அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube


படிமம்:Air India Express VT-AXU.jpg


இந்தியாவின் தெற்கு நகரான மங்களூரில் கடந்த மே மாதத்தில் இடம்பெற்ற விமான விபத்துக்கு தூக்கக்கலக்கத்தில் இருந்த விமான ஓட்டியே காரணம் என அதிகாரபூர்வ விசாரணை முடிவுகள் தெரிவிக்கின்றன.சேர்பியாவைச் சேர்ந்த விமான ஓட்டி சிலாத்கோ குளூசிக்கா பயணத்தின் அநேகமான நேரத்தில் தூக்கக்கலக்கத்தில் இருந்ததாகவும், விமானம் கீழிறங்கும் போது அவர் "தன்னிலை இழந்திருந்ததாகவும்” விசாரணை முடிவுகள் தெரிவிக்கின்றன. விமானம் மங்களூர் ஓடுபாதையை தவறான உயரத்திலும் கோணத்திலும் அணுகியுள்ளது. மீண்டும் ஒரு தடவை விமான நிலையத்தைச் சுற்றி வரும்படி சக விமான ஓட்டி எடுத்துக் கூறியும் அவர் அதனைக் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.

விமானம் தீப்பிடிப்பதற்கு சில செக்கன்களுக்கு முன்னர் சக விமான ஓட்டி “ஓடுபாதை அனைத்தும் எமக்கு முடிந்து விட்டது” எனக் கத்தியது விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட பதிவுகளில் இருந்து கேட்கப்பட்டது.

இவ்விமான விபத்து குறித்த முழு அறிக்கையும் நேற்று செவ்வாய்க்கிழமை அன்று அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

10 ஆண்டுகளில் இந்தியாவில் இடம்பெற்ற மிக மோசமான விமான விபத்து இதுவாகும். துபாயில் இருந்து மங்களூர் நோக்கி வந்த போயிங் 737 ரக ஏர் இந்தியா எக்சுபிரசு 812 விமானத்தில் 21 குழந்தைகள் உட்பட 160 பயணிகளும் 6 சிப்பந்திகளும் இருந்தனர். எட்டு பேர் உயிருடன் காப்பாற்றப்பட்டனர். இவ்விமானத்தில் பயணம் செய்தோரில் பெரும்பாலானோர் இந்தியர்கள். இவர்கள் மத்திய கிழக்கில் பணியாற்றிவிட்டு குடும்பத்தினருடன் திரும்பியவர்கள் ஆவர்.Post Comment


4 comments:

மகாதேவன்-V.K said...

அப்படியா செய்தி நானும் இது சம்பந்தமாக ஒரு பதிவு எலுதியிருந்தேன் இப்போது நீங்கள் இதை முடித்து விட்டீர்கள்.
நன்றி


http://thagavalthulikal.blogspot.com/2010/10/blog-post_02.html

டிலீப் said...

//மகாதேவன்-V.K said...
அப்படியா செய்தி நானும் இது சம்பந்தமாக ஒரு பதிவு எலுதியிருந்தேன் இப்போது நீங்கள் இதை முடித்து விட்டீர்கள்.
நன்றி


http://thagavalthulikal.blogspot.com/2010/10/blog-post_02.html//

ஆம் தேவன் ஒருவரின் கவனயீனத்தால் பல உயிர்கள் மாய்ந்துள்ளது.

Harini Nathan said...

மனதை உருக்கும் தகவல் டிலீப்.
கவனயீனப் பிழை உயிர்கள் பலியாகிவிட்டன :(
தகவலுக்கு நன்றி

டிலீப் said...

//Harini Nathan said...
மனதை உருக்கும் தகவல் டிலீப்.
கவனயீனப் பிழை உயிர்கள் பலியாகிவிட்டன :(
தகவலுக்கு நன்றி//

வேதனைக்குரிய விடயம்

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.