அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube


Angelo Mathews and Lasith Malinga smile after Sri Lanka completed the winஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் மெத்தியுஸ் மற்றும் மலிங்கவின் அபாரத்தால் இலங்கை எதிர்பாராத வெற்றியை பெற்றது.


இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 239 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஆரம்பமே தடுமாற்றத்தை எதிர்நோக்கிய அவுஸ்திரேலிய அணி இடைநிலை வீரராக களமிறங்கிய ஹசியின் நிதான துடுப்பாட்டத்துடன் சற்று வலுவான நிலையை அடைந்து.

மைக்கேல் ஹஸ்ஸி மட்டுமே சிறப்பாக துடுப்பெடுத்தாடி 71 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காது இருந்தார்.Muttiah Muralitharan and Angelo Mathews react as Sri Lanka cross the finish line

இதில் அஸ்திரேலியா மொத்தம் 14 பவுண்டரிகளையே அடித்திருந்தது. அதுவும் 17 ஓவர்களுக்குப் பிறகு அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் 3 பவுண்டரிகளையே அடித்தனர்.

இலங்கை பந்து வீச்சாளர்களில் திசரா பெரேரா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மலிங்க 39 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் சுராஜ் ரந்திவ் 35 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டையும் கைப்பற்ற முரளிதரன் 9 ஓவர்களில் 36 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து சிறப்பாக பந்து வீசினார். முன்னதாக காயத்திலிருந்து மீண்டு வந்த விக்கெட் காப்பாளர் பிராட் ஹெடின் 55 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 49 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வொட்சனை 10 ஓட்டங்களில் மலிங்க வீழ்த்தினார். அணி தலைவர் கிளார்க் 27 ஓட்டங்களுடன் திரும்பினார்.

இறுதியில் ஷான் மார்ஷ் 31 ஓட்டங்கள் எடுத்தார். ஹஸ்ஸி தன் 71 ஓட்டங்களில் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார்.Angelo Mathews launches one down the ground

இந்நிலையில் 240 எனும் இலகு வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பம் முதலே தடுமாற்றத்தை நோக்கி ரசிகர்களின் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய தரங்க 3 ஓட்டங்களுடனும், டில்சான் 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க தொடரந்து களமிறங்கிய சங்ககார சற்று நிதானமாக துடுப்பெடுதடதாடி 49 ஓட்டங்களை பெற்ற போது டொற்றி பந்து வீச்சில் போலட் முறையில் ஆட்டமிழந்து சென்றார்.

தொடர்ந்து களமிறங்கிய ஜயவர்த்தன 19 ஓட்டங்களுடனும், சில்வா 4 ஓட்டங்களுடனும், பெரேரா மற்றும் ரன்திவ் ஓட்டம் எதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தனர்.

எனினும் நான்காவது விக்கெட்டுக்காக இணைந்து கொண்ட மெத்தியுஸ் மற்றும் எட்டாவது விக்கெட்டுக்காக இணைந்து கொண்ட சிறந்த பந்து வீச்சாளர் மலிங்கவும் சிறப்பான இணைப்பாட்டத்தை ஏற்படுத்தி இலங்கையை தோல்வியில் இருந்து வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றனர்.

எனினும் ஒரு கட்டத்தில் வெற்றிக்கு ஒரு ஓட்டம் பெற இருந்த நிலையில் மலிங்க ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தார். எனினும் தொடர்ந்து களமிறங்கிய முரளிதரன் வொட்சனின் பந்து வீச்சில் 4 ஓட்டங்களை பெற்று அணியை வெற்றி பெற செய்தார்.

இதில் மெத்தியுஸ் அபாரமாக 84 பந்துகளில் 8 பவுண்டரிகள் ஒரு ஆறு ஓட்டம் அடங்கலாக 77 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது இருந்தார். மாலிங்க அதிரடியாக 48 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடங்கலாக 56 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 

இதனையடுத்து இலங்கை அணி 44.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 243 ஓட்டங்களை பெற்று ஒரு விக்கெட்டால் வெற்றி பெற்றது.

அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் டொற்றி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.சாதனை ஜோடி
நேற்றைய போட்டியில் 9வது விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்த இலங்கையின் மலிங்கா, மாத்யூஸ் ஜோடி புதிய சாதனை படைத்தது. ஒருநாள் கிரிக்கெட் அரங்கில், 9வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி வரிசையில் முதலிடம் பிடித்தது. முன்னதாக இந்தியாவின் கபில் தேவ், கிர்மானி ஜோடி இருந்தது. கடந்த 1983ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடந்த போட்டியில் இந்திய ஜோடி 9வது விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்திருந்தது.


ஆட்டநாயகனாக இறுதி வரை ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வழிவகுத்த அஞ்சலோ மெத்தியுஸ் தெரிவுசெய்யப்பட்டார்

Angelo Mathews his hoisted on his team-mates' shoulders

இதன் மூலம் இலங்கை அணி மூன்று தொடர்களை கொண்ட இத் தொடரில் மூன்றுக்கு ஒன்று என முன்னிலையில் உள்து.Post Comment


1 comments:

cineikons said...

Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
www.cineikons.com

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.