
தமிழ் சினிமா துறையில் நாளுக்கு நாள் புதிய பாடக, பாடகி வந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.அதில் பாடகர் கார்த்திக் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு ,இந்தி மற்றும் மலையாளத்தில் இசை துறையில் பாடல்களின் மூலம் புரட்சியை ஏற்படுத்தி வருகிறார்.
கார்த்திக்கின் பின்னணினை சற்று பார்ப்போம்.
கார்த்திக் (பிறப்பு 7 நவம்பர் 1980) சென்னைapy; gpwe;jhh;.ஆரம்பகாலத்தில் துணைப்பாடகராக ஏ.ஆர்.ரகுமானிடம் பணிபுரிந்த வந்த கார்த்திக் பின்னர் அவர் இசையமைப்பில் பல பாடல்களைப் பாடத் தொடங்கினார்.
பின்னர் பல இசையமைப்பாளர்களும் விரும்பும் பாடகராக தமிழ், இந்தி, தெலுங்கு,மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய பல மொழிகளில் பாடியுள்ளார். பாய்ஸ் படத்தில் அவர் பாடிய "எனக்கொரு கெர்ல்பிரண்ட் வேணுமடா" என்ற பாடலும் கஜினியில் "ஒரு மாலை" பாடலும் பெருவெற்றி கண்டன.

தெலுங்கு திரையுலகிலும் கொத்தபங்காரு லோகம் மற்றும் ஹாப்பிடேஸ் படங்களில் அவரது பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.வாரணம் ஆயிரம் படத்தில் அவர் கானா வகையில் பாடிய "அவ என்ன" என்ற பாடலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தி மொழிமாற்றம் செய்து வெளியான கஜினி படத்தில் அவர் பாடிய "பெக்கா" பாடல் மூலம் உலகளவில் அறியப்பட்டார்.
இசையமைப்பாளர் ஆகிறார் பாடகர் கார்த்திக்! |
ஜி.வி.பிரகாஷ்குமாரை வெயில், அங்காடித்தெரு படங்களில் பயன்படுத்திய வசந்தபாலன் தனது புதிய படத்துக்கு புதிய இசையமைப்பாளரை அறிமுகப்படுத்துகிறார். அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கும் படத்தை இயக்க வசந்தபாலன் ஒப்புக் கொண்டிருக்கிறார். பசுபதி, ஆதி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு இசையமைக்க வசந்தபாலன் தேர்வு செய்திருப்பது பாடகர் கார்த்திக்கை. சமீபத்தில் வெளிவந்த நல்ல பாடல்களில் எண்பது சதவீதம் கார்த்திக் பாடியவை. பாடல் பதிவு, கலை நிகழ்ச்சிகள் என்று பிஸியாக இருந்தாலும் கார்த்திக்கின் அல்டிமேட் விருப்பம் இசையமைப்பது. தனியாக ஆல்பம் போடும் முயற்சியில் இருந்தவருக்கு கிடைத்திருக்கும் எதிர்பாராத ஜாக்பாட் வசந்தபாலனின் படம் |
தற்போழுது புதிதாக பாடியிருக்கும்; பாடல் “என் காதல் நீ தானே” எப்படி எனக்குள் வந்தாய் என்ற படத்துக்கு டனியலின் இசையில்.இவ் பாடலை கேட்கும் போது எமக்குள்ளே ஒரு காதல் உணர்ச்சி வருவது போல் இருக்கும்.
என் காதல் நீதானே என் கடவுளும் நீதானே என் கருவில் நான் சுமக்கும் அந்த உயிரும் நீதானே…….
அவ்பாடலில் வரும் வயலின் இசை எம் நரம்புகளை என்னவோ செய்வது போல் இருக்கும்
4 comments:
தகவலுக்கு நன்றிகள்
//மகாதேவன்-V.K said...
தகவலுக்கு நன்றிகள்//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி தேவன்
என்னையும் கூட கவர்ந்த பாடகர் இவர் தான் டிலீப்.
இவ்வளவு திறமை இருந்தும் அவரின் எளிமை எனக்கு பிடித்த ஒன்று :
//Harini Nathan said...
என்னையும் கூட கவர்ந்த பாடகர் இவர் தான் டிலீப்.
இவ்வளவு திறமை இருந்தும் அவரின் எளிமை எனக்கு பிடித்த ஒன்று//
அவரது குரலில் மற்றவர்களை ஈர்க்கும் காந்த சக்தி இருக்கும் போல...
நீங்கள் கூறியது சரி ஹரிணி மிகவும் எளிமை குணம் உள்ளவர்
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஹரிணி
Post a Comment