ஆஸ்திரியா நாட்டில் உள்ள வியென்னாவில் 1844 ல் பிறந்தார் போல்ட்ஸ்மேன். இவரின் தந்தை ஒரு வருமான வரி அதிகாரி. தாயும் பாட்டியும் கடிகாரம் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்கள். வசதி நிறைந்த போல்ட்சுமானுக்கு ஆசிரியர்கள் வீட்டுக்கே வந்து பாடம் நடத்தினார்கள். இவரது 14 வது வயதில் இவரின் தந்தை காலமாகிவிட்டார். படிப்பு பாதியில் நின்று போனது. இருந்தாலும் தனது 19 வது வயதில் வியன்னா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பிரிவில் விடுபட்ட கல்லூரி படிப்பை தொடர்ந்தார். அன்றைக்கு பிரபலமாக இருந்த இயற்பியல் பேராசிரியர்கள் இவருக்குப் பாடம் எடுத்தார்கள். 1866 ல் முனைவர் பட்டம் பெற்றார்.
பின்னர் கணித இயற்பியலில் ஆழ்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு சாதித்தார், போல்ட்ஸ்மேன். அணு மற்றும் அணுத்துகள்கள் மீது தான் போல்ட்சுமேனின் முழு கவனமும் இருந்தது. 'மேக்சுவெல் போல்ட்சுமேன் பகிர்வு', 'மேக்சுவெல் போல்ட்சுமேன் புள்ளிவிவரம்' ஆகியவை தான் இயந்திரவியலில் அடிப்படைக் கற்களாக திகழ்ந்து கொண்டிருகின்றன.
போல்ட்ஸ்மேன் கண்டறிந்து அறிவித்த இத்ததகைய விதிகள்,குவாண்டம் கோட்பாட்டின் துணையின்றி தன்னிச்சையாகவும் சுலபமாகவும் புள்ளி விவர அடிப்படையிலான இயந்திரவியலை புரிந்து கொள்ள மிகச்சிறந்த சாதனமாக அமைந்தன. வெப்பம் என்றால் என்ன? தட்பவெப்பம் எவ்வாறெல்லாம் ஓரிடத்தில் மாறுபடுகின்றது என்றெல்லாம் வெப்பம் என்பதன் முழு அர்த்தத்தையும் புரிந்து கொள்ள போல்ட்ஸ்மேன் கோட்பாடுகள் அமைந்தன. 'தெர்மோ டைனமிக்ஸ்' என்பது இயற்பியலின் ஒரு முக்கிய கூறு. வெப்பம் மற்றும் வெப்பம் கொண்டு செல்வது என்பது பற்றிய படிப்பு. பெட்ரொலை எரிப்பதன் மூலம் ஏற்படும் வேப்பாதால் மோட்டார் வாகனங்கலை இயக்குவது இந்த கோட்பாட்டின் அடிப்படை தான். இந்த இயக்கத்தில் ஈடுபடும் வாயுக்களுக்கு ஓடும் அணுக்களை கொண்டும் சமன்பாடுகளை நிறுவி வடிவமைத்து விளக்கினார், போல்ட்ஸ்மேன். கணிதத்தின் புள்ளியியல் துணை கொண்டு இயற்பியலின் அணு ஓட்டத்தை அணுகி விளக்கிய முதல் அறிவியலாளர் இவரே.
1906 இல் தனது 62வது அகவையில் போல்ட்ஸ்மேன் இறந்தார். போல்ட்ஸ்மேனின் கோட்பாடுகளுக்கு அவர் உயிருடன் இருக்கும் வரை ஒரு பக்கம் எதிர்ப்பும் இருந்து வந்தது. இதனால் அவர் மோசமான மனபாதிப்புக்குள்ளானார். எரிச்சல் மற்றும் விரக்தியின் உச்சிக்கே சென்று பலமுறை தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். வாழும் வரை இவரின் அருமையை புரிந்து கொள்ளாதவர்கள் இவரின் மறைவுக்குப் பின் தான் அதனை புரிந்து கொண்டார்கள்.
நன்றி விக்கி
14 comments:
நல்ல தகவல் மிக்க நன்றிகள்....
எப்போதுமே இருக்கும் பொது தெரியாத பெருமை இறந்த பின்னர்தான் புரிகிறது இந்த மனிதர்களுக்கு..
நல்ல தொரு பதிவு
பகிர்விற்கு நன்றி
//ம.தி.சுதா said...
நல்ல தகவல் மிக்க நன்றிகள்...//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சுதா
//Mohamed Faaique said...
எப்போதுமே இருக்கும் பொது தெரியாத பெருமை இறந்த பின்னர்தான் புரிகிறது இந்த மனிதர்களுக்கு//
அதுதான் மனித சுபாவம் முகமட்
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி முகமட்
//roshaniee said...
நல்ல தொரு பதிவு
பகிர்விற்கு நன்றி//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி றோஷினி
//வாழும் வரை இவரின் அருமையை புரிந்து கொள்ளாதவர்கள் இவரின் மறைவுக்குப் பின் தான் அதனை புரிந்து கொண்டார்கள்.//
ம்ம் கொடுமை தான் ,,இப்படியானவர்களின் கருத்துகளை ஏற்பது கிடையாது
Supper.
பகிர்விற்கு நன்றி டிலீப் :)
//nis said... [Reply to comment]
//வாழும் வரை இவரின் அருமையை புரிந்து கொள்ளாதவர்கள் இவரின் மறைவுக்குப் பின் தான் அதனை புரிந்து கொண்டார்கள்.//
ம்ம் கொடுமை தான் ,,இப்படியானவர்களின் கருத்துகளை ஏற்பது கிடையாது//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி nis
//Harini Nathan said...
Supper.
பகிர்விற்கு நன்றி டிலீப் :)//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஹரிணி
நல்ல தகவல் பகிர்விற்கு நன்றி டிலீப்
//sivatharisan said...
நல்ல தகவல் பகிர்விற்கு நன்றி டிலீப்//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பா
பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி.
//KANA VARO said...
பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பா
Post a Comment