அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

சச்சின் அணிக்கு மீண்டும் அடி

Aaron O'Brien exults after bowling Sachin Tendulkar

சாம்பியன்ஸ் லீக் தொடரில் சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது தோல்வியை சந்தித்தது. நேற்று நடந்த பரபரப்பான லீக் போட்டியில் தெற்கு ஆஸ்திரேலியா ரெட் பேக்ஸ் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.


இதையடுத்து அரையிறுதி வாய்ப்பை அனேகமாக இழக்கிறது. மும்பை வீரர் சவுரப் திவாரியின் அதிரடி ஆட்டம் வீணானது.
சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. நேற்று டர்பனில் நடந்த "பி' பிரிவு லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், தெற்கு ஆஸ்திரேலியா ரெட் பேக்ஸ் அணிகள் மோதின. முதல் போட்டியில் லயன்ஸ் அணியிடம் வீழ்ந்த மும்பை அணி, கட்டாய வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கியது. டாஸ் வென்ற மும்பை கேப்டன் சச்சின், பேட்டிங் தேர்வு செய்தார்.

துவக்கம் மோசம்:மும்பை அணி துவக்கத்தில் திணறியது. ஷிகர் திவான் 2 ரன்களுக்கு வெளியேறினார். டேனியல் கிறிஸ்டியன் வீசிய 5வது ஓவரில் சச்சின் ஒரு சிக்சர் 2 பவுண்டரி விளாசினார். இம்மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. ஓ'பிரையன் பந்துவீச்சை இறங்கி வந்து அடிக்க முயன்ற சச்சின்(20) பரிதாபமாக போல்டானார். டுமினி(3) சொதப்பினார். அப்போது 7.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 47 ரன்கள் எடுத்து திணறியது.போலார்டு அதிரடி:இதற்கு பின் ராயுடு, சவுரப் திவாரி இணைந்து பொறுப்பாக ஆடினர். ராயுடு 38 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்து போலார்டு கைகொடுக்க, சவுரப் திவாரி அதிரடியாக ரன் சேர்த்தார். தெற்கு ஆஸ்திரேலியா பந்துவீச்சை சிதறடித்த இவர்கள் 5வது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்தனர். திவாரி 25 பந்துகளில் 44 ரன்கள்(4 சிக்சர், 1 பவுண்டரி) விளாசினார். அசத்தல் ஆட்டத்தை தொடர்ந்த போலார்டு 36 ரன்களுக்கு(3 சிக்சர், 2 பவுண்டரி) அவுட்டானார். பிராவோ 22 ரன்கள் எடுத்தார். கடைசி 10 ஓவர்களில் 122 ரன்கள எடுக்கப்பட்டன. மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்தது.

Michael Klinger put on 112 for the first wicket with Daniel Harris


அசத்தல் துவக்கம்:
சவாலான இலக்கை விரட்டிய தெற்கு ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் மைக்கேல் கிலிங்கர், டேனியல் ஹாரிஸ் இணைந்து அபார துவக்கம் தந்தனர். மும்பை அணியின் சொதப்பலான பீல்டிங்கை பயன்படுத்தி விவேகமாக ரன் சேர்த்தனர். பிராவோ வீசிய 11வது ஓவரில் கிலிங்கர் 2 சிக்சர், ஹாரிஸ் ஒரு பவுண்டரி அடிக்க, மொத்தம் 18 ரன்கள் எடுக்கப்பட்டன. போலார்டு ஓவரில் ஹாரிஸ் அடுத்தடுத்து 2 சிக்சர் அடித்து அசத்தினார். முதல் விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்த நிலையில், ஹாரிஸ்(56)வெளியேறினார். மலிங்கா வேகத்தில் கிலிங்கர்(50) வீழ்ந்தார். இதற்கு பின் வந்தவர்கள் ஓரளவுக்கு கைகொடுத்தனர். 

