான்.இன்று நடக்க போகும் அழிவை அறியாமலே முதல் நாளின் கிறிஸ்மஸ் கொண்டாடத்தின் களைப்பில் ஆழ்ந்த உறக்கத்தில் மானிடன்.
இலங்கை நேரத்தின்படி காலை 9.05 மணிக்கு இலங்கையின் வடக்கே தொடங்கிய தனது கோரதாண்டவத்தை 3 நிமிடங்களுக்கு கிழக்கு தென்மேற்கு வரை பரப்பி சென்றது.
பெரும்பாலான அறிவியலாளர்கள் சொல்லுவார்கள் இலங்கை எந்த இயற்கை அனர்த்தங்களுக்கும் முககொடுக்க முடியாத வலயத்தில் அமைந்துள்ளதாக.அதற்கு முற்றுபுள்ளி வைக்கும்படியாக இதுவரை பரீச்சியமாகாத மக்கள் பார்த்திராத விசித்திரமான சம்பவம் கடலில் இடம்பெற்றது.அது கடல் நீர் கரையில் இருந்து உள்வாங்கி செல்வது.அதன் பிறகு இடம் பெற போகும் விபரீதத்தை அறியாமலே சிலர் அதை வேடிக்கை பார்க்க சென்றனர்.இறுதியில் 3 நிமிடங்களுக்கு 40 ஆயிரத்துக்கு மேலான உயிர்கள் இலங்கையில் காவு கொண்டது.2004 சுனாமியால் 300000 உயிர்கள் மாய்ந்தது.
இலங்கையின் களுத்துறையில் சுனாமிக்கு முன் கடற்கரை
சுனாமிக்கு பின் கடற்கரை
இனிமையான புதிய நாளின் விடியல்.கதிரவன் தனது அன்றாட கடமையை கிழக்கில் இருந்து தனது ஒளியை வீச தொடங்கினான்.இன்று நடக்க போகும் அழிவை அறியாமலே முதல் நாளின் கிறிஸ்மஸ் கொண்டாடத்தின் களைப்பில் ஆழ்ந்த உறக்கத்தில் மானிடன்.
இலங்கை நேரத்தின்படி காலை 9.05 மணிக்கு இலங்கையின் வடக்கே தொடங்கிய தனது கொரதாண்டவத்தை 3 நிமிடங்களுக்கு கிழக்கு தென்மேற்கு வரை பரப்பி சென்றது.
பெரும்பாலான அறிவியலாளர்கள் சொல்லுவார்கள் இலங்கை எந்த இயற்கை அனர்த்தங்களுக்கும் முககொடுக்க முடியாத வலயத்தில் அமைந்துள்ளதாக.அதற்கு முற்றுபுள்ளி வைக்கும்படியாக இதுவரை பரீச்சியமாகாத மக்கள் பார்த்திராத விசித்திரமான சம்பவம் கடலில் இடம்பெற்றது.அது கடல் நீர் கரையில் இருந்து உள்வாங்கி செல்வது.அதன் பிறகு இடம் பெற போகும் விபரீதத்தை அறியாமலே சிலர் அதை வேடிக்கை பார்க்க சென்றனர்.இறுதியில் 3 நிமிடங்களுக்கு 40 ஆயிரத்துக்கு மேலான உயிர்கள் இலங்கையில் காவு கொண்டது.
2004.12.26 உலக நாடுகளை கதிகலங்க வைத்த ஏமன் என்ற பிண தின்னி சுனாமி போல் வந்து பல உயிர்களை காவு கொண்டு நாளையுடன் ஆறு ஆண்டுகள்.
சுனாமி என்றால் என்ன ?
சுனாமி அல்லது கடற்கோள்அல்லது ஆழிப்பேரலை (யப்பானிய மொழி: ட்சு னமி "துறைமுக அலை") என்பது கடல் அல்லது குளம் போன்ற பாரிய நீர்ப்பரப்புகளில் சடுதியாக பெருமளவு நீர் இடம்பெயர்க்கப்படும் போது ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைக் தொடர்களைக் குறிக்கும். நிலநடுக்கம் (பூமி அதிர்ச்சி), மண்சரிவுகள், எரிமலை வெடிப்பு, விண்பொருட்களின் மோதுகை போன்றவை சுனாமி அலைகளை ஏற்படுத்தக் கூடிய மூலக் காரணிகளாகும்.
நிலநடுக்கம் ஏற்படுகிறது. அதாவது, பூகம்பம் என்பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகிறது. கடலில் வந்தால் கடலின் ஆழமான பகுதியிலுள்ள நிலத்தட்டுக்களின் அசைவு பெரிய அலைகளை உருவாக்குகின்றது.மலையில் எரிமலையாக உருவெடுகிறது.
