அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube
வெள்ளி கிரகமானது மற்றைய கிரகங்களை விட மர்மங்கள் நிறைந்த கிரகமாகவே விஞ்ஞான வளர்ச்சியடைந்த தற்போதைய காலகட்டத்திலும் காணப்படுகிறது.ஆகவே வெள்ளியில் காணப்படும் மர்மங்கள் பற்றியே இப் பதிவில் பார்க்கபோகிறோம்.


சூரியன் மேற்கே உதிக்க முடியுமா? ஆனால் வெள்ளி கிரகத்தில் சூரியன் மேற்கேதான் உதிக்கின்றது.சூரிய மண்டலத்தில் உள்ள எட்டு கிரங்களில் வெள்ளியில் மட்டுமே சூரியன் மேற்கே உதிக்கிறது.அதற்கு காரணம் வெள்ளி தனது அச்சில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சுழல்கின்றது.பூமியும் மற்ற கிரங்களும் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சுழல்வதால் சூரியன் கிழக்கே உதித்து மேற்கே மறைகின்றது.


File:Phases-of-Venus.svg


மேற்கே தெரியும் வெள்ளி கிழக்கே தோன்றுவதை நாம் அவதானித்து இருப்போம் அது எவ்வாறு நிகழ்கின்றது என்றால் வெள்ளியின் சுற்றுப்பாதை சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே அமைந்துள்ளது.சூரியனை சுற்றும் போது வெள்ளி ஒரு சமயம் சூரியனின் ஒரு புறத்தில் இருக்கும்.ஒரு கட்டத்தில் அது சூரியனின் கடந்து மறு புறத்துக்கு வருகின்றது. உதாரணத்துக்கு : ஒரு மேடையில் விழாத் தலைவரின் (நம் பார்வையில்) இடது புறம் இருப்பவர் எழுந்து தலைவரின் இருக்கையை கடந்து வலது புறம் வந்து அமருவதை போன்றது.


சூரியனுக்கு இடது புறம் இருக்கிற வரை வெள்ளி அந்தி வெள்ளியாக மேற்கு திசையில் காட்சி அளிக்கிறது.பின்பு அது சூரியனுக்கும் நமக்கும் நடுவே வரும் போது எமக்கு தெரிவதில்லை.பின்னர் வெள்ளி நகர்ந்து சூரியனின் வலது புறத்துக்கு வந்த பின் அதிகாலையில் விடிவெள்ளியாகத் தெரிய ஆரம்பிக்கின்றது.அது சூரியனை ஒரு ரவுண்ட் அடித்து விட்டு மறுபடி சூரியனின் இடது புறத்துக்கு வந்து சேருகின்றது.


ஏனைய கிரகங்களை விண்வெளி ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர் ஆனால் வெள்ளி கிரகத்தை யாரும் கண்டுபிடிக்கவில்லை.மனிதர்கள் சிந்திக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து வெள்ளியை மக்கள் கவனித்த வந்திருக்க வேண்டும்.ஆகவே பண்டை நாகரிக மக்களும் வெள்ளியை அறிந்திருந்தனர் என்பதற்கான பல குறிப்புகள் உள்ளன.பாபிலோனியர்கள் சுடுமண் வில்லைகளில் வெள்ளி பற்றி குறித்து வைத்துள்ளனர்.எனினும் அஸ்டெக் மக்களும் பண்டை கிரேக்கர்களும் அந்தி வெள்ளியாகத் தெரிகின்ற வெள்ளியும் விடி வெள்ளியாகத் தெரிகின்ற வெள்ளியும் ஒன்றேதான் என்பதை அறியாமல் அந்தி வெள்ளிக்கு ஒரு பெயரும் விடிவெள்ளிக்கு ஒரு பெயரும் வைத்தனர்.


அடுத்த பதிவில் வெள்ளி கிரகத்தில் வேறு என்ன மர்மங்கள் உள்ளதென பார்ப்போம்.

மர்மங்கள் தொடரும்...Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.