இந் வாரம் பதிவுலகை கலக்கி கொண்டு இருக்கும் பதிவுகள் 2010-ன் சிறந்தவைகள் பற்றியே.நானும் அது சம்பந்தமாகவே பதிவுகள் இட்டு வருகிறேன். இன்றைய பதிவுடன் 2010-ன் சிறந்தவைக்கு மூடு விழா நடத்திவிட்டு புதிய ஆண்டுக்கு செல்லபோகிறேன்.இன்று நான் 2010-ன் சிறந்த நடிகர் நடிகை இயக்குனர் இசையமைப்பாளர்களை வரிசைப்படுத்த போகிறேன்.
இந்தாண்டின் சிறந்த இசையமைப்பாளர்கள்.
யுவன் சங்கர் ராஜா- பையா ,தீராத விளையாட்டு பிள்ளை , கோவா ,பான காத்தாடி ,காதல் சொல்ல வந்தேன் ,நான் மகான் அல்ல, போஸ் (எ) பாஸ்கரன் , தில்லாலங்கடியில் 5 பாடல்.இதில் பையா படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்.
இந்தாண்டின் சிறந்த இசையமைப்பாளருக்கான முதல் இடத்தை ஒஸ்கார் தமிழன் ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றுக்கொள்கிறார்.ஒஸ்கார் விருதை பெற்றதன் பின்பு முதலாவதாக வெளியான விண்ணை தாண்டி வருவாயா திரைபட பாடல்கள் உலகம் பூராகவும் விற்பனையில் சாதனை படைத்தது.அதன் பிறகு மணிரத்தினத்தின் ராவணா பாடல்கள் இந்தாண்டின் இறுதியில் வெளியான எந்திரன் திரைப்பட பாடல்கள் வெளிநாட்டு சினிமா துறையையே கதிகலங்க வைத்து வெற்றி நடை போட்டது. A.R.என்ற சும்மாவா ??
இந்தாண்டின் சிறந்த இயக்குனர்கள்
A.L.விஜய் - மதுராசபட்டணம் என்ற சரித்திர படத்தை ஆர்யா வைத்து இயக்கி பெரும் வரவேற்பை பெற்றுவர்.
கௌதம் மேனன்-மென்மையான மிகவும் வித்தியாசமான காதல் திரைபடமான விண்ணை தாண்டி வருவாயா படத்தை இயக்கினார்.
முதல் இடம் யாவரும் அறிந்ததே Science fiction கதையை தழுவலாக கொண்டு மிக பிரம்மாண்டமாக சூப்பர் ஸ்ட்டாரை வைத்து எந்திரன் என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கிய S.சங்கர்.
சிறந்த நடிகைகள்
தம்மன்னா – சுறா , தில்லாலங்கடி, பையா ஆகிய படங்களில் இவ்வருடம் நடித்துள்ளார்.இதில் பையா பெரும் வெற்றியை பெற்றது
.
அமலா பால் - சிந்து சமவெளி , மைனா போன்ற படங்களில் நடித்து தனது நடிப்பு திறமை வெளிக்காட்டிய புது வரவு.
ஜஸ்வராய் - ராவணன் எந்திரன் திரைபடங்களில் நடித்துள்ளார்.இவ்விரு படங்களும் வசூலில் சாதனை படைத்தது.
சிறந்த நடிகர்கள்
சூர்யா- ஹரியின் சிங்கத்திலும் ராம் கோபால் வர்மாவின் ரத்த சரித்திரத்திலும் இவ்வருடம் நடித்துள்ளார்.சிங்கம் பெரும் வெற்றியையும் ரத்த சரித்திரம் தற்போழுது வசூலில் சென்று கொண்டு இருக்கிறது.
ஆர்யா-இந்தாண்டு ராசியான வருடமாக ஆர்யாவுக்கு அமைந்தது.மதுராசபட்டணம் சரித்திர படத்திலும் போஸ் (எ) பாஸ்கரன் காமெடி படத்திலும் நடித்தார்.இரண்டுமே சூப்பர் ஹிட்டானது.இந்தாண்டின் இறுதியில் வெளியான சிக்கு புக்கு வந்த வேகத்தில் பெட்டிக்குள் சென்றது.
ரஜினி-இந்தாண்டின் இறுதியில் வெளியாகி பட்டிதொட்டி எல்லாம் கலக்கிய திரைபடம் எந்திரன்.ஆண்டுக்கு ஒரு படம்.அந்த படம் மெகா ஹிட்.அதுதான் சூப்பர் ஸ்ட்டார் ரஜினி என்பதை நிரூபித்துள்ளார்.நான் லேட்டா வந்தாலும் லெட்டஸா வருவன் என்று ஒரு பஞ்ச் டயலொக் சொல்லுவார்.அது இதுதான்.
டிஸ்கி:சிறந்த மொக்கை படங்கள்-சுறா, அசல்
7 comments:
நல்லா இருக்கு, உங்க தர வரிசைகள்!
புதுவருட வாழ்த்துக்கள்.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
நல்லா இருக்கு, உங்க தர வரிசைகள்//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி பன்னிக்குட்டி
//Jana said...
புதுவருட வாழ்த்துக்கள்//
எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அண்ணா
//சண்முககுமார் said...
வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
இதையும் படிச்சி பாருங்க//
எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஜயா
அருமை நண்பரே
புதுவருட நல்வாழ்த்துக்கள்
நன்றி நண்பரே
எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தர்ஷன்
Post a Comment