இந்தியாவுக்கென்று பழங்கால சரித்திரமோ பண்டைய வரலாறோ கிடையாது.கி.மு.1000-ல் தான் ஆரியர்களின் பிரவேசத்துக்கு பிறகு இந்தியாவில் நாகரிகம் என்று ஒன்று தோற்றம் பெற்றது.அதற்கு பிறகே நகரங்கள் தோன்றின.முதல் ஊர் அசோகரின் தலைநகராக விளங்கிய பாட்னா என்று அழைக்கப்படும் பாடலிபுத்திரம் இப்படித்தான் உலகெங்கும் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் வரலாற்று மேதைகளும் நீண்ட காலமாக நம்பிக்கொண்டிருந்தார்கள்.
1921-ல் ஆராய்ச்சியாளர்களை வியக்க வைத்த அச்சம்பவம் நிகழ்ந்தது.இந்திய ஆர்க்கியாலஜிகல் சர்வேயில் பணிபுரிந்து வந்த தாஸ் பானர்ஜி சிந்துநதி சமவெளியில் கி.பி.200-ம் ஆண்டைச் சேர்ந்த ஒரு பௌத்த மத ஸ்தூபியை ஆராய்ந்து கொண்டிருந்தார்.அருகே எதேச்சையாக தோண்டியதில் மண்ணுக்கடியிலிருந்து சில படிகள் எட்டி பார்த்தன.அனுபவம் மிக்க பானர்ஜியிக் நாடித் துடிப்புகள் அதிகமானது.மேலும் ஆர்வத்துடன் தோண்ட அவர் முன்னே விரிந்தகாட்சி பிறகு உலகத்தையே தட்டி எழுப்பியது.
பாபிலோனியா எகிப்துக்கு இணையாக இந்தியாவும் பண்டைய நாகரிகம் கொடிகட்டி பறந்த நாடு என்கிற தகவல் பரவிய உடனே உலகின் பல பகுதிகளிலிருந்து தொல்பொருள் ஆராச்சியாளர்கள் பரப்பரபோடு இந்தியாவின் வடமேற்கு பகுதிக்கு வந்து குவிந்தார்கள்.
பானாஜி அங்கு வருவதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே சிந்து சமவெளியில் சந்தேகத்தை எழுப்பக்கூடிய சில மேடுகளும் இடிபாடுகளும் இருப்பது பற்றி ஆங்கிலேய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குறிப்புகள் எழுதியதுண்டு. 1826-ல் அங்கு வந்த சார்லஜ் மேஸன் என்னும் இராணுவ அதிகாரி இந்த பகுதியில் பூமிக்கடியில் கோட்டைகள் இருப்பதாகத் தெரிகிறது என்று குறிப்பெழுதினார்.
1831-ல் பிரிட்டிஷ் மன்னர் அனுப்பிய ஜந்து குதிரைகளை மகாராஜா ரஞ்சித் சிங்குக்கு பரிசாக வழங்குவதற்காக அலெக்ஸாந்தர் பர்னஸ் என்னும் தூதர் பஞ்சாப் வந்தார்.அப்படியே சிந்து சமவெளி பகுதிக்கு அவர் சுற்றுப்பயணம் சென்றபோது அங்கே புதையுண்டிருந்த சுவர்கள் படிக்கட்டுகள் பர்னஸ் புருவங்களை உயர்த்தின.அங்கு வசித்த மக்களும் “ ஆமாங்க ஜயா ! இங்கே பழங்காலத்திலே ஒரு பெரிய இராஜ்ஜியம் இருந்துச்சு.ராஜா ஏதோ தப்பு பண்ணிட்டாராம்.உடனே கடவுளுக்கு கோபம் வந்து ஊரையே அழிச்சுட்டாருன்னு எங்க கொள்ளுத்தாத்தாங்க சொல்லுவாங்க என்று பர்னஸிடம் கூறினார்கள்.
அதன் பிறகும் அரசாங்கம் பெரிதாக நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.கிராம மக்கள் அங்கிருந்து கற்களை எடுத்துக்கொண்டு சென்று வீடுகள் கட்டவும் சுவர்கள் எழுப்பவும் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.1856-ல் பிரிட்டிஷ் அரசும் அதே தவறை செய்தது.லாகூத் - முல்தான் பகுதிகளை இணைக்க ரயில் பாதை அமைக்கப்பட்ட போது தண்டவாளத்துக்கு இடையில் போடுவதற்கு கற்கள் தேவைப்பட்ட உடனே சிந்துசமவெளியில் வெளிப்பட்டிருந்த சுவர்களை உடைத்து கற்களை ரயில் பாதையின் நூறு மைல் தூரத்துக்கு பயன்படுத்தினார்கள்.இன்றைக்கு லாகூர் - முல்தான் ரயில் பாதையை உலகின் மிகப் பழைமையான ரயில் பாதை என்றுகூட குறிப்பிடலாம்.
தொடரும்...
நன்றி:மதன்
8 comments:
அருமையாக எழுதியுள்ளீர்கள் திலிப்... வாழ்த்துக்கள்...
//ம.தி.சுதா said...
அருமையாக எழுதியுள்ளீர்கள் திலிப்... வாழ்த்துக்கள்..//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சுதா
மிக அருமையான புகைப்படங்கள், தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்.பகிர்ந்தமைக்கு நன்றி.
//மிக அருமையான புகைப்படங்கள், தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்.பகிர்ந்தமைக்கு நன்றி//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி லக்ஷ்மி அம்மா
வியக்கவும் அதிசயிக்கவும் வைக்கின்றன...
//philosophy prabhakaran said...
வியக்கவும் அதிசயிக்கவும் வைக்கின்றன.//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி பிரபாகரன்
superb...
//Mohamed Faaique said... //
Thank you Mohamed
Post a Comment