
பிளக்கரின் வருகையால் நாளுக்கு நாள் அதிகமான எழுத்தாளர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.ஒரு பதிவாளனின் எழுத்தாற்றல் காணப்படுவது அவன் இடும் பதிவுக்கு அதை வாசிக்கும் வாசகரால் கிடைக்கும் பின்னூட்டகளின் மூலமே ஆகும்.
பிளக்கரில் இரு வசதிகள் உண்டு பின்னூட்டம் இட்டதுமே பப்லிஷ் (Publish) ஆவதும் மற்றது எழுத்தாளன் அனுமதித்ததன் பின் பப்லிஷ் (Publish) ஆவது.
(Your comment has been saved and will be visible after blog owner approval.)
இதில் உடனே பின்னூட்டல் பப்லிஷ் (Publish)ஆவது ஒரு எழுத்தாளனை மேலும் ஊக்கப்படுத்தும் என்று நினைக்கின்றேன்.ஏன்னென்றால் வாசகர்கள் அவனின் ஆக்கத்துக்கு பின்னூட்டத்தின் மூலமே குறை நிறைகளை கூற முடியும்.
அதுவே மற்ற பின்னூட்டலான எழுத்தாளன் அனுமதித்ததன் பின் பப்லிஷ் ஆவது. அது நல்ல கருத்துகளை மட்டுமே வெளிவருவதற்கான வாய்ப்புகள் தான் அதிகமாக இருக்கும்.சில எழுத்தாளர்கள் என் பண்ணுவார்கள் நல்ல கருத்தை மட்டும் பிரசுரிப்பார்கள் மாற்று கருத்தை நீக்கி விடுவார்கள்.
இவற்றை ஏன் சொல்லுகிறேன் என்றால் சமீபத்தில் நான் கம்பம் என்ற தளத்துக்கு சென்று அவ்பதிவாளனின் ஆக்கங்களை படித்தேன் அதில் ஒரு பதிவில் உம்மைக்கு முரணான ஒரு விடயம் குறிப்பிடப்பட்டு இருந்தது.ஒரு மதத்தை சம்பந்தபடுத்தி எழுதும் போது தீர விசாரித்து எழுதுவதே சிறந்தது என்று நினைக்கிறேன்.
ஆகவே நான் அப்பதிவுக்கு எனது கருத்தையும் பின்னூட்டலாக இட்டேன்.அவ் கருத்து இது வரை பப்லிஷ் ஆகவே இல்லை.இதில் ஒன்று சொல்லவேண்டும் அவ்பதிவாளன் என் முகப்புத்தகத்திலும் நண்பனாக இருக்கின்றான்.எனவே நான் எனது கருத்தை அந்த பந்தியையும் குறிப்பிட்;டு அவரது வோல்லில் (Wall) பப்லிஷ் (Publish) செய்தேன். என்ன கொடுமை வோல்லில் போட்டதையும் நீக்கி விட்டார்.
இதனால் நான் சொல்ல வருவது வாசகர்கள் தங்களது கருத்தை சுதந்திரமாக அளிப்பதற்க்கு இடமளியுங்கள்.அது நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம்.
24 comments:
என்ன டிலீப்......
இன்று ஒரு வித்தியாசமான பதிவுடன் அதோடு கொஞ்சம் கடுப்பாகவும் வந்திருக்கீங்க
அது சரிதான், இன்று எத்தனையோ பதிவாளர்கள் வந்திருக்கின்றார்கள் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
உண்மையில் ஒருவரது திறமை பிறரின் கருத்துக்களிலும் விமர்சனங்களிலும் மேலும் மேலும் பொலிவுறும்.
அதற்கு பின்னூட்டல் பெரும்பங்கு ஆற்றும் என்பது உண்மை.
சரி சரி மற்றவங்கள விடுங்க Boss......
வணக்கம் ஹரிணி கொஞ்சம் தான் நிறைய இல்ல....
என்ன கொடும நான் காச கேட்டன் நான் போட்ட கருத்ததான் போட சொன்னன்.
பிளக்கர் சொந்தகாரன்ட சொல்ல போறன் இந்த visible after blog owner approval தூக்க சொல்லி ஹிய்.....ஹிய்.....ஹிய்.....
ஹிய்.....ஹிய்.....ஹிய்.
அஹா.....அஹா.....அஹா.....
Yes Dileep Supper post.
எல்லாருக்கும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் தன்மை இல்லை.
குறிப்பாக பதிவுகளை இடும்போது சரியான உண்மையான தகவல்களை கொடுக்கவேண்டும்.
பாராட்டுக்கள் உங்களுக்கு
//Anonymous said...
Yes Dileep Supper post.
எல்லாருக்கும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் தன்மை இல்லை.
குறிப்பாக பதிவுகளை இடும்போது சரியான உண்மையான தகவல்களை கொடுக்கவேண்டும்.
பாராட்டுக்கள் உங்களுக்கு//
ஆம் Anonymous அவ்வாறனவர்களுக்கே இப்பதிவு
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி
ippadium pannuvankala?
