பிளக்பெரி கைத்தொலைபேசிகளின் தயாரிப்பு நிறுவனமான ஆர்.ஐ.எம் எனப்படும் 'ரீசேர்ச்' இன் மோசன் தனது டெப்லட் ரக கணனியை அடுத்த வாரளமளவில் வெளியிடவுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
இது 'பிளக் பேட்' என பெயரிடப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெறும் தகவல்களுக்கமைய மேற்படி கணினியானது முற்றும் புதியதொரு இயங்குதளத்தினை கொண்டு இயங்கவுள்ளது.
இவ் இயங்குதளமானது ஃக்வ்.என்.எக்ஸ் மென்பொருளாக இருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது.
7 அங்குல தொடுதிரை, 2 கெமராக்கள், புளூடூத், புரோட்பேன்ட், 1 ஜிகா ஹேர்ட்ஸ் புரசஸர் என்பனவற்றை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே அப்பிள் நிறுவனத்தின் 'டெப்லட்' ரக கணினியான ஐபேட் மிகவும் பிரபலமடைந்துள்ளது.
சம்சுங், டொஷிபா மற்றும் எச்பி நிறுவனங்கள் தங்கள் டெப்லட் ரக கணினியை வெளியிடவுள்ளன.
இதன் காரணமாக டெப்லட் கணினிச் சந்தையில் கடும் போட்டி நிலவும் என எதிப்பார்க்கப்படுகின்றது.
ஆனால் இது தொடர்பாக ஆர்.ஐ.எம் கருத்தெதையும் தெரிவிக்கவில்லை.
0 comments:
Post a Comment