என்கார்ட்டா என்ûஸக்ளோபீடியாவை நிறையப்பேர் அறிந்திருப்பீர்.
இதில் இந்தியா பற்றிய ஒரு செய்தி வந்துள்ளது.
ஆரியபட்டர் என்ற இந்திய விஞ்ஞானி சுமார் 3500 வருடங்களுக்கு முன்பே பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியன் பூமியைச் சுற்றவில்லை என்று எழுதியிருந்தார். அதற்கு அவர் எழுதியுள்ள உதாரணம்:
படகில் செல்லும்போது கரையிலுள்ள எல்லாம் நகர்வது போல் தோன்றும். (நமக்கு ரயிலில் போகும்போது தோன்றுவது போல) இந்த உதாரணத்தை வைத்துத்தான் சூரியன் நம் கண்களுக்கு நகர்வது போன்ற பிரமை ஏற்படுவதைக் கூறியிருக்கிறார்.)
பொதுவாக இந்தியாவின் கண்டுபிடிப்புகள் மெல்ல அரபு நாடுகள் வழியாக மேலைநாடுகளுக்குச் சென்றன. அப்படி இங்கு வந்த அராபியர்கள் விஷயங்களைச் சேகரித்தபோது பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்ற ஏட்டுப் பகுதியை துரதிர்ஷ்டவசமாக தவற விட்டுவிட்டார்கள்.
அதனால் ஆரியபட்டருக்குப் பிறகு சுமார் 1500 வருடங்களுக்குப் பிறகுதான் கலிலியோ இந்த உண்மையைக் கண்டுபிடித்து உலகுக்கு எடுத்துச் சொன்னார். இது முன்பே தெரியாமல் போனது உலக இழப்பு என்று என்கார்ட்டா கூறுகிறது.
0 comments:
Post a Comment