அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

பிடரிக்கோடன்


படிமம்:Sphenodon punctatus in Waikanae, New Zealand.jpg


பிடரிக்கோடன் (Tuatara) நியூசிலாந்து நாட்டில் மட்டுமே வாழும் ஊர்வன வகுப்பு விலங்கு ஆகும். இது பார்ப்பதற்கு ஓணான், ஓந்தி போன்ற பல்லிகளைப் போலவே தோன்றினாலும், ஓந்தி-பல்லி இனங்களில் இருந்து வேறுபடும் ஆப்புப்பல்வரிசையமைப்பிகள் வரிசையில் வரும் விலங்கு.




200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பல்கிச் செழித்திருந்த ஆப்புப்பல்வரிசையமைப்பிகள் வரிசையில் இரு பிடரிக்கோடன் இனங்கள் மட்டுமே இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவை. இன்று வாழும் உயிர்களில் இவற்றின் அண்மிய மரபுவழி உறவு கொண்டவை பாம்புகளையும் பல்லிகளையும் உள்ளடக்கிய செதிற்றோல் ஊர்வன (Squamata) மட்டுமே. இதனால் பல்லி பாம்பு இனங்களின் மரபுவழித் தோன்றலையும் படிவளர்ச்சியையும் ஆய்வதற்கும், அவற்றின் மூதாதைய இனங்களின் புறத்தோற்றம், வாழியல் முறைகள் போன்றவற்றை அறிந்து கொள்வதற்கும் பிடரிக்கோடன்களை ஆராய்ச்சியாளர்கள் ஆர்வத்துடன் நோக்குகின்றனர். பறவைகள், தொன்மாக்கள், முதலைகள் போன்ற மிகப்பழைய மரபில் வந்த உயிரினங்களின் மூதாதையரைப் பற்றி அறிந்து கொள்ளவும் இவை உதவுகின்றன.



பிடரிக்கோடன்கள் மரப்பழுப்பு நிறத்தோற்றம் கொண்டவை. தலை முதல் வாலின் நுனி மட்டிலும் 80 செ.மீ. நீளம் வரை இருக்கின்றன. இவற்றின் உயர்ந்த அளவு எடை 1.3 கிலோ ஆகும். இவ்விலங்குகளின் புறமுதுகுப் பகுதியில் மலைகளில் உள்ள கொடுமுடிகளைப் (கோடு) போன்ற உச்சி இருக்கும். குறிப்பாக ஆண்விலங்குகளில் இது மிகுந்து இருக்கும். இதன் காரணமாகவே இவற்றை நியூசிலாந்துப் பழங்குடி மொழியான மௌரியில்"முதுகில் கொடுமுடிகள்" எனும் பொருளில் 'டுவாட்டரா' என்று அழைக்கின்றனர். இவ்விலங்குகளுக்கான ஆங்கிலப் பெயராகவும் 'டுவாட்டரா' என்பது நிலைபெற்றுள்ளது. 


இவற்றின் மேல்தாடையில் உள்ள இரு வரிசைப் பற்கள் கீழ்த்தாடையில் உள்ள ஒரு வரிசைப் பற்களின் மீது அண்டி இருக்கும் பல் அமைப்பு வேறு எந்த விலங்கிலும் காணப்படாத ஒன்று. மேலும் இவற்றின் நெற்றிப்பகுதியில் இருக்கும் "மூன்றாவது கண்" என்று கருதப்படும் உறுப்பும் மிகவும் விந்தையானதாகும். இதன் பயன் என்னவென்று அறிவதற்கு இன்னும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. பகலிரவு மாற்றத்திற்கேற்ப உடல் இயக்கங்களை அமைத்துக் கொள்ளும் நாடொறு இசைவுக்கும் (circadian rhythm), வெப்பநிலைச் சுழற்சிக்கேற்ப நடத்தையை அமைத்துக் கொள்ளவும் உதவும் உறுப்பாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.


இவ்விலங்குகளுக்குப் புறக்காதுகள் இல்லாவிட்டாலும் இவற்றின்எலும்புக்கூட்டில் உள்ள விந்தையான அமைப்பினால் இவற்றுக்குக் கேட்கும் திறன் உண்டு. படிவளர்ச்சியில் மீன்களின் வரிசையில் இருக்கும் சில பண்புகள் இவை என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றை வாழும் படிவங்கள் எனச் சிலர் அழைத்த போதிலும், உண்மையில் இடையூழிக் காலத்தில்இருந்து இவற்றின் மரபணுக்கள் மாறி வந்திருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.


