அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube




கேயா என்கிற பத்து வயது பெண் பள்ளிகூடத்துக்கு சற்று அலுப்போடு போய் கொண்டு இருந்தாள்.ஜியாமெட்ரி ஹோம் வோர்க்கை அவள் முழுசாக முடிக்கவில்லை.நைசாக லீவு போட்டுவிட்டு மறுநாள் ஹோம் வோர்க்கை செய்து விட்டு போகலாம் என்று நினைத்த கேயாவை அவளுடைய அம்மா டோஸ் ஸ்கூலுக்கு அனுப்பினாள். ஹோம் வோர்க்கை நடந்தவாறே ஒருமுறை கேயா செக் பண்ணிகொண்டுருக்கையில்…




சட்டென்று கேயாவின் கண்கள் லேசாக இருண்டன.ஏதோ வீடுகள் மரங்கள் தெருக்கள் என்று பல காட்சிகள் மின்னல் வேகத்தில் அவள் மனத்துக்குள் தோன்ற கடைசியில் அவள் வீட்டு சமையலறை சும் லென்ஸ் போட்டது போல அவளுக்கு க்ளோசப்பில் வந்தது.சமையலறை தரையில் கேயாவின் அம்மா மயக்கமாக விழுந்து கிடக்கிறாள்.அம்மாவின் அருகே லேஸ் வேலை செய்யப்பட்ட ஒரு கர்ச்சீப் (கைக்குட்டை) அத்தனையும் தத்ரூபமாக………


சில வினாடிகள்தான்…………….


கேயாவுக்கு விழிப்பு வந்தது.உடல் வியர்த்திருந்தது.அங்கிருந்து சற்று தொலைவில் குடும்ப டாக்டர் வீடு இருப்பது நினைவு வர பதறியவாறு டாக்டர் வீட்டுக்கு ஓடினாள்.தன் அம்மாவுக்கு ஆபத்து என்று மட்டும் சொன்னாள்.காரில் விரைந்தாள் கேயா டாக்டருடன்…சமையலறையை பார்த்தபோது அத்தனையும் நிஜம்!கிச்சனில் கேயாவின் அம்மா மயங்கி கிடந்தாள்.பக்கத்தில் அதே கர்ச்சிப்.


அம்மாவுக்கு ஹார்ட்டடேக் வந்திருக்கின்றது.உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அந்தப் பெண் பிழைத்து கொண்டாள்.நடந்த விஷயத்தை டாக்டரிடம் கேயா சொன்னபோது அவர் ஆச்சரியப்பட்டு போக பிறகு மனோதத்துவ நிபுணர்கள் கேயாவை விசாரிக்க வந்தார்கள்.


சில ஆண்டுகளுக்கு முன் நடந்த உம்மை சம்பவம் இது.


இந்த அனுபவத்துக்கு பெயர்தான் டெலிபதி.மனிதனுக்கு ஜம்புலன்கள் உண்டு.பார்ப்பது, நுகர்வது(முகர்வது) ,தொடுவது ,ருசிப்பது ,கேட்பது.நாம் உலகை உணர்வது இந்த ஜம்புலன்களினால்தான்.


இதைச் தாண்டிய ஆச்சரியம்தான் டெலிபதி என்கிற சிந்தனை பரிமாற்றம்.வியப்பூட்டும் இந்த சக்தி நம் எல்லோருக்கும் இருக்கின்றது.அதற்கேற்ப பல சமயங்களில் இந்த உணர்வு தெளிவாக இயங்கவும் செய்து நம்மை வியப்புக்குள்ளாக்குகிறது.சிலருக்கு இந்த சக்தி அதிகமாக இருக்கின்றது.அவர்களை நாம் Psychic என்று அழைக்கின்றோம்.



இதோ சிறிய உதாரணம்.
ரவி வெளியூருக்கு வேலைக்கு சென்று ஒருவருடமாகின்றது.
ஒரு தகவலும் இல்லையே என்று நாம் ஆழ்ந்து சிந்திக்கும் போது டெலிபோன் மணி அடிக்கின்றது.எடுத்தால் டேய் நான் ரவிடா ! என்று நண்பரின் குரல்.


டெலிபதி மட்டுமல்ல இதை சார்ந்த மேலும் சில சக்திகளும் உண்டு பல சந்தர்ப்பங்களில் இந்த எல்லா சக்திகளும் ஒன்றாய் இணைந்து சில சமயம் இரண்டாக கூட்டணி அமைத்தும் இயங்குவதும் உண்டு.மனோதத்துவ அறிஞர்கள் இவற்றில் முக்கியமான நான்கு சக்திகளை இணைத்து Psi (ஸை) என்று பெயரிட்டனர்.பிற்பாடு இதற்கு நவீனமாக ESP ( Extra Sensory Perception ) என்று பெயர் வந்து நிலைத்தது.அதாவது புலன்களை தாண்டி புரிந்துகொள்ளும் சக்தி.


இந்த சக்திகள் எல்லாமே மகா ஆச்சரியமானவை!

சிந்தனை பரிமாற்றம் தொடரும்....

நன்றி:மதன்




Post Comment


5 comments:

Harini Resh said...

உண்மையில் இந்த டெலிபதி சக்தி ஆச்ச்ர்யமானதுதான்,
இல்லையா டிலீப் :)

டிலீப் said...

//Harini Nathan said...
உண்மையில் இந்த டெலிபதி சக்தி ஆச்ச்ர்யமானதுதான்,
இல்லையா டிலீப் :)//

ஆச்சரியம் தான் ஹரிணி. எனக்கும் அவ் சக்தி இருக்குது போல .நான் நினைத்தேன் நீங்கள் இவ்வாறு பின்னூட்டல் இடுவீர்கள் என்று அதை போலவே போட்டு இருக்கின்றிகள்

மணிபாரதி said...

Hi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....

www.ellameytamil.com

Harini Resh said...

ஆஹா! அப்படியா ??
அப்போ டெலிபதி உண்மைத்தான் போல என்ன.

டிலீப் said...

//Harini Nathan said...
ஆஹா! அப்படியா ??
அப்போ டெலிபதி உண்மைத்தான் போல என்ன//

ஆம் ஹரணி.....

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.