அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube


Kumar Sangakkara is delighted after Shane Watson is adjudged leg before


இலங்கை அணி முதல் தடவையாக அவுஸ்திரேலியாவில் தொடர் ஒன்றை வென்றுள்ளது.இன்று சிட்னியில் நடைபெற்ற இலங்கை அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி டக்வத்லுவிஸ் முறைபடி 29 ரன்களால் வெற்றியீட்டியது.நாணய சூழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் தூடுப்படுத்தாட தீர்மானித்தது.அதன் படி களமிறங்கிய தரங்க டில்ஷான் இலங்கை அணிக்கு சிறந்த ஆரம்பத்தை ஏற்படுத்தி கொடுத்தனர்.


ஆரம்ப விக்கெட்டுக்கான இணைப்பாட்டம் 98 ஆக இருந்த போது டில்ஷான் எல்பி டபியுவில் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்து செல்ல அதன் பிறகு வந்த மஹேலவும் வந்த வேகத்தில் ஆட்டமிழந்து செல்ல இலங்கை அணி இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. 


Upul Tharanga shows his style with a pull shot

அதன் பிறகு வந்த அணி தலைவர் சங்கக்கார தரங்கவுடன் இணைந்து அணியின் ஒட்டங்களை அதிகரிக்க செய்தனர்.இலங்கை அணி 213  ரன்கள் எடுத்திருந்த வேளை ஆட்டத்துக்கு மழையால் குறுக்கிடு ஏற்பட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டு அவுஸ்திரேலியா அணிக்கு 39 ஓவர்களில் 244 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.


Nuwan Kulasekara is ecstatic after bowling Brad Haddin


அதன் படி களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் ஆரம்பத்திலே ஆட்டம் கண்டது.வாட்சன் கொஞ்சம் நிலைத்து ஆடினாலும் அவராலும் களத்தில் நிலைத்து நிற்க முடியவில்லை வாட்சன் 40 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க முக்கிய தருணங்களில் அவுஸ்திரேலியா அணி தனது விக்கெட்களை இழக்க இறுதியில் 210 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து தொடரை பறிகொடுத்தது.


ஆட்டமிழக்காமல் 86 ஓட்டங்களை எடுத்த உபுல் தரங்க ஆட்டத்தின் நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.


மூன்றாவது ஒரு நாள் போட்டி ஞாயிற்றுகிழமை பிரிஸ்பனில் நடைபெறவுள்ளதுPost Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.