இவை அழியும் தருவாயில் உள்ள விலங்குகள்.1989-ம் ஆண்டு வரை இவற்றின் இரண்டாவது சிற்றினம் கண்டுபிடிக்கப்படவில்லை. வாழிட மாற்றம், பாலினீசிய எலி போன்ற வெளியில் இருந்து அறிமுகப்படுத்திய கோண்மாக்கள், போட்டி உயிரினங்கள் ஆகியவற்றின் விளைவாக, நியூசிலாந்தின் பிற அகணிய உயிரினங்களைப் போலவே பிடரிக்கோடன் இனங்களும் அழிவாய்ப்பைக் கொண்டுள்ளன. 


ஒரு கட்டத்தில், நியூசிலாந்தின் முதன்மைத்தீவில் இவை முழுவதுமாக அற்றுப்போய், துணைத்தீவுகளில் மட்டுமே எஞ்சியிருந்தன. 2005-ம் ஆண்டில் வேலியிட்டுக் கண்காணிக்கப்படும் கரோரி கானுயிர் காப்பகத்தில் இவற்றை அறிமுகப்படுத்தியதில் இருந்து முதன்மைத் தீவிலும் இவை வாழ்ந்து வருகின்றன.2008-ல் இக்காப்பகத்தில் சில பேணுகைப் பணிகளை மேற்கொள்ளும்போது ஒரு பிடரிக்கோடன் முட்டைக்கூட்டைக் கண்டனர்.


சில திங்கள்கள் கடந்தபின்னர் பார்ப்பு (ஊர்வனக்குஞ்சு) ஒன்றையும் கண்டனர். கடந்த 200 ஆண்டுகளில் நியூசிலாந்து முதன்மைத்தீவில் பிடரிக்கோடன் இயல்பில் வெற்றியுடன் முட்டையிட்டுக் குஞ்சுபொரித்தது இதுவே முதல் முறையாகும்.







Post Comment


3 comments:

ம.தி.சுதா said...

நல்ல தகவல் டிலிப்...

தங்களுடைய வாக்கையும் தள வருகையையும் கூட்ட வேண்டுமானால் தளச் சீரமைப்ப கட்டாயம் தேவை என நினைக்கிறேன் இன்று வாக்குப் போடுவோமென்றால் இன்னும் வாக்குப் பெட்டி திறக்கவே இல்லை முதலில் நீங்கள் நிற வர்ணிப்கு குறைந்த ஒரு சாதாரண டெம்ளெட் இடுவதே மிகவும் சிறந்த தெரிவென நினைக்கிறேன்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
மறக்கப்பட்ட பிரபல பாடகர்கள் Boney M (கிறிஸ்மஸ் சிறப்பு பதிவு)

ம.தி.சுதா said...

சரி சரி இப்ப வாக்கு இட்டாச்சு

டிலீப் said...

//ம.தி.சுதா said...
நல்ல தகவல் டிலிப்...

தங்களுடைய வாக்கையும் தள வருகையையும் கூட்ட வேண்டுமானால் தளச் சீரமைப்ப கட்டாயம் தேவை என நினைக்கிறேன் இன்று வாக்குப் போடுவோமென்றால் இன்னும் வாக்குப் பெட்டி திறக்கவே இல்லை முதலில் நீங்கள் நிற வர்ணிப்கு குறைந்த ஒரு சாதாரண டெம்ளெட் இடுவதே மிகவும் சிறந்த தெரிவென நினைக்கிறேன்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.//

நண்பரே நீங்கள் சொன்னதுக்கிணங்க நானும் இணையத்தில் புதிய டெம்பிளட் தேடி பார்த்து சலித்து போய் இருக்கிறேன்.எனது ரசனைக்கு ஏற்றாட் போல் ஒரு டெம்பிளட்டையையும் நான் கண்டுபிடிக்கவில்லை.ஒவ்வொரு டெம்பிளிடட்டிலிலும் ஏதாவது குறை ஓர் குறை காணப்படுகிறது.நிற வர்ணிப்பை குறைத்துள்ளேன்
டெம்பிளிட்டை மாற்ற முயற்சி செய்கிறேன்.

குறையை கண்டுபிடித்து கூறியமைக்கு நன்றி மதி

நண்பேன்டா...........

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.