6 பந்தில் 11 ரன்:கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டன. ஹர்பஜன் மோசமாக பந்துவீசினார். முதல் பந்தில் கூப்பர் 2 ரன் எடுத்தார். 2வது பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்தார். 3வது பந்தில் பவுண்டரி அடித்த கூப்பர், வெற்றியை உறுதி செய்தார். தெற்கு ஆஸ்திரேலிய அணி 19.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.
அபாரமாக ஆடிய டேனியல் ஹாரிஸ் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
Cameron Borgas and Tom Cooper smashed 24 off the last seven balls to see South Australia home

ஒரே ஓவரில் 25 ரன்
மும்பை இந்தியன்ஸ் வீரர் சவுரவ் திவாரி நேற்று சிக்சர் மன்னனாக ஜொலித்தார். ஓ'பிரையன் வீசிய 16வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தில் 2 ரன். பின் "ஹாட்ரிக்' சிக்சர் விளாசினார். கடைசி பந்தில் ஒரு ரன் சேர்த்து, மொத்தம் 25 ரன் எடுத்து அசத்தினார்.
----------------
பீல்டிங் சொதப்பல்
மும்பை அணியின் பீல்டிங் படுமோசமாக இருந்தது. இது தான் தோல்விக்கு வித்திட்டது. கேப்டன் சச்சின், சவுரப் திவாரி சுலப "கேட்ச்' வாய்ப்புகளை நழுவ விட்டனர். ரன் அவுட் வாய்ப்புகளையும் கோட்டை விட்டனர். பந்தை "ஓவர் த்ரோ' செய்து வீணாக ரன்களை வழங்கினர். இதனை பார்த்து பீல்டிங் பயிற்சியாளர் ஜான்டி ரோட்ஸ் நொந்து போனார்.


 ஸ்கோர் போர்டு

மும்பை இந்தியன்ஸ்
தவான்(கே)மனுவ்(ப)பட்லாண்ட் 2(7)
சச்சின்(ப)ஓ'பிரையன் 20(17)
ராயுடு(கே)ஹாரிஸ்(ப)பெய்லி 38(32)
டுமினி(கே)+(ப)ஓ'பிரையன் 3(6)
திவாரி(கே)பெர்குசன்(ப)டெய்ட் 44(25)
போலார்டு(கே)பெர்குசன்(ப)கிறிஸ்டியன் 36(21)
பிராவோ-ரன் அவுட்-(பட்லாண்ட்/மனுவ்) 22(12)
ஹர்பஜன்-அவுட் இல்லை- 0(0)
ஜாகிர்-அவுட் இல்லை- 0(1)
உதிரிகள் 15
மொத்தம்(20 ஓவரில் 7 விக்.,) 180
விக்கெட் வீழ்ச்சி: 1-4(தவான்), 2-35(சச்சின்), 3-47(டுமினி), 4-79(ராயுடு), 5-137(திவாரி), 6-170(போலார்டு), 7-179(பிராவோ).
பந்துவீச்சு: டெய்ட் 4-0-27-1, பட்லாண்ட் 4-0-24-1, கிறிஸ்டியன் 4-0-37-1, ஓ'பிரையன் 4-0-49-2, பெய்லி 3-0-30-1, ஹாரிஸ் 1-0-9-0.


தெற்கு ஆஸ்திரேலியா
கிலிங்கர்(கே)பிராவோ(ப)மலிங்கா 50(48)
ஹாரிஸ்(கே)டுமினி(ப)முர்டசா 56(37)
மனுவ்(கே)திவாரி(ப)முர்டசா 12(7)
பெர்குசன்(கே)முர்டசா(ப)மலிங்கா 6(5)
கிறிஸ்டியன்(கே)திவாரி(ப)ஜாகிர் 16(10)
போர்காஸ்-அவுட் இல்லை- 14(5)
கூப்பர்-அவுட் இல்லை- 19(5)
உதிரிகள் 9
மொத்தம்(19.3 ஓவரில் 5 விக்.,) 182
விக்கெட் வீழ்ச்சி: 1-112(ஹாரிஸ்), 2-116(கிலிங்கர்), 3-127(மனுவ்), 4-140(பெர்குசன்), 5-158(கிறிஸ்டியன்).
பந்துவீச்சு: ஜாகிர் 4-0-33-1, மலிங்கா 4-0-22-2, முர்டசா 3-0-29-2, பிராவோ 4-0-46-0, ஹர்பஜன் 3.3-0-31-0, போலார்டு 1-0-16-0

.

Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.