விடுங்கப்பா...அவர் உண்மையை பிடிக்காதவர் போல .....
கருத்துச் சொல்வது என்பது அனைவருக்கும் உள்ள தனிப்பட்ட சுதந்திரம். உங்கள் கருத்தை அவர் போட மறுத்தது குற்றமே... அவர் தான் செய்யத தவறை மறைக்க நினைத்துள்ளார்... விட்டுவிடுங்கள் அண்ணா பிழைத்துப் போகட்டும் ஹிஹிஹிஹி .... நண்பன்டா ... நீ வாழ பிறந்தவன் ..... போறமா பிடிச்ச பசங்க பிழைச்சு போகடும் lol
//orin said...
ippadium pannuvankala?//
ஒரின் இப்பிடி எல்லாரும் பண்ணமாட்டாங்க ஒரு சிலர் மட்டும்
கருத்துக்கும் வருகைக்கம் நன்றி ஒரின்
//ஜனகனின் எண்ண ஜனனங்கள் said...
விடுங்கப்பா...அவர் உண்மையை பிடிக்காதவர் போல ..//
ஜனகன் உம்மையையோடு தாங்கள் சொல்லவரும் விடயங்கள் பொய்யாகி விடுமோ என்ற பயம் தான்
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஜனகன்
//அர்ஜுன் நிதர்ஷன் said...
கருத்துச் சொல்வது என்பது அனைவருக்கும் உள்ள தனிப்பட்ட சுதந்திரம். உங்கள் கருத்தை அவர் போட மறுத்தது குற்றமே... அவர் தான் செய்யத தவறை மறைக்க நினைத்துள்ளார்... விட்டுவிடுங்கள் அண்ணா பிழைத்துப் போகட்டும் ஹிஹிஹிஹி .... நண்பன்டா ... நீ வாழ பிறந்தவன் ..... போறமா பிடிச்ச பசங்க பிழைச்சு போகடும் lol//
ஹா....ஹா.... நிதர்ஷன் நாட்டாமை மாதிரி வந்து பளிச்சுனு தீர்ப்ப சொல்லிடிங்க
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நிதர்ஷன்
நீங்க சொல்ரது சரிதான், ஆனா நிறைய பேரு அனானியா கெட்ட வார்த்தைகள யூஸ் பண்ணுராங்க, அதனால படிக்க வர்ர மற்றவங்களுக்கும் கஷ்டம் இல்லையா? இத தடுக்க என்ன வழின்னு யோசிக்கனும்.
பல பதிவர்கள் தங்களின் கருத்தே இறுதியானது என்று நினைக்கும் பட்சத்தில் நம் கருத்து காலவதியானதட்கு சமம் என்று நினைக்கிறார்களோ என்னவோ.
நீங்க சொல்றது ரொம்ப சரிதான்.. ஆனால் எல்லோரும் அப்படி இருப்பார்களென்று நினைக்க முடியாதல்லவா?..நிறைகளையும், ஒரு சில குறைகளையும் வெளிப்படுத்தும் வலைப்பதிவாளர்கள் இருக்கவே செய்கின்றனர் என்பதும் உண்மை.
இரவு வானம் சொல்றதும் சரிதான்...சில அனானிகள் கொச்சையான கருத்துக்களும் கொடுத்துட்டு போய்டுறாங்க..பெண் பதிவர்களுக்கு நிச்சயமா அது கொஞ்சம் தயக்கமாகவும்,கூச்சமாகவும் இருக்கும் இல்லையா...கருத்து சொல்ல சுதந்திரம் இருக்கு...ஆனால் நாகரிகமாய் சொல்லும் கருத்து சுதந்திரத்தை நல்லபடியாக பயன்படுதிட்டால் உங்க கருத்தை செயல்படுத்துவதில் எந்த தடையோ,குறையோ இல்லை...நன்றி திலிப்..))
//இரவு வானம் said...
நீங்க சொல்ரது சரிதான், ஆனா நிறைய பேரு அனானியா கெட்ட வார்த்தைகள யூஸ் பண்ணுராங்க, அதனால படிக்க வர்ர மற்றவங்களுக்கும் கஷ்டம் இல்லையா? இத தடுக்க என்ன வழின்னு யோசிக்கனும்//
ஆம் நீங்கள் சொல்வது சரிதான் வானம்.ஆனால் இவ்வாறன செயல்களால் ஒரு பதிவுக்கு சார்பான கருத்துக்களே வெளியே வரும்.பாதகமான் அல்லது எதிர்மறையான கருத்துக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடும்.
ஒர் ஜனநாயக நாட்டில் எதிர் கட்சி எவ்வளவு முக்கியமோ அதே போலவே ஒரு பதிவுக்கு எதிர்மறையான கருத்து முக்கியம் என்று நான் நினைக்கின்றேன்.
நீங்கள் அனானியா பற்றி கூறினிர்கள் அவ்வாறான கருத்துக்கள் வந்தால் அதை நீக்க முடியும் தானே பதிவாளனாள்.