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நிலத்தட்டுத்தான் இருந்தது. அதன் மீது தான் பூமி இருந்தது. ஆனால் கண்டங்களாக பிரிய, பிரிய, அதன் தட்ப, வெப்ப, இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு நிலத்தட்டுக்கள் உருவாகின. இந்தத் தட்டுக்களின்மீதுதான் ஒவ்வொரு கண்டமும் இருக்கின்றன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த நிலத்தட்டுக்கள் தான். இதைத் தான் ‘டெக்டானிக் பிளேட்கள்’ என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
2004 ஆம் ஆண்டில், டிசம்பர் 26 ஆம் நாளன்று, யுரேஷியன் நிலத்தட்டின் ஒரு பகுதியாகக் கருதப்படும் பர்மா நிலத்தட்டும், இந்தோ-ஆஸ்திரேலியன் நிலத்தட்டின் ஒரு பகுதியாகிய இந்திய நிலத்தட்டும், இந்தோனேசியாவின் வடக்கே சுமாத்திரா தீவில், கடலுக்கடியில் மோதியது. அதனால் ஏற்பட்ட 9.0 றிச்டர் அளவில் பூகம்பத்தால் தோன்றிய அலைகள் தான் இந்தியப் பெருங்கடலில் சுனாமியை ஏற்படுத்தியது. இதுவே 2004 ஆம் ஆண்டின் மிகப்பெரிய இயற்கை அழிவாகக் கருதப்பட்டது.
சுனாமி இடம் பெறும் முறை
1. கடலாழத்தில் ஏற்படும் எந்த பாதிப்பின் போதும் வரும்.
2. கடலாழ பூகம்பத்தினால் வரும்.
3. கடலை ஒட்டிய நிலப்பகுதியில் ஏற்படும் பூகம்பத்தால் வரும்.
4. மலையில் எரிமலை உண்டாகி, அதனால் வரும்.
5. வானில் கிரகங்களின் செயல்பாடுகள் மாறும் போதும் ஏற்பட வாய்ப்புண்டு (இது இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை)
6. கடலில் இயற்பியல் மாற்றங்கள் ஏற்பட்டாலும் வரும்
சுனாமியின் போது இலங்கையில் நடந்த சில சம்பவங்கள்
*சுமத்திரா தீவில் பூகம்பம் ஏற்ப்பட்டதும் பசுப்பிக் பிராந்தியத்தில் உள்ள சுனாமி அவாதனிப்பு மைய நிபுணர் ஒருவர் இலங்கையில் உள்ள ஓர் உயர் அதிகாரிக்கு இவ்வாறான ஒரு செய்தியை தொலைபேசியில் கூறினார்.சுனாமி வரப்போகுது ஆயத்தமாக இருங்கள் என்று ,அந்த உயர் அதிகாரி என்ன பண்ணினார் தனது உதவியாளருக்கு நீ விமானநிலையம் போய் சுனாமி என்ற பெயருடைய ஒரு நபர் வருவார் அவரை அழைத்து வா என்று.
*சுனாமியின் போது கொள்ளைகாரர் திருடர்களுக்கு நல்ல வருமானம்.ஒரு கல் நெஞ்சகாரன் உயிருக்கு போரடிக்கொண்டு இருந்த யுவதியை காப்பாற்றும் படியாக சென்று யுவதியின் கழுத்தில் இருந்த தங்கசங்கிலியை அபகரித்து மீண்டும் கடலுக்குள் போட்டு விட்டு சென்று விட்டான் அவ் யுவதியை ஆனால் அதை அழகாக படமெடுத்து ஒருவர் நீதிமன்றத்துக்கு அவ் படங்களை வழங்கி அவனுக்கு தண்டனை வாங்கி கொடுத்தார்.
காலி மத்திய பஸ் நிலையத்தில் .....
காலி மத்திய பஸ் நிலையத்தில் .....
இவ் பாரிய அனர்த்தத்தால் உயிரிழந்த அனைத்து ஆத்துமாக்களும் சாந்தியடைய பிராத்திக்கின்றேன்.
7 comments:
நல்லதொரு விளக்கமான நினைவுப் பதிவுக்கு மிக்க நன்றி நண்பா
//மகாதேவன்-V.K said...
நல்லதொரு விளக்கமான நினைவுப் பதிவுக்கு மிக்க நன்றி நண்பா//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பா
யாராலும் மறக்க முடிய தினம் :(
மீட்டலுக்கு நன்றி டிலீப்
//Harini Nathan said...
யாராலும் மறக்க முடிய தினம் :(
மீட்டலுக்கு நன்றி டிலீப்//
ஆம் ஹரிணி இது ஓரு வடு போலவே காலம் புறாகவும் எம்முடன் இருக்கும்
இதெல்லாம் நினைத்துப் பார்க்கவேண்டிய விஷயம் அல்ல மறக்கவேண்டிய விஷயங்கள்...
//philosophy prabhakaran said...
இதெல்லாம் நினைத்துப் பார்க்கவேண்டிய விஷயம் அல்ல மறக்கவேண்டிய விஷயங்கள்..//
மறக்கவேண்டிய விஷயம் தான் பிரபா.....ஆனாலும் இவ் அனர்த்ததால் உயரிழந்த உறவுகளை மறக்கமுடியாது அல்லவா...
யாராலும் மறக்க முடிய தினம் பதிவுக்கு மிக்க நன்றி நண்பா
Post a Comment