அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

முதல் ஆதி மனிதன் ஒரு பெண் - 2
ஆதி மனிதன் ஒரு பெண் என்பதை பற்றி கடந்த பதிவில் பார்த்தோம் அதன் தொடர்ச்சியை இப் பதிவில் பார்ப்போம்.


கி.மு ரொம்ப ரொம்ப பின்னோக்கி போனால் மனிதனுக்கும் குரங்குகளுக்கும் ஒரே முன்னோர்தான் என்பது தெரிய வருகின்றது. அந்த முன்னோரிடமிருந்து இருகிளைகள் பிரிகின்றன.ஒன்று குரங்கு வகைகள் இன்னொன்று மனித வகைகள்.
குரங்குகளில் பரிணாம வளர்ச்சி அடைந்து ஒரு பிரிவு என்று அழைக்கப்படும் குரங்குகள்.இவை நாலு வகை கிப்பன் குரங்கு ( சாகிற வரை ஏகபத்தினி ) , ,ஓராங் உடான் குரங்கு (தனிமையாக வாழ்ந்து அவ்வப்போது பெண்ணைத் தேடும் சமியார் டைப்), கொரில்லா ( அரசர்கள் அரசியல்வாதிகள் மாதிலி அந்தப்புரம் வைத்துக்கொள்கிறவர்), மற்றும் சிம்பன்ஸி (காஸனோவா வகை)
குரங்குகளை போலவே மனித இனத்திலும் பலவிதமான மனித வகையினர் உலகில் நடமாடினார்கள்.மற்ற மனித இனங்கள் அழிந்து (அது தனி வரலாறு ) மிச்சமிருந்தது.இரண்டு வகையினர்தான்.ஒன்று நாம் மற்றொன்று நியாண்டர்தால் மனிதன்.


ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ( இப்போது கொரில்லாவும் சிம்பன்ஸியும் காட்டில் வசிப்பது போல) மனிதனும் நியாண்டர்தால் மனிதனும் சமத்துவமாக வாழ்ந்து வந்தார்கள். நியாண்டர்தால் குடும்பத்தினர் தனியாக வாழ்ந்தார்கள்.அவர்களுக்கு தீமூட்டத் தெரிந்திருந்தது.வேட்டையாடி இறைச்சியை சுடவைத்து தின்றார்கள்.கொல்லப்பட்ட விலங்குகளின் தோல்களை உரித்தெடுத்து உடம்பில் சுற்றிக் கொண்டார்கள்.இறந்தவர்களுக்கு பள்ளம் தோண்டி மிகுந்த மரியாதையுடன் புதைத்து கலங்கினார்கள்.கூடவே அந்த உடல் மீது பூக்களை தூவினார்கள்.


‘க்ரோமேக்னன்’ என்று அழைக்கப்பட்ட இன்னொரு இனம்தான் நாம்.இந்த வகை மனிதர்கள் பல்கிப் பெருகியவுடன் நியாண்டர்தால் மனித இனம் சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோனது.இதற்கான உம்மை காரணங்கள் தெரியவில்லை.இரு மனித இனங்களுக்கும் இடையே சண்டை மூண்டு இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.


ஆனால் மனித உடலில் நியாண்டர்தால் ஜீன் இல்லை.உடற்கூறுப்படி க்ரோமேக்னன் மனிதன்தான் ‘ஹோமோஸேபியன்’ என்று அழைக்கப்படும் இன்றைய மனிதன்.(‘ஹோமேர்’ என்றால் மனித ‘ஸேபியன்ஸ்’ என்றால் புத்திசாலித்தனமான ) நாமே வைத்துக்கொண்ட பெயர்தான்.
நம்மைவிட புத்திசாலித்தனம் குறைந்த நியாண்டர்தால் மனிதர்களை ஒட்டுமொத்தமாக வேட்டையாடி அழித்தது நாம்தான் என்கிறார்கள் சில ஆராச்சியாளர்கள். 


க்ரோமேக்னன் என்கிற மனித இனம் தனியாகப் பிரிந்து உருவாக வழிவகுத்த ஆப்பிரிக்க ஏவாள்தான்.அந்த மலைச்சரிவில் நடந்து போனவள்.


....முற்றும்...

நன்றி:மதன்


Post Comment


10 comments:

Harini Nathan said...

வரலாறு எல்லாம் தேடி போடுறீங்க,
நல்ல விடயம் வாழ்த்துக்கள் டிலீப் :)

டிலீப் said...

//Harini Nathan said...
வரலாறு எல்லாம் தேடி போடுறீங்க,
நல்ல விடயம் வாழ்த்துக்கள் டிலீப் :)//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஹரிணி

ம.தி.சுதா said...

டிலீப் நானும் நீரும் தான் அதியானவர் என்று நினைத்திரந்தேன் அது பொய் போலுள்ளதே...

டிலீப் said...

//ம.தி.சுதா said...
டிலீப் நானும் நீரும் தான் அதியானவர் என்று நினைத்திரந்தேன் அது பொய் போலுள்ளதே...//

ஹி...ஹி.... ஆம் மதி
லேடிஸ் 1st ... இதுதான்

philosophy prabhakaran said...

பதிவும் நீங்கள் அதற்கு பொருத்தமாக இணைத்துள்ள படங்களும் புதுமையாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது...

ஹரிஸ் said...

//நம்மைவிட புத்திசாலித்தனம் குறைந்த நியாண்டர்தால் மனிதர்களை ஒட்டுமொத்தமாக வேட்டையாடி அழித்தது நாம்தான் என்கிறார்கள் சில ஆராச்சியாளர்கள். //

ஆரம்பத்துல இருந்து இப்ப வரை இந்த இனஅழிப்பு தொடருது..

டிலீப் said...

//philosophy prabhakaran said...
பதிவும் நீங்கள் அதற்கு பொருத்தமாக இணைத்துள்ள படங்களும் புதுமையாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது.//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பா

டிலீப் said...

//ஹரிஸ் said...
//நம்மைவிட புத்திசாலித்தனம் குறைந்த நியாண்டர்தால் மனிதர்களை ஒட்டுமொத்தமாக வேட்டையாடி அழித்தது நாம்தான் என்கிறார்கள் சில ஆராச்சியாளர்கள். //

ஆரம்பத்துல இருந்து இப்ப வரை இந்த இனஅழிப்பு தொடருது.//

ஆம் நண்பா மனிதன் எதைதான் விட்டுவைக்கவில்லை தனக்கு ஒரு காரியம் ஆக வேண்டுமென்றால் மற்றவனை அழித்தாவது அதை சாதிக்க வேண்டும் என்று நினைப்பவன்.
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஹரிஸ்

Lakshmi said...

வரலாறு எlல்லாம் படிப்பது சுகம்.

டிலீப் said...

//Lakshmi said...
வரலாறு எlல்லாம் படிப்பது சுகம்//

கட்டாயம் நாம் வரலாறுகளை தெரிந்து வைத்திருக்கவேண்டும்.
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி லகஷ்மி அம்மா

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.