அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube




தியோடோர் ஆரோல்டு "டெட்" மைமான் (Theodore Harold "Ted" Maiman) (ஜூலை 11, 1927 - மே 5, 2007) ஓர் அமெரிக்க இயற்பியலாளர். இவர் 1960 இல் சீரொளி(லேசர்) யைக் கண்டுபிடித்து முதலில் செய்து காட்டியவர். 1983 இல் வுல்ஃவ் பரிசும், 1987 இல் ஜப்பான் பரிசும் பெற்றார். லேசர் ஆடிசி என்னும் நூலை எழுதினார்.

மைமான் லாஸ் ஏஞ்சலிசில் 1927 ஆம் ஆண்டு ஜூலை 11, 1927 பிறந்தார். தன் பள்ளி நாட்களில் மின் கருவிகளையும் வானொலி வாங்கிகளை செப்பனிட்டும் பணம் ஈட்டி அதைப் பயன்படுத்தி கொலராடோ பல்கலைக்கழகத்தில் பொறியியல் இயற்பியல் துறையில் இளங்கலை (B.S.) படிப்பைத் துவங்கினார். 1949 இல் பட்டம் பெற்றபின், மேற்படிப்புக்காக ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மின்னியல் துறையில் முதுநிலை பட்டத்தை 1951 இலும், முனைவர் ஆராய்ச்சிப் பட்டத்தை 1955 இலும் பெற்றார். அவருடைய முனைவர் ஆய்வுப் பட்டப்படிப்பு, செய்முறை இயற்பியலில், வில்லிசு லாம்பு (Willis Lamb) வழிகாட்டலின் கீழ் நடைபெற்றது. தன் முனைவர் பட்டப் படிப்பில் ஆற்றலால் தூண்டப்பட்ட ஹீலியம் அணுக்களின் எதிர்மின்னிகளின் நுட்ப ஆற்றல் நிலை மாற்றங்களை (fine structure) நுண்ணலை-ஒளியலை அளவீடுகள் மூலம் ஆய்வு செய்தார்.
மைமானின் சீரொளிக் கருவியை முனைவர் ரால்ஃவ் எல். அட்சின்சன் ( Dr. Ralph L. Hutcheson) வளர்த்துத் தந்த சிகப்புக்கல் அல்லது கெம்பு என்னும் படிகத்தைக் கொண்டு உருவாக்கி மே 16, 1960 இல் வெற்றிகரமாக இயக்கிப் புதுமை படைத்தார். அப்பொழுது இவர் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள மாலிபுஎன்னும் இடத்தில் உள்ள ஹியூஸ் ஆய்வகத்தில் செய்தார்.


சீரொளியை யார் கண்டுபிடித்தார்கள் என்பதில் கார்டன் கூல்டு (Gordon Gould ) பல வழக்குகள் ஏற்பட்டு, கடைசியில் கார்டன் கூல்டு என்பார்தான் முதலில் வகுத்து (design) கண்டுபிடித்தார் என்றுகூறி அவருடைய காப்புரிமங்களுக்கே முன்னுரிமைகள் அளிக்கப்பட்டன, ஆனால் மைமானுடைய காப்புரிமம் மற்ரும் அவருடைய ஆய்வின் பயனாகவும் அவர்தான் முதன்முதலில் சீரொளியை செய்து காட்டினார் என்பதில் எந்த கேள்விக்கும் இடமில்லாமல் முடிவாகியது.
ஹியூஸ் ஆய்வகத்தை விட்டுச் சென்றபின் குவாண்ட்ரான் என்னும் நிறுவனத்தில் சேர்ந்து அங்கு லேசர் மேம்பாட்டுப்பணிகளைச் செய்து வந்தார். 1962 இல் யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு முழுச்சொந்தமான, புதிதாக நிறுவப்பட்ட, கோராட் கார்ப்பொரேசனின் (Korad Corporation) தலைவராக (president) பொறுப்பேற்றார். பின்னர் 1968 இல் மைமான் அசோசியேட்ஸ் என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார்.
இவருடைய லேசர் கண்டுபிடிப்புக்காக இருமுறை நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப் பட்டார் எனினும் இவர் அப்பரிசைப் பெறவில்லை. அமெரிக்காவின் தேசிய .அறிவியல் உயர்கல்விக்கழகம், தேசிய பொறியியல் உயர்கல்விக்கழகம் ( National Academies of Science and Engineering) ஆகிய இரண்டிலும் உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார் . 1966 இல் ஆலிவர் இ. பக்லி பரிசும் (Oliver E. Buckley Prize) 1983/84 இல் வுல்ஃவ் பரிசும், 1987 இல் ஜப்பான் பரிசும் பெற்றார். பல பல்கலைக்கழகங்கள் கௌரவ (பெருமை) முனைவர் பட்டம் அளித்துப் பெருமைப் படுத்தின. அவற்றுள் கடைசியாக 2002 இல் கனடாவில் வான்கூவரில் உள்ள சைமன் பிரேசர் பல்கலைக்கழம் பெருமை முனைவர் பட்டம் அளித்தது.
மைமான் சிஸ்டெமிக் மாஸ்டோசைட்டோசிஸ் (systemic mastocytosis) நிலையால் மே 5, 2007 இல் கனடாவில் உள்ள வான்கூவரில் இறந்தார். அங்கு இவர் தன் மனைவியுடன் வாழ்ந்திருந்தார்.

நன்றி:விக்கி



Post Comment


4 comments:

குறையொன்றுமில்லை. said...

உங்களின் பதிவில் நிரைய விஷயங்கள் தெரிந்துகொள்ளமுடிகிரது.

டிலீப் said...

//Lakshmi said...
உங்களின் பதிவில் நிரைய விஷயங்கள் தெரிந்துகொள்ளமுடிகிரது//

நன்றி அம்மா ....
உங்கள் கருத்துக்கள் மூலமான ஊக்கமே என்னை இன்னும் எழுத தூண்டுகிறது

Harini Resh said...

அருமையான பதிவு நண்பரே
உங்கள் பதிவுகள் அறிவுத்தேடல்களுக்கு விருந்தாக வருகிறது, வாழ்த்துக்கள் :)

டிலீப் said...

//அருமையான பதிவு நண்பரே
உங்கள் பதிவுகள் அறிவுத்தேடல்களுக்கு விருந்தாக வருகிறது, வாழ்த்துக்கள் :)//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஹரினி

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.