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி இரவு வானம்
//விக்கி உலகம் said...
பல பதிவர்கள் தங்களின் கருத்தே இறுதியானது என்று நினைக்கும் பட்சத்தில் நம் கருத்து காலவதியானதட்கு சமம் என்று நினைக்கிறார்களோ என்னவோ//
நீங்கள் கூறுவது சரி பதிவுக்கு சாதகமாக கருத்துரைத்தால் காலவாதியாகாது வாசகனின் கருத்து. அதுவே கருத்து எதிர்ராக வந்தால் அவ் கருத்து பதிவரின் குப்பை தொட்டியில் தான். வாசகனை மதிக்க தெரிந்த பதிவாளன் இவ்வாறன காரியங்களை செய்ய மாட்டார்கள்
கருத்துக்கும் வருகைக்கும் விக்கி உலகம் நன்றி
//தங்கம்பழனி said...
நீங்க சொல்றது ரொம்ப சரிதான்.. ஆனால் எல்லோரும் அப்படி இருப்பார்களென்று நினைக்க முடியாதல்லவா?..நிறைகளையும், ஒரு சில குறைகளையும் வெளிப்படுத்தும் வலைப்பதிவாளர்கள் இருக்கவே செய்கின்றனர் என்பதும் உண்மை//
பழனி நான் எல்லா பதிவாளனையும் இங்கு சொல்லவில்லை வாசகனை மதிக்க தெரியாத ஒரு சிலரே...
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி பழனி
//ஆனந்தி.. said...
இரவு வானம் சொல்றதும் சரிதான்...சில அனானிகள் கொச்சையான கருத்துக்களும் கொடுத்துட்டு போய்டுறாங்க..பெண் பதிவர்களுக்கு நிச்சயமா அது கொஞ்சம் தயக்கமாகவும்,கூச்சமாகவும் இருக்கும் இல்லையா...கருத்து சொல்ல சுதந்திரம் இருக்கு...ஆனால் நாகரிகமாய் சொல்லும் கருத்து சுதந்திரத்தை நல்லபடியாக பயன்படுதிட்டால் உங்க கருத்தை செயல்படுத்துவதில் எந்த தடையோ,குறையோ இல்லை...நன்றி திலிப்..))//
ஆனந்தி உங்கள் கருத்தை நான் ஆமோதிகின்றேன் பெண்களுக்கு நாட்டிலேயே பாதுகாப்பு இல்லாத போது இணையத்தில் மட்டும் இருந்திடவா போது.
நான் பொதுவாகவே இக்கருத்தை சொல்லுகின்றேன்
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஆனந்தி
தூசணம்(கெட்ட வார்த்தை) அனுப்பினால் அதையும் பிரசுரிக்கலாமா?
எனவே நல்லதோ கெட்டதோ பிரசுரியுங்கள் என்ற உங்கள் கருத்து பிழையானது.
//Anonymous said...
தூசணம்(கெட்ட வார்த்தை) அனுப்பினால் அதையும் பிரசுரிக்கலாமா?
எனவே நல்லதோ கெட்டதோ பிரசுரியுங்கள் என்ற உங்கள் கருத்து பிழையானது//
ஏன் பதிவாளனுக்கு தெரியாதா இது நல்ல வார்த்தையா இல்லை கெட்ட வார்த்தையா (தூஷணம்) என்று அவ்வாறான வார்த்தைகள் பாவிக்க பட்டால் அதை நீக்க(Remove) முடியாதா முடியும் தானே. நான் நல்லதை தானே பிரசுரிக்க சொல்லுகிறேன்.தூஷணங்களை இல்லை
எனக்கும் அதை எடுத்து விடத் தான் விருப்பம் ஆனால் ஒருவர் தனது அபாச தள முகவரியை அதில் அடிக்கடி செலுத்திவிடுகிறார்... என்ன செய்யலாம்... சரி அதை அழித் தாலும் தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் அது சேமிக்கப்பட்டவிடுமே... இதற்கு தீர்விருந்தால் நான் எடுத்தவிடத் தயார்..
இது தாம்ப எனக்கு பெரிய பிரச்சனையாயிருக்கு...
//ம.தி.சுதா said...
எனக்கும் அதை எடுத்து விடத் தான் விருப்பம் ஆனால் ஒருவர் தனது அபாச தள முகவரியை அதில் அடிக்கடி செலுத்திவிடுகிறார்... என்ன செய்யலாம்... சரி அதை அழித் தாலும் தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் அது சேமிக்கப்பட்டவிடுமே... இதற்கு தீர்விருந்தால் நான் எடுத்தவிடத் தயார்..
இது தாம்ப எனக்கு பெரிய பிரச்சனையாயிருக்கு//
நண்பா நான் எனது கருத்தை தான் பதிவாக போட்டேன்..முயற்சி செய்து பார்ப்போம் வழி இல்லாமலா போகும்
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி மதி
Post a Comment