அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

Jacques Kallis and Robin Uthappa walk of after completing the win

கயானா அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' போட்டியில், "ஆல்-ரவுண்டராக' காலிஸ் அசத்த, அனில் கும்ளே தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென் ஆப்ரிக்காவில், சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் நேற்று நடந்த "பி' பிரிவு லீக் போட்டியில் அனில் கும்ளே தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி, வெஸ்ட் இண்டீசின் கயானா அணியை எதிர்கொண்டது. "டாஸ்' வென்ற பெங்களூரு அணி கேப்டன் கும்ளே, "பீல்டிங்' தேர்வு செய்தார்.

காலிஸ் துல்லியம்:
முதலில் பேட் செய்த கயானா அணிக்கு டவ்லின் (10), சாட்டர்கூன் (18) ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. அடுத்து வந்த கேப்டன் சர்வான் (8), டியோனரின் (13) நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பின்னர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்ன்வெல் (30) ஓரளவு ஆறுதல் அளித்தார். அடுத்து வந்த ராய்ஸ்டோன் (5), ஜொனாதன் போ (1), கிறிஸ்டியன் (0), குஷ் (5), கிரான்டன் (0) ஒற்றைய இலக்க ரன்களில் வெளியேறி ஏமாற்றினர். கயானா அணி 20 ஓவரில் 103 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது. பெங்களூரு அணி சார்பில் காலிஸ் 3, பிரவீண் குமார் 2, ஸ்டைன், கும்ளே, தோஷி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

சூப்பர் ஜோடி:
சுலப இலக்கை விரட்டிய பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு காலிஸ், டிராவிட் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்த போது டிராவிட் (33) அவுட்டானார். பின்னர் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய காலிஸ் (43*), ராபின் உத்தப்பா (25*) ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. பெங்களூரு அணி 12.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங், பவுலிங்கில் அசத்திய பெங்களூரு அணியின் காலிஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஸ்கோர் போர்டு

கயானா


டவ்லின் (கே)ஸ்டைன் (ப)பிரவீண்    10(17)

சாட்டர்கூன் -ரன் அவுட்-    18(17)
சர்வான் (ப)காலிஸ்    7(3)
டியோனரின் (கே)டெய்லர் (ப)கும்ளே    13(19)
பார்ன்வெல் (கே)<உத்தப்பா (ப)ஸ்டைன்    30(35)
ராய்ஸ்டோன் (கே)ஸ்டைன் (ப)தோஷி    5(10)
ஜோனாதன் (கே)உத்தப்பா (ப)காலிஸ்    1(6)
கிறிஸ்டியன் (கே)பிரவீண் (ப)காலிஸ்    0(2)
குஷ் (கே)கும்ளே (ப)பிரவீண்    5(8)
கிரான்டன் -ரன் அவுட்-    0(3)
பி÷ஷா -அவுட் இல்லை-    0(0)
உதிரிகள்    14


மொத்தம் (20 ஓவரில், "ஆல்-அவுட்')    103
விக்கெட் வீழ்ச்சி: 1-17(டவ்லின்), 2-34(சர்வான்), 3-42(சாட்டர்கூன்), 4-59(டியோனரின்), 5-70(ராய்ஸ்டோன்), 6-75(ஜோனாதன்), 7-75(கிறிஸ்டியன்), 8-92(குஷ்), 9-103(கிரான்டன்), 10-103(பார்ன்வெல்).
பந்துவீச்ச: பிரவீண் 4-0-22-2, ஸ்டைன் 4-0-23-1, காலிஸ் 4-1-16-3, கும்ளே 4-0-10-1, தோஷி 2-0-12-1, அகில் 2-0-10-0.


பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்


காலிஸ் -அவுட் இல்லை-    43(32)

டிராவிட் (ப)ராய்ஸ்டோன்    33(34)
உத்தப்பா -அவுட் இல்லை-    25(8)
உதிரிகள்    5
மொத்தம் (12.2 ஓவரில், ஒரு விக்.,)    106
விக்கெட் வீழ்ச்சி: 1-78 (டிராவிட்).
பந்துவீச்சு: குஷ் 3-0-19-0, கிரான்டன் 2-0-20-0, பார்ன்வெல் 4-0-36-0, பி÷ஷா 2-0-19-0, ராய்ஸ்டோன் 1.2-0-12-1.